Posts

Showing posts from August, 2016

To the prime minister and the leader of the central government of India, Mr. Narendra Modi

Image
LETTER To the prime minister and the leader of the central government of India, Mr. Narendra Modi , It gives us pleasure that the central government under your leadership has introduced a special bill for the protection of people like us – the transgender persons - in the parliament. Especially given that, in the early years of the 21st century, most democratic nations do not take responsibility to improve the lives and livelihoods of those who do not conform to the binary standards of gender. There are three phases that are important milestones in the history of struggle that the transgender community faced on the path to humanity, and precedes the introduction of the transgender persons (protection of rights) 2016 bill and even forms the basis of the bill. However, when we look at this TG 2016 bill and juxtapose it against the three points, I feel that we the transgender persons are surely, violently, and seve

பிரதமர் மோடி அவர்களுக்கு...

Image
மத்திய அரசின் தலைமை அமைச்சரான மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு, உலகில் இயங்கும் ஜனநாயக தேசங்கள் எதுவும் இதுவரை மாற்றுப்பாலினத்தோரின் உடல் இயங்கியலையும் அவர்களின் வாழ்வியல் அவலங்களையும் களைய பொறுப்பற்று கிடக்கும் இந்த 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில்,மாற்றுப்பாலினத்தோராகிய எங்களின் உடல்,வாழ்வியல் அனைத்தையும் கணக்கில் கொண்டு ,எங்கெளுக்கென்று ஒரு தனி மசோதாவை தங்கள் தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதில் மகிழ்வுறுகிறேன். அதே நேரத்தில் தங்கள் அரசு இயற்றிட இருக்கிற இந்த மசோதாவோடு தொடர்புடைய ,அதற்கு அடிப்படையாக அமைந்த மூன்று விஷயங்களுடன் மாற்றுபாலினத்தோர்(உரிமைகள் பாதுகாப்பு)மசோதா 2016 யை பொருத்திப்பார்க்கையில் எங்கள் பாலினம் மிக நுண்ணிய முறையில் கொடூரமாக ஏமாற்றப்பட்டதாகவே நான் உணர்கிறேன், எங்களுக்கு கல்வி ,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வேண்டுமென 2013ல் தங்கள் உரிமைகளை வீரியத்தோடு இத்தேசம் முழுவதும் எங்கள் பாலினம் முழங்கியது .தமிழகத்தில் நானும் கூட எம் பாலினத்தினவர்களின் உரிமைகளுக்காக போராடி காவல்துறையால் தாக்கப்பட்டிருக்கிறேன் ,பலமுறை கைதுசெய்ய

ரோம் கத்தோலிக்க மடாதிபதி பிரான்ஸிஸ் போப் அவர்களுக்கு...

Image
நேற்றைய தினம் மாற்றுப்பாலினத்தவரைபற்றி(திருநர்) கருத்து கூறுகையில் "தாங்கள் பாலினத்தை தாங்களே தீர்மானித்துகொள்ளகூடாது" என்றும்"கடவுள் படைத்த உருவத்தை மாற்றக்கூடாது என்றும் கூறியிருந்தீர். இது போன்று இறுகிக்கெட்டிதட்டிப்போன கருத்தியலை கடவுளின் பெயரால் தாங்கள் உதிர்ததைக் கண்டு வியப்பேதுமில்லை எனக்கு காரணம் நீங்கள் கொண்டிருக்கும் கருத்தியல் மிகவும் பழையது .அதை உதிர்க்கும் உங்கள் உருவம் மட்டுமே புதியது. "ஆணுடலினுள் முரண்படும் பெண் உளத்தியல் துன்பத்திலிருந்து மீள அறுவைசிகிச்சையை நேசித்து உடலளவிலும் பெண்ணாய் உறுமாறுகிறோம் என உலகின் முன் நின்று நாங்கள் உரத்து முழங்கிய பிறகும் தாங்களால் உள்வாங்க முடியாதது ஏன் என்ற மதசூட்சமத்தை புரிந்துகொள்ளமுடியாதவளல்ல நான் . அறுவைசிகிச்சையின் கர்த்தாவாக இன்று கருதப்படுகின்ற 16ஆம் நூற்றாண்டு ஜெர்மனியின் ஆன்றியஸ் சோசியலியஸ் அவர்கள் எழுதிய மனித உடல் கட்டமைப்பியல் (The Fabrics of Human Body) என்ற நூலை கிருத்துவ மதத்திற்கு எதிரானது என்பதாக கூறி அவர் கையாலேயே அம்மாபெரும் நூலை கொளுத்திய கொரூரத்தை புரிந்த முகாமைச்சேர்ந