வீதிக்கு வா...என் தோழி...!!!!!

பிச்சையும் பாலியல் 
தொழிலும் 
நம் விதியில்லை... 
போராடினால் 
நமக்கு இழிவில்லை.. 
அதனால் 
போராடுவோம் 
வா....என் தோழி...!
                                                                                                         
 கண்ணீரிலும்... 
கவலையிலும்...
 எத்தனை நாள் உழல்வது..! 
அதை துரத்தி 
அழிக்க வீதிக்கு 
வா என் தோழி..!

 ஒன்பதா நாம்...!
 அலியா நாம்...! 
உஸ்ஸா...நாம்....! 
இல்லை....! இல்லை ! 
மாணுடம் நாம்...! 

 நமக்கென ஆசையும் 
நமக்கென லட்சியமும் இருக்கிறது... 
அதை மறித்து 
தீண்டாமையின் கெட்டிப் பாறை 
அதோ.... 
இச்சமூகத்தில் உயர்ந்து நிற்கிறது...! 
அதை சிலையாய் செதுக்கிட 
சுத்தியும் உளியாக.. 
அறிவையும்...முழக்கத்தையும் 
ஓங்கி ஒலித்திடு என் தோழி..!

 குடும்பம் துரத்தி சமூகம் விரட்டிய போதிலும் 
பகை கொள்ளாமல் 
மானுடத்தை நேசிக்கும் 
அற்புத உயிரிகள் நாம்...! 
இம்மண்ணின் மைந்தர்கள் நாம்..! 
அதனால் போராட 
வீதிக்கு வா....என் தோழி...! 

 அதோ... 
நாடாளுமன்றத்திலே....
 நம் உரிமை மசோதா காத்துக்கிடக்கிறது... 
அதை பூக்கச் செய்திட.. 
வீதியில் முழங்குவோம் 
வா...என் தோழி..! 

 பெறுவதற்கு....! 
அதோ...! 
நம் விடுதலை நமக்காக காத்துக் கிடக்கிறது 
விடுதலை சுவைத்திட 
வீதிக்கு வா என் தோழி..!




....மதிப்பிற்குரிய மங்கை பானு

Comments

Post a Comment

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

மாற்றுப்பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை மசோதா -2016