Posts

Showing posts with the label lifeexperiance

மழையில் நனையா பூச்சிகளிடமிருந்து கற்றுகொண்ட பாடம்...

Image
நான் பிறந்ததிலிருந்து பார்த்திராத ஓர் அழகிய காட்சியை இன்றைய இரவில் கண்டேன்...!  அப்பப்பா.... அப்படியொரு பேரழகு அக்காட்சியில்..!  அதுதானோ இயற்கை எழில்..!  திடீரெனெ தூவும்,பெய்யும் இந்த ஆடி மழை...!  நம் தலைமயிரின் நுனியில் பூக்கும் லேசான மழை விதை அது.நான் இறங்கிய பேருந்து நிறுத்தத்தில் ஓங்கி வளர்ந்த இரும்பு கம்பத்தின் முனையில் நாற்புறமும் பிரகாசமாய் எரியும் விளக்கொளி.அந்த ஒளி பிரகாசத்தின் கீழ் வான் மேகம் வெண்ணிற மழை விதையை தூவும் காட்சி அற்புதமாய் மிளிர்ந்தது.மின் விளக்கொளியில் மிளிரும் கணக்கில்லா வெண் விதைத் தூவலின் ஈரம் படாமல், பிரகாசிக்கும் விளக்கொளியை நோக்கி பறக்கிறது சில சிறு பூச்சிகள்....!    எவ்வளவு அசாத்திய தையிரியம் இச்சிறு பூச்சிகளுக்கு என்பதை எண்ணி பிரம்மித்து போனேன். மழையில் நினைந்த வாரே ஓரம் நின்று அக்காட்சியை கூர்ந்து நோக்கலானேன். இதுவரையில் காற்றின் இசைக்கு தலை அசைத்த இலைகள் மழைத்துளிகளின் முத்தமிடலுக்கு சொக்கி கிடக்கும் போது, தன் ரெக்கையில் சிறு நீர்த்துளிப் பட்டாலே புவியில் வீழ்ந்து போகும் இச்சிறு பூச்சிகளுக்கு மட்டும் சொக்காமல் ...