ரோம் கத்தோலிக்க மடாதிபதி பிரான்ஸிஸ் போப் அவர்களுக்கு...
நேற்றைய தினம் மாற்றுப்பாலினத்தவரைபற்றி(திருநர்) கருத்து கூறுகையில் "தாங்கள் பாலினத்தை தாங்களே தீர்மானித்துகொள்ளகூடாது" என்றும்"கடவுள் படைத்த உருவத்தை மாற்றக்கூடாது என்றும் கூறியிருந்தீர். இது போன்று இறுகிக்கெட்டிதட்டிப்போன கருத்தியலை கடவுளின் பெயரால் தாங்கள் உதிர்ததைக் கண்டு வியப்பேதுமில்லை எனக்கு காரணம் நீங்கள் கொண்டிருக்கும் கருத்தியல் மிகவும் பழையது .அதை உதிர்க்கும் உங்கள் உருவம் மட்டுமே புதியது. "ஆணுடலினுள் முரண்படும் பெண் உளத்தியல் துன்பத்திலிருந்து மீள அறுவைசிகிச்சையை நேசித்து உடலளவிலும் பெண்ணாய் உறுமாறுகிறோம் என உலகின் முன் நின்று நாங்கள் உரத்து முழங்கிய பிறகும் தாங்களால் உள்வாங்க முடியாதது ஏன் என்ற மதசூட்சமத்தை புரிந்துகொள்ளமுடியாதவளல்ல நான் . அறுவைசிகிச்சையின் கர்த்தாவாக இன்று கருதப்படுகின்ற 16ஆம் நூற்றாண்டு ஜெர்மனியின் ஆன்றியஸ் சோசியலியஸ் அவர்கள் எழுதிய மனித உடல் கட்டமைப்பியல் (The Fabrics of Human Body) என்ற நூலை கிருத்துவ மதத்திற்கு எதிரானது என்பதாக கூறி அவர் கையாலேயே அம்மாபெரும் நூலை கொளுத்திய கொரூரத்தை புரிந்த முகாமைச்சேர்ந...