நலவாரியம் போதாது இடப்பங்கீடே வேண்டும்...!!!!!
நலவாரியம் போதாது இடப்பங்கீடே எங்களின் அடிப்படை…! ……………………………………………………………………….. உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட இனங்களில் மிகவும் ஒடுக்கப்பட்ட இனமாக என் திருநர் பாலினம் இருக்கிறது.பல வடிவங்களினாலான தீண்டாமைகளையும் ஒடுக்கு முறைகளையும் மொத்தமாய் சுமந்து திரிபவர்கள் நாங்கள்.குடும்ப தீண்டாமை,சமூக தீண்டாமை,அரச தீண்டாமை என மூன்றும் இணைந்து குழைந்து உருவாக்கப்பட்ட கொடிய ஆயுதத்தினால் தினம் தினம் எங்களின் மாணுட உணர்வுகளும் உணர்ச்சிகளும் சுயமரியாதையும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது.அந்த ஆயுதம் பல வடிவங்களில் தன்னை உருமாற்றி,காலத்திற்கு தகுந்தாற் போல நெகிழ்வு தன்மையைக் கொண்டு,மேலோட்டமாக முற்போக்கானதாக வெளிப்படுத்திக் கொண்டே உள்ளடக்கத்தில் அச்சித்திரவதையை புரிந்து கொண்டே இருக்கிறது. எங்களுக்காக அமைக்கப்பட்ட பெயரளவிலான நலவாரியம் அப்படிப்பட்டதே…….. ஆட்சிகள் மாறினால் காட்சிகள் மாறுமென்பார்கள்.உண்மைதான் இங்கேயும் அப்படித்தான். திருநங்கையர்களின் சமூக பாதுகாப்பு கருதி 15 ஏப்ரல் 2008 ஆம் ஆண்டு தமிழக அரசு திருநங்கையர்களுக்கு தனி நலவாரியம் அமைத்தது.வரலாற்று வழியில் அப்போதைய தமிழக அ...