நடக்க முடியாத குதிரைக்கு சறுக்கியது சாக்கு....பி.ஜே.பி அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கொள்கைக்கு மக்கள் விரோத காங்கிரஸ் சாக்கு............


கடந்த 2014 ஏப்ரலில் இந்நாட்டின் தலையாய மன்றமாக கறுதப்படுகின்ற உச்சநீதிமன்றம் திருநங்கை,திருநம்பியருக்கு கல்வி,வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டங்களை மத்தியிலும் மாநிலங்களிலும் இயற்றுங்கள் என்று சொன்ன பிறகும்,தனிநபர் மசோதா ,திரு.திருச்சி சிவா அவர்களால் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் முன் மொழியப்பட்டு ,அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.(அதை சமூக நீதி அதிகாரமளித்தல் துறை (social justice)அமைச்சகம் காதோடு காது வைத்தாற் போல இணையத்தில் கருத்துக் கேட்டு பல மாற்றங்களை தன் விருப்பத்திற்கு மாற்றியதென்பது வேறு) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 03 ஆம் தேதி சமூக நீதி அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் திரு.தவார் காண்ட் கெலாட் “உச்ச நீதி மன்றமே இயற்றிட உத்தரவிட்ட திருநங்கை திருநம்பி மசோதா, விவாதத்திற்கு மக்களவையில் காத்திருப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் நேஷனல் ஹெரால் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்க நினைக்கிறது என்பதாகவும் கூறியிருந்தார்.ஆனால் அதன் பிறகு ஹெரால்ட் போனது,,,ரோஹித் விவகாரம் வந்தது....அது போன பிறகு கன்ஹையா குமார் கைது....இதற்கிடையில் ரியல் எஸ்டேட் மசோதா உட்பட பல மசோதாக்களை தாக்கல் செய்த பி ஜே பி அரசினால் திருநங்கை திருநம்பி மசோதா தாக்கல் செய்யப்படவில்லை என்பது இட ஒதுக்கீட்டீற்கு எதிரான-திருநங்கையர் திருநம்பியர் இட ஒதுக்கீடிற்கு எதிரான அக்கட்சி,காங்கிரஸ் மற்றும் அனைத்துக்கட்சிகள் (தி.மு.க. தவிற)கொள்கை வெளிப்படுவது உறுதியாகிறது.... இத்தகைய சமூக விரோத சக்திகளே நாடாளுமன்றத்தை நிரப்பியிருக்கும் இச்சூழலில தி்ரு.திருச்சி சிவா போன்ற ஆதரவாளர்களின் உதவியுடன் குடிமைச் சமூகத்தில் ஆதரவான கருத்தினை உருவாக்கிட வேண்டும்.குடிமைச் சமூகமும் அனைத்து திறமைகளும் தகுதிகளும் கொண்ட திருநங்கையர் திருநம்பியர் சமூகம் இடப்பங்கீடுப் பெற்றிட ஆதரவு குரல் கொடுத்து ,இந்திய சமூகம் பாலினச் சமத்துவமும் ஜனநாயகத் தன்மையும் கொண்ட சமூகமாக விளங்குவதை உறுதிப் படுத்திட முன்வர வேண்டும்...
...மதிப்பிற்குரிய மங்கை பானு
#திருநர்உரிமைமசோதா
#தனிநபர்மசோதா
#திருச்சிசிவா
#TransgenderRightsBill
#TransLivesMatter
#SinglePersonBill

Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016