Posts

Showing posts with the label TransRightsNow

State Untouchability towards Transgender community.!

Image
அரச தீண்டாமை…!  கடந்த வியாழன் பெப்ருவரி 01 அன்று காலைப் பொழுதை பறவைகளின் கீச்சிலிகள் எழுப்பியது போலவே 2018-2019 இந்திய அரசின் பட்ஜட் எதிர்பார்ப்பு என்னை எழுப்பியது.இம்முறையும் ஏமாற்றம் தான் என்கிற சிந்தனை என் மனதின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தாலும் ‘’இம்முறையும் என் சமூகமான மாற்றுப் பாலினத்தோரின் மேம்பாட்டுக்கான பொருளியல் ஒதுக்கீடு இருக்காதா..!’’என்கிற ஏக்கம் இருக்கவே செய்தது.மணி பகல் பதினொன்ன்றை கடக்கிறது இந்த தேசத்தை ஆளும் அரசு தனக்கான வரவையும் அது செலவிடப் போகும் தொகைகளையும் சமூகவாரியாகவும் துறைவாரியாகவும் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறது.அதை ஊடகங்கள் பரபரப்பாக காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.நான் மிகவும் எதிர்பார்ப்போடு தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்திருந்தேன்.ஒவ்வொரு அறிவுப்புகளையும் உன்னிப்பாக கவனித்தும் வந்தேன்.நான் கவனித்திதல் என் கண்கள் சிவந்தே போனது.சில மணி நேரங்களில் அறிவிப்புகள் அனைத்தும் முடிந்தன.உண்மையில் பட்ஜட் தயாரிப்புக்கு முன்பாக இந்திய அரசு கிண்டிய அல்வாவின் சுவையை அப்போதுதான் என்னால் உணரமுடிந்தது. இந்த தேசத்தில் வாழும் ஒரு பாலின பிரிவை கணக்கில் க...

மது எனும் கொடிய நஞ்சு...! Abolishing Alcohol..!

Image
மது ஒழிப்பில்.... மது எனும் கொடிய நஞ்சு ஒட்டுமொத்த மக்கள் திரள் மீது இன்றைக்கு தெளிக்கப்பட்டு வருகிறது.நம் கண் முன்னால் மக்கள் செத்து மடிவதும் சீரழிவதும் நடந்தவண்ணம் தான் உள்ளத்ய்.இந்நாட்டில் நிகழ்ந்தேறும் ஒவ்வொரு கொலைகளுக்குப் பின்னால் ஒவ்வொரு கற்பழிப்புக்கு பின்னால்,ஒவ்வொரு விபத்தின் பின்னால்,ஒவ்வொரு குடும்ப பிரிவுகளுக்குப் பின்னால் மது ஒரு முக்கிய காரணியாக செயல்படுவதை நாம் காண முடியும் இந்த அரசாங்கம் வருவாயை மட்டுமே முக்கியமாக எடுத்துக்கொண்டு மக்களை அவல நிலைக்குத் தள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.மது விசயத்திலும் முரண்களைக்கொண்ட நாடாகவே திகழ்கிறது.குஜராத், மணிப்பூர் ,நாகலாந்தில் தடை செய்யப்பட்டிருக்கும் மது தமிழகத்தில் திறந்து விடப்படுகிறது எனில் அதன் நொக்கம் என்ன? மதுவினால் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மற்ற சமூகத்துக்குநிகரான பாதிப்பையே எங்கள் சமூகமும் அடைகிறது.எந்த தீமையும் பலவீனமானவர்களையேத் தாக்கும் என்ற கூற்றுப்படி,பொதுச் சமூகத்தினால்  தீட்டிற்கும் தீண்டாமைக்கும் ஆட்பட்டிருக்கும் எங்கள் சமூகம் மதுவின் கொடிய பாதிப்புகளை சுமந்து திர...

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016

Image
Protection of Transgender Rights bill-2016 The lives of transgender people are destroyed in the name of   Protection of Transgender Rights bill-2016 under the fascist Government of India. In order to amend the bill that projects transgender community as criminals, several protests took place across Tamil Nadu last year. A group of us also met members of the Parliamentary committee and ministers (including ministers from TN) in New Delhi to explain the status of livelihood and submitted a draft bill that was created by our own community members.  After analyzing our draft, the Committee suggested (Central Social Justice Authoritative) to provide reservation in education and employment for us. It was strictly mentioned in the statement to provide the reservation.  But nothing close to the statement or any matters relating to the rights and reservation of transgender community are mentioned in the meaningless bill that is to be passed by the saffron army in ...

மாற்றுப்பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை மசோதா -2016

Image
மாற்றுப்பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை மசோதா -2016 மாற்றுப்பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை மசோதா -2016 என்கிற பெயரில் மாற்றுப்பாலினத்தோரின் வாழ்வியலை அழித்து ரசிக்கிறது பாசிச அரசு. மாற்றுப்பாலினத்தோரை குற்றவாளிகளாக சித்தரிக்கும் இம்மசோதாவை திருத்தம் செய்ய கோரி கடந்த ஆண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்தது மட்டுமல்லாமல் பாராளுமன்றத்தின் நிலைக்குழுவில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்களை,அமைச்சர்களை (தமிழகத்தைச் சார்ந்தவர்கள் உட்பட) டெல்லியில் நேரில் சென்று எங்களின் வாழ்நிலை குறித்து விளக்கியதோடு எங்களுக்கான வரைவு மசோதாவை திருநங்கைகளே தயார் செய்து  நிலைக்குழுவிடம்  சமர்ப்பித்தோம்.நாடாளுமன்ற நிலைக்குழு எங்களது வரைவு மசோதாவை ஆய்ந்து அலசிய பிறகு எங்களுக்கான கல்வி,வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய சமூகநீதி அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் அளித்தது.அதில் மாற்றுப் பாலினதோருக்கு கண்டிப்பாக இடப்பங்கீடு வழங்க வேண்டும் என்கிற வாக்கியமும் இடம் பெற்றிருந்தது. இதையெல்லாம் சிறிதும் கண்டுகொள்ளாமல் திருநர்களின் கல்வி,வேலைவாய்ப்பு இடப்பங்கீடு பற்றி எந்த ஒரு அறிக்கையும் ...

Euthanize Us!

Image
Euthanize  Us! To the President and the Prime Minister of India We, the Transgender people of India, the children of this ‘Independent’ land who have been disowned by our family, by the government, and have been made refugee in our own land. I am writing this with the sweat and blood of the Transgender community and request you to at least Euthanize  Us.   ‘The Transgender Persons (Protection of Rights) Bill 2016’ has lost the essence of the Indian Democracy and targets the Transgender community with its toxic policies. We are suffering in-between life and death due to your toxicity. It is far better to die rather than wandering in-between life and death. So, please Euthanize  Us. The Indian Constitution, judicial system, and our representatives contradict each other and question the entire concept of democracy. It is far better to die than to survive in the margins of the society where you have pushed Us. So, please Euthanize  Us. ...

கருணைக் கொலை செய்யுங்கள்…!

Image
கருணைக் கொலை செய்யுங்கள்…! இந்தியாவின் பிரதமர் அவர்களுக்கும் குடியரசு தலைவர் அவர்களுக்கும்… வணக்கம்…!     இந்த ’’சுதந்திர’’ தேசத்தில் இம்மண்ணின் மைந்தர்களாகப் பிறந்து ரத்த உறவுகளால்,சொந்த அரசினால்,சுற்றி நிற்கும் சமூகத்தினால் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தோர் அனுபவிக்கும் கொடிய துக்கம் சிந்தும் வெண் ரத்தத்தையும் செங்குருதியையும் மையாய் உறிஞ்சி எழுத்துக்களாய் உருட்டி உங்களுக்கு கடைசிய்யாய் ஒரு கோரிக்கை வைக்கிறேன் எங்களைக் கருணைக் கொலையாவது செய்யுங்கள்…!     ’’மாற்றுப் பாலினத்தோர் பாதுகாப்பு மசோதா 2016(The Transgender Persons(Protection of Rights)bill,2016 ’’ல் இந்திய ஜனநாயகம் அதன் உட்கரு ஆற்றலைத் துறந்து ஒரு வகையான வினோத நச்சு செயல்களை எங்கள் மீது உமிழ்ந்து வருகிறது.நீங்கள் உமிழும் நச்சுப் பட்டு எங்கள் உயிர் துடி துடித்துக் கொண்டிருக்கிறது…துடிதுடிப்பின் சித்ரவதையை விட உயிர் துறப்பு எவ்வளவோ மேலானது.அகையினால் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள்…! அரசியலமைப்புச் சட்டமும் நீதித்துறையும் நிர்வாகமும் பிரிதிநிதித்துவ அவைகளும் ஒன்ற...

மாற்றுபலினத்தவர் மீதும் அக்கறை கொண்ட தோழர்.கௌரிலங்கேஷ்

Image
கடந்த மாதம் காட்டாட்சியின் கொலை ஆயுதங்களால் உசுரிழந்தார்கள் தமிழகத்தில் வளரும் லங்கேஷும் கன்னடத்தில் வளந்த அனிதாவும்.அனிதாவின் கழுத்தை இறுக்கியது தூக்குக் கயிறாக இருக்கலாம்,லங்கேஷை துளைத்தது துப்பாக்கித் தோட்டாக்களாக இருக்கலாம்.ஆனால் அதை எய்த கைகள் ஒன்றுதானே…! அந்த கரங்கள் தானே மஹராஷ்ரத்தில் 21.08.2013 அன்றின் காலைப் பொழுதின் முகத்தில் நரேந்திர தபோல்கரின் ரத்தத்தை பூசி சென்றது…!அந்த கரங்கள் தானே 19.02.2015 அன்று அதே மஹராஷ்ரத்தில் அதேப் போன்றதொரு காலைப் பொழுதின் முகத்தில் கோவிந் பன்சாரேவின் ரத்தத்தைப் பூசி சென்றது.கெளரியையும் கல்புர்கியையும் பன்சாரேவையும் ஒரே பானியிலேயே அவர்கள் கொன்றிருக்கிறார்கள் அது மோட்டார் சைக்கிள்,முகமூடி, 7.6 எம்.எம். அளவுள்ளத் துப்பாக்கி.இதுவே அவர்களின் பானியாக இருக்கிறது.அவர்களின் இந்த பானியால் சமூக செயல்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள் போன்றோரின் மனங்களில் மரண பயத்தை விதைக்க நினைக்கிறார்கள்.அத்தகைய நினைப்பிற்கு நீரூற்றி வேலியடித்து அதற்கு ஒன்றும் நேர்ந்திடாதவாறு காத்து வருகிறது பி.ஜே.பி.ஆட்சி. அவர்கள் அந்த மசூதி இடிப்பைப் போன்றே,அந்த ரத யாத்திரையைப் போன்றே,க...
Image
திரு . ராமதாஸ்   அத்வாலே   அவர்களுக்கு …   உங்களின் அரசியல் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்து வருபவர்களில் நானும் ஒருத்தி . ஏனெனில் அண்ணல் அம்பேத்கர் தோற்றுவித்த அரசியல் கட்சியின் தலைவராயிற்றே நீங்கள் …! அம்பேத்கரின் கருத்துக்கு நேரெதிராக இயங்கும் தற்போதைய பி . ஜே . பி . அரசின் அமைச்சரவையில் தாங்கள் அங்கம் வகிப்பது எனக்கு கசப்புணர்வை ஏற்படுத்திய போதிலும் உங்களின் சில பேச்சுக்களையும் .. கண்டனங்களையும் நான் மனமாற வரவேற்றிருக்கிறேன் ,,, வாழ்த்தியிருக்கிறேன் ..! ’’ அனைத்து விளையாட்டுகளிலும் இடவொதுக்கீடு வேண்டும் ’’ என்று நீங்கள் கோரிய போதும் ’’ சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின்கீழ் செயல்படும் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் , கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளுக்கு ரூ .2½ லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது . அதனை அதிகரிக்க பரிசீலித்து வருகிறோம் .’’ என்ற தங்களின் அந்த பரிசீலனை அறிவிப்பும் …   தமிழ்நாடு , மராட்டியம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் கவுரவக்கொலை சம்பவங்கள் கவலை ...