சமூகம்




சமூகம் மிக கொடூரமானது திருநங்கைகள் உயர்கல்வி பயின்றால் 3000 ரூபாய் கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள் வாழ்த்து கூறுவார்கள் அதே திருநங்கைகள் குறைந்த மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க ஆசை படுகிறேன் என்றால் இது எல்லாம் மிகையாக தெரியவில்லையா என்பார்கள்.இச்சமூகம் தனக்கு இணையாக ஒரு ஒடுக்கபட்ட பாலினத்தவர் வந்து அமரும் நிகழ்வை ஏற்றுகொள்ள மறுக்கிறது.கோடிக்கணக்கானோர்
வாழும் இப்புவியில் என் குரல் அதிகார வர்க்கத்தினரின் காதில் போய் சென்றடைய கிட்ட தட்ட 69 வருடங்களுக்கு மேலாகின்றது .இம்மானுட உலகில் பல்வேறு வலிகள்,இழப்புக்களை சுமந்து என் திறமையை காட்டினால் மட்டுமே தட்டிகொடுக்கிறார்கள். அவர்களுக்கு(இச்சமூகம்) சலுகைகள் தந்தால் சகித்து கொள்வார்கள் உரிமையை (இடஒதுக்கீடு) கேட்டால் பொங்கி எழுவார்கள் .இம்மாபெரும் ஜனநாயக நாட்டில் பிச்சையெடுத்தாலும்,பாலியல் தொழில் செய்தாலும் நானும் வரி செலுத்துகிறேன் .என்னுடைய வரிப்பணத்தில்தான் மின்சாரம்,சாலை,சட்டப்பேரவைகூட்டம்,அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் இவை அனைத்தும் வழங்கப்படுகிறது என்பதை மறவாதீர்!!!.இத்தகைய நிகழ்வை அரசு தீண்டாமையாகதான் நான் பார்க்கிறேன்.சாதி தீண்டாமை,பாலின தீண்டாமை,வர்க்க தீண்டாமை,நிற தீண்டாமை என தீண்டாமையின் ஒட்டுமொத்த கொரூரத்தையும் அனுபவித்து கொண்டிருக்கும் இம்மாற்றுப்பாலினத்தோர் சமூகம் விடுதலை அடைய பல வழிகளில் போராடிக்கொண்டிருக்கிறது.இத்தகைய மாற்றுபாலின சமூகத்திற்கு நாம் என்ன செய்ய போகிறோம் ? என்ன செய்தோம் என்பதை சிந்தியுங்கள்??????? நீங்கள் எம்மை தெய்வமாக பார்க்க வேண்டாம் மனிதர்களாக பாருங்கள் ."மனிதம்" தான் மனிதனுக்கு அழகு நாம் மனிதத்தோடுதான் இருக்கிறோமா என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு கொள்ளுங்கள் மக்களே .!! தன்னை ஒடுக்குபவர்களிடம் நெருக்கமாக வாழும் ஒரே ஒடுக்கபட்ட இனம் மாற்றுபாலினத்தோர் (திருநங்கை,திருநம்பி) இனம். சமூகம் மிக கொடூரமானது திருநங்கைகள் உயர்கல்வி பயின்றால் 3000 ரூபாய் கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள் வாழ்த்து கூறுவார்கள் அதே திருநங்கைகள் குறைந்த மதிப்பெண் எடுத்து மருத்துவம் படிக்க ஆசை படுகிறேன் என்றால் இது எல்லாம் மிகையாக தெரியவில்லையா என்பார்கள்.இச்சமூகம் தனக்கு இணையாக ஒரு ஒடுக்கபட்ட பாலினத்தவர் வந்து அமரும் நிகழ்வை ஏற்றுகொள்ள மறுக்கிறது.கோடிக்கணக்கானோர் வாழும் இப்புவியில் என் குரல் அதிகார வர்க்கத்தினரின் காதில் போய் சென்றடைய கிட்ட தட்ட 69 வருடங்களுக்கு மேலாகின்றது .இம்மானுட உலகில் பல்வேறு வலிகள்,இழப்புக்களை சுமந்து என் திறமையை காட்டினால் மட்டுமே தட்டிகொடுக்கிறார்கள். அவர்களுக்கு(இச்சமூகம்) சலுகைகள் தந்தால் சகித்து கொள்வார்கள் உரிமையை (இடஒதுக்கீடு) கேட்டால் பொங்கி எழுவார்கள் .இம்மாபெரும் ஜனநாயக நாட்டில் பிச்சையெடுத்தாலும்,பாலியல் தொழில் செய்தாலும் நானும் வரி செலுத்துகிறேன் .என்னுடைய வரிப்பணத்தில்தான் மின்சாரம்,சாலை,சட்டப்பேரவைகூட்டம்,அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் இவை அனைத்தும் வழங்கப்படுகிறது என்பதை மறவாதீர்!!!.இத்தகைய நிகழ்வை அரசு தீண்டாமையாகதான் நான் பார்க்கிறேன்.சாதி தீண்டாமை,பாலின தீண்டாமை,வர்க்க தீண்டாமை,நிற தீண்டாமை என தீண்டாமையின் ஒட்டுமொத்த கொரூரத்தையும் அனுபவித்து கொண்டிருக்கும் இம்மாற்றுப்பாலினத்தோர் சமூகம் விடுதலை அடைய பல வழிகளில் போராடிக்கொண்டிருக்கிறது.இத்தகைய மாற்றுபாலின சமூகத்திற்கு நாம் என்ன செய்ய போகிறோம் ? என்ன செய்தோம் என்பதை சிந்தியுங்கள்??????? நீங்கள் எம்மை தெய்வமாக பார்க்க வேண்டாம் மனிதர்களாக பாருங்கள் ."மனிதம்" தான் மனிதனுக்கு அழகு நாம் மனிதத்தோடுதான் இருக்கிறோமா என்று உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு கொள்ளுங்கள் மக்களே .!! தன்னை ஒடுக்குபவர்களிடம் நெருக்கமாக வாழும் ஒரே ஒடுக்கபட்ட இனம் மாற்றுபாலினத்தோர் (திருநங்கை,திருநம்பி) இனம்.

Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016