Posts

Showing posts with the label கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவுகட்டுவோம்...

சாதியை ஒழிப்போம்!!கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம்!!!

Image
வாசபூக்களை கூந்தலில் சூட எம் பெண்களுக்கு பேரார்வம்மில்லை ஆம் உங்கள் மலத்தின் துற்வாடையை தோற்கடிக்காது அப்பூக்கள் வாசம். ”இந்த நாட்டிலே வர்க்கம் இருக்கிறது.அதன் பக்கத்திலே சாதியும் இருக்கிறது.இங்கே காற்றுக்கும் பாசன கால்வாய்களுக்கும்,விளையும் பூமிக்கும்,கோவிலுக்கும்,குளத்திற்கும்,பள்ளிக்கூடத்திற்கும்,ஊர் பொது இடத்திற்கும்,உண்ணும் உணவிற்கும்,குடிக்கும் தண்ணீருக்கும்,உடுத்தும் உடைக்கும்,பேசும் மொழிக்கும்,இலக்கியத்திற்கும்,கலாச்சாரத்திற்கும்,அரசிற்கும்,அதன் சட்டத்திற்கும்,நீதிக்கும்,நீதி மன்றத்திற்கும்,பிணத்திற்கும்,மயானத்திற்கும்,சாமிக்கும்,,பேய்க்கும் கூட சாதி இருக்கிறது.” என்று சாதியத்தின் இயங்கியலை தன் எழுத்தில் கோபமாய் வரைந்திருப்பார் ஆந்திர எழுத்தாளர் ஜி.கல்யாண ராவ் அவர்கள். அவரின் இந்தக் கோபக் கோவையில் ’’மனித கழிவிற்கும் சாதி இருக்கிறது’’ என்பதையும் சேர்க்க விரும்புகிறேன். இன்றும் கூட அந்த காட்சி என் மனதை விட்டு அகலவில்லை.நான் அப்போது ஐந்தாம் வகுப்புப் படிக்கிறேன்.என் சொந்த கிராமமான புதூர் பாண்டியாபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு வீடு மாறினோம்.அது ஒரு தனியார் ப...