மாற்றுப்பாலினத்தோர் இயற்கையே!!!!
தான் இன்னவென்ன்று அடையாளப் படுத்திக்கொள்வது உயிரியின் இயல்பு.தான் இதுதான் என்று வெளிப்படுத்துதலில் எந்த உயிரினமும் சமரசம் செய்து கொள்வதில்லை.
ஓர் உயிரிலிருந்து மனித உயிரி வரை இது பொருந்தும்.
இயற்கையிலிருந்துதான் உயிரிகள் உருவாகின்றன.
இயற்கையோடு இயைந்து இருக்கத்தான் அவை தன்னை உருவகப்படுத்திக்கொள்கின்றன.
பச்சைக்கிளி பச்சையாக இருப்பதற்கும் குரங்கு நிமிர்ந்து மனிதனாக மாறியதற்கும் இயற்கை வீதியில் தன்னை உருவகப்படுத்திக்கொண்டு உலாவருகின்றன .
இயற்கை ,உயிர்,அதன் வளர்ச்சி என்கிற புரிதலோடு திருநங்கை,திருநம்பி என்கிற எங்களின் பாலினத்தை ஒருவர் அணுகினால் அவர் நிச்சயம் இயற்கை படைப்புதான் நாங்கள் என்கிற உண்மையை தொடமுடியும்.
Comments
Post a Comment