Posts

Showing posts with the label மனுஷி

நீங்கள் உருவாக்கிய மனுஷி...!

Image
தண்டவாளத்தின் கிராசிங்கில் இதோ நீங்கள் உருவாக்கிய மனுஷி உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...!  குடும்பத்திலிருந்து உங்களால் விரட்டப்பட்டவள்...! நீங்கள் பயணிக்கும் தொடரியில் உங்களிடம் பிச்சைக் கேட்க உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...! நீங்கள் அவளைப் பார்த்து கண்டிப்பாக முகம் சுளிப்பீர்களென அறிந்தும் அந்த இரும்பு தண்டவாளத்தை கடப்பது போல உங்கள் முக சுளிப்புகளை கடந்து உங்களிடம் பிச்சையீட்ட அவள் உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...! அவள் எப்போது வேண்டுமானாலும் எதிர்வரும் தொடரி மோதி சாகலாம்...! அது ஒரு தற்செயல் ..! ஆனால் நீங்களிடும் பிச்சையீட்டி வாழ்வது தான் அவள் விதியாயிற்றே..! அவ்விதி வழியே... அவள் அங்கு காத்துக் கிடக்கிறாள்...! அவளை கூர்ந்து நோக்குங்கள்..! அவள் உங்களுடைய சகோதரியாக இருக்கக்கூடும்...! அவளை கூர்ந்து நோக்குங்கள்...! அவள் நீங்கள் ஈன்றெடுத்த உங்களின் பிள்ளையாக இருக்கக்கூடும்...! ....மதிப்பிற்குரிய மங்கை பானு