Posts

Showing posts with the label short story

உயிர் வளியில்லா அரசும்...!உயிர் வலி கொண்ட தேசமும்...!

Image
உயிர் வளியில்லா அரசும்...!உயிர் வலி கொண்ட தேசமும்...! பச்சை உடம்புக்காரிக்கு குழந்தை வந்த தடத்தின் ரணம் இன்னும் அப்படியே இருக்கிறது . இருபது நாட்களும் மழலையின் முகம் மட்டுமே அவளின் உடல் ரணத்தை ஆற்றும் பெரும் மருந்தாக இருக்கிறது . ரோஜாவின் நிறத்தை பூசி , அறுத்த தொப்புள் கொடியின் துண்டு இன்னும் உலர்ந்து உதிராமல் , மினுக், மினுகென கண்களை உருட்டி , அழுகையாலும் புன்னகையாலும் தன் வாழ்விற்காக பேரற்தத்தைக் கொடுத்த பூ சிசுவைப் பார்த்து மகிழ்வாள் தீபா . ஆஹா… இவ்வுலகில் குழந்தையை ஈன்றெடுத்த தாயின் மகிழ்விற்கு நிகரொன்று உண்டோ!எனும் பெருமிதத்தோடு பிரம்மித்து வந்தால் அவள்.அங்கே இவளின் குழந்தை சத்தமிட்டாள் இவளின் ரத்த நாளங்கள் கதறித் துடிக்கும்,அம்மழலை புன்னகை சிந்தினால் இவளின் இதயம் பூத்துக் குலுங்கும் பசியால் அச்சிசு பீறிட்டழுதால் “கண்ணே….செல்லமே….இங்கே வா….”என படற காத்திருக்கும் முல்லைக்கொடியைப் போல இவளின் முலைக்காம்பு மழலையின் வாய் தேடி அலையும் . இப்படித்தான் சென்றது ஒவ்வொரு நொடியும் இந்த இருபது நாளும் தீபாவின் கணவர் பழனிக்கும் பேரானந்தம்.மழல...

போர் பறவைகள்

Image
வல்லினம்,மெல்லினம்,இடையினத்தில் கீதம் இசைக்கும் பறவைகள் அலரித்துடிக்கின்றன, என்றோ நிகழ்ந்த அந்த கொடிய போரை நினைவூட்டும் வெடி சப்தங்களை கேட்டு !!!!அதில் எழுந்து சூழும் புகையின்நெடியை நுகர்ந்து!!!! ஆபத்து நிலையை உணர்ந்த பறவைகள் கூட்டத்தின் திட்டமிடல் உருவாகிறது.திட்ட உருவாக்கம் காக்கையின் பணி.மலைக்குருவியும்,வயல் கொக்கும்,கடல் புறாவும் முக்கியஸ்தர்கள் என தீர்மானிக்கப்படுகிறது. பருந்து தூது செல்கிறது,உடனே வந்துசேருகிறார்கள் மூன்று முக்கியஸ்தர்கள் சில கிளைகளையும் அடர் இலைகளையும் கொண்ட வேப்பமரத்தினுள்ளே கூட்டம் நிகழ்கிறது தன் சிறிய சிறகுகளை சிலிர்த்தவண்ணம் பேச துவங்குகிறது மலைக்குருவி"அவர்கள் மலைவனத்தை அழிக்கிறார்கள் அங்குள்ள மானுடத்தை கொல்லுகிறார்கள் .   மலையை உடைக்க அவர்கள் பயன்படுத்தும் வெடிமருந்து வெடியை விட அவர்கள் கொன்று போட்ட மலைவாழ் மனிதர்களின் பிணத்தின் நீச்சி அதிகமாய் இருக்கிறது!! எங்களால் அங்கு வாழவே முடியவில்லை ஏதாவது செய்யவேண்டும்!!!செய்யவேண்டும் ..!!!"என பட படப்போடு பேசி அமர்ந்தது மலைக்குருவி.அடுத்து தன் சாம்பல் நிற இறக்கையை இரண்டு முறை விசிறி கூட...