Posts

Showing posts from February, 2018

சந்தையூர் தீண்டாமை சுவர்..!Santhayur Caste Wall...!

Image
மதுரைக்கு அருகே உள்ள சந்தையூர் இன்று சண்டையூராய் காட்சித் தருகிறது . சாதியத் தீ இன்றைக்கு தலித்துகளின் மனங்களையும் பற்றிக் கொண்டு ஒரு புதிய பரிணாமத்தை உருவகப்படுத்துகிறது . ஆதிக்க சாதிகளை எதிர்த்து பறையர்கள் , தேவேந்திரர்கள் அருந்ததியர்களுக்கு இடையிலான அரசியல்   ஒற்றுமை இன்றைக்கு குலையக் காண்கிறோம் . அம்பேத்கர் நூற்றாண்டு எழுச்சிக் காலத்தில் இம்மூன்று சமூகங்களும் ஒன்றாகவே களத்தில் இருந்தன . ஆனால் இன்றோ அக்களம் குலையக் காண்கிறோம் . அதற்கான காரணங்களை சமூக பொருளியல் அடிப்படைகளை அடையாளம் காண்பதும் அவசியம் என்றே கருதுகிறேன் .. பறையர் சமூகத்திலிருந்து பிறந்த ரெட்டைமலை சீனிவாசன் அவர்களும் தேவேந்திர சமூகத்திலிருந்து பிறந்த இம்மானுவேல் சேகரன் அவர்களும் அருந்ததியர் சமூகத்திலிருந்து பிறந்த எல் . சி . குருசாமி ஜகநாதன் அவர்களும் நடத்திய அந்த போரட்டங்களிலிந்து , அவர்கள் முன் வைத்த அந்த கோரிக்கைகளிலிருந்து தற்போதைய தலித் அரசியல் களம் வேறுபட்டே இயங்குகிறது . அவர்கள் அப்போதே வைத்த கோரிக்கைகள் இன்னும் வெல்லப்படாமல