துண்டு சதை
உயிரில் பரவிய பெண்மையில்
பிணமாய் கிடந்த ஆணுறுப்பை வெறுத்தறுத்து புது பாலினமானேன்.!
பிணமாய் கிடந்த ஆணுறுப்பை வெறுத்தறுத்து புது பாலினமானேன்.!
அத்துண்டுச் சதையை
குருதியோடு புதைத்த போதுதான்
புரிந்தது அதன் அதிகாரப் பரப்பு.!
குருதியோடு புதைத்த போதுதான்
புரிந்தது அதன் அதிகாரப் பரப்பு.!
அப்போது எனக்கு உறவுகள் இருந்தன
வீடிருந்தது
மதிப்பிருந்தது
நான் மாணுடாமாகவும் இருந்தேன்
ஆனால் என் பாலினம் மட்டும் என்னிடம் இல்லை!
வீடிருந்தது
மதிப்பிருந்தது
நான் மாணுடாமாகவும் இருந்தேன்
ஆனால் என் பாலினம் மட்டும் என்னிடம் இல்லை!
இத்துண்டுப் பிணத்தை புதைத்த பின்
என் பாலினம் என்னிடம் இருக்கிறது
ஆனால் என் உறவுகளில்லை
எனக்கென்று வீடில்லை
சமூக மதிப்பில்லை
நான் மாணுடமாகவே அங்கிகரிக்கப்படவுமில்லை.!
என் பாலினம் என்னிடம் இருக்கிறது
ஆனால் என் உறவுகளில்லை
எனக்கென்று வீடில்லை
சமூக மதிப்பில்லை
நான் மாணுடமாகவே அங்கிகரிக்கப்படவுமில்லை.!
சுய பாலினத்தோடு
அங்கீகரிக்கப்படாத மாணுடமாய் வாழ்வதா...?
சுயத்தை மறுத்த
மாணுடப் பிணமாய் உழல்வதா...?
எனக்கேற்பட்ட அதே சிந்தனை வலியில்
ஆயிரமாயிரம் திருநர்கள்
அறுத்தெரிய வேண்டிய
அத்துண்டுச் சதையை
சுமந்து திரிகிறார்கள்
குடும்பக் குமிழில்
மாணுடப் பிணங்களாய்...!
அங்கீகரிக்கப்படாத மாணுடமாய் வாழ்வதா...?
சுயத்தை மறுத்த
மாணுடப் பிணமாய் உழல்வதா...?
எனக்கேற்பட்ட அதே சிந்தனை வலியில்
ஆயிரமாயிரம் திருநர்கள்
அறுத்தெரிய வேண்டிய
அத்துண்டுச் சதையை
சுமந்து திரிகிறார்கள்
குடும்பக் குமிழில்
மாணுடப் பிணங்களாய்...!
நண்பர்களே...
அவர்கள் உங்கள் பிள்ளைகளாக இருக்கலாயின்
உங்கள் வீட்டை அவர்களுக்கான
கல்லறைகளாக்காதீர்கள்..!
அவர்கள் உங்கள் பிள்ளைகளாக இருக்கலாயின்
உங்கள் வீட்டை அவர்களுக்கான
கல்லறைகளாக்காதீர்கள்..!
அவர்களின் அழகான
ரத்த உறவுகளான நீங்கள்
அவர்கள் வெறுத்தொதுக்கும்
எதிரிகளாய் உதிர்ந்து விடாதீர்கள்..!
ரத்த உறவுகளான நீங்கள்
அவர்கள் வெறுத்தொதுக்கும்
எதிரிகளாய் உதிர்ந்து விடாதீர்கள்..!
அவர்கள் தெரிவு செய்த
பாலினத்தை அங்கீகரியுங்கள்..!
அது தன் சிறகை விரிக்க
உதவி புரியுங்கள்.!
ஏனெனில் அவர்கள் உங்கள் பிள்ளைகள்..!
அதைவிட அவர்கள் மாணுடர்கள்..!
துண்டுச் சதையல்ல
உங்கள் அன்பே மாணுடத்தை
தீர்மானிக்கிறது..!
பாலினத்தை அங்கீகரியுங்கள்..!
அது தன் சிறகை விரிக்க
உதவி புரியுங்கள்.!
ஏனெனில் அவர்கள் உங்கள் பிள்ளைகள்..!
அதைவிட அவர்கள் மாணுடர்கள்..!
துண்டுச் சதையல்ல
உங்கள் அன்பே மாணுடத்தை
தீர்மானிக்கிறது..!
....மதிப்பிற்குரிய மங்கை பானு
Comments
Post a Comment