Posts

Showing posts with the label கார்ப்ரேட் அரசியல்

தியாகத்தால் சிவந்த தூத்துக்குடி

Image
2018 மே 22.. நச்சுப் புகையைக் கக்கும் ஸ்டெர்லைட்டை எதிர்த்த, தூத்துக்குடி அதன் சுற்று வட்டார மக்களின் கோரிக்கைப் பேரணி, ரத்த வெள்ளாமாக மாற்றப்படும் என்று அனில் அகர்வாலுக்கும் அரசுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஸ்டெர்லைட் நிறுவனம் பேரணியாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பாதுகாப்புக் கேட்டு, உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை நாடியதும் நீதி மன்றம் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டதும், துப்பாக்கிச் சூட்டுக்கான கொடியதொரு முன்னேற்பாடுகளே என்பதை மக்கள் அறியாமல் தான் இருந்தார்கள். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்களை சிலந்தி வலையாக அவர்கள் முன்னரே பின்னியிருந்தார்கள். மக்களை பூச்சிகளை போல அவர்கள் லாவகமாக பிடித்து சுட்டுத் தின்ற காட்சிகளையெல்லாம் நாம் நேரடியாகவும் நேரலை வழியாகவும் பார்த்தோம்..! புற்று நோயிலிருந்து விடிவு கேட்டவர்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களை மருந்தாக கொடுக்கும் கொடூரம் அவர்களுக்கே உரியது. பாதிக்கப்பட்ட மக்களை பயங்கரவாதிகளாகவும் கலவரக்காரர்களாகவும்  சித்தரித்து நியாயம் கேட்ட மக்களை சுட்டுக் கொள்ளும் பானியும் என்றென்றும் அவர்களுக்கே உரியது.! அரசின் இ...

ஹைட்ரோ கார்பன்,மீத்தேன்.....

Image
வயலின் உயிராய் புதைந்திருக்கும் ஹைட்ரோ கார்பனை உறிஞ்செடுத்து,பின் நிலக்கரிக்காய் வயலுடலையும் வெட்டியெடுக்க இந்தியாவில் மொத்தம் 31 நிலப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெடுவாசலும் காரைக்காலும் போக மீதி அசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள் என இதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது பெரும் தொழிற்குழுமங்களோடு கூடிக் குலாவும் இந்திய அரசின் போர் அறிவிப்பு தான் `` இந்தியாவின் உழைக்கும் பெருந்திரளான மக்களும்,இயற்கை வளங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய புல்லுருவிகளால் உரிஞ்சப்படும் வரை போர் நிலைமை இன்றும் நீடிக்கிறது.எதிர்காலத்திலும் நீடிக்கும் என நாங்கள் பிரகடனம் செய்கிறோம் . உறிஞ்சுபவன் ஒரு பிரிட்டிஷ் முதலாளியாக இருக்கலாம் அல்லது அவனோடு சேர்ந்த இந்தியனாக இருக்கலாம்,அல்லது தனித்த இந்தியனாகவே இருக்கலாம்....இதனால் ஒன்றும் வேறுபாடு இல்லை. ’’ -பகத்சிங் அவரின் எழுத்தில் எத்தனை தொலைநோக்கு உள்ளடங்கியிருக்கிறது என்பதை மெய்ப்பித்துக் காட்ட அவரின் ...