Posts

Showing posts with the label RenganayakiRettaimalaisenivasan

காதலர் தினம்....! Valentines Day..!

Image
காதலர் தினம். கொண்டாட்டங்கள் என்பது மனித உறவுகள் கூடி மகிழ்வை சுவைக்கும் ஓர் ஏற்பாடே…!அந்தந்த நிகழ்விற்கு ஏற்ப அதற்கொரு பொருத்தமான இயற்கை,சமூகம்,வாழ்வு,வரலாற்று குறியீடுகளை முன்னிருத்தி கொண்டாட்டங்கள் கட்டமைக்கப்படுகின்றன. வாழ்வும் அதன் வளர்ச்சியும் சூழலும் அதன் பாதுகாப்பும் வரலாறும் அதன் போற்றுதலும் அத்தனைக்கும் இங்கே கொண்டாட்டங்கள் கொட்டிக்கிடக்கும் போது காதலர்களுக்கு மட்டும் ஏன் இல்லை? என காதலர்கள் இத்தேசத்தைப் பார்த்து வினா எழுப்ப, இது அகமன முறை அடிப்படையிலான சாதிய தேசம்.இங்கே புறமனத்தில் காதல் புரிவோர் கொல்லப்படுவர்..! என இத்தேசம் பதிலுரைக்க, அப்படியா…..! என காதலர்கள்  அருவெறுப்போடு வியந்து காற்றில் குழைந்து வானில் பறந்து ரோமில் இறங்கி காதலர்களை இணைத்ததனால் இரண்டாம் சீசரால் கொல்லப்பட்ட வேலண்டைனின் இறப்பு நாளான பெப்ருவரி 14 ஐ பெயர்த்தெடுத்து தேசம் வந்து இதுவே நம் நாள்..! காதலர் நாள்…! என எங்கும் தூவினார்கள்.தூவப்பட்ட இடமெங்கும் காதலர்கள் ரோஜாக்களாய் முளைத்தார்கள்.புன்னகையால் சிறகு விரித்தார்கள்.இரு இதயங்களையும் இணைத்து ஒரே துடிப்பில் இயங்கினார்கள். உடல் கூட்டிலிருந்...