கொலை ஆயுதமாக்கப்பட்ட தாமிரபரணி ஆறு
அந்த வலி சிறு வயதில் என் இதயத்தில் தைத்த முள் வலி இன்று வரையில் என் மக்கள் மீது விழுந்த ஒவ்வொரு லத்தி அடியும் அவர்கள் கதறிய அந்த கதறல்களும் தண்ணீரில் மரித்த எம் முன்னோர்களும் என் இதயத்தில் இன்று வரையில் கொடிய வலியாய் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.என்னால் அந்நிகழ்வை மறக்கவும் முடியாது என்னால் அக்கொடூரத்தை மன்னிக்கவும் முடியாது.எவ்வளவு பெரிய கொரூரத்தை நிகழ்த்திவிட்டு ஆசுவாசமாய் ஆட்சி ஆளுகிறார்கள் இந்த ஆட்சியாளர்கள் என நினைக்கும் போது கோபத்தின் உச்சியில் என் உணர்வுகள் செல்கிறது.நான் ருசித்துப்பருகும் அந்த தாமிரபரணியின் நீரை என் மக்களுக்கான விஷமாய் மாற்றியவர்கள் இவர்கள்தானே!!!..சில நாட்களுக்குமுன்னால் வல்லநாட்டுக்கருகில் என் உயிர்த்தாய் தாமிரபரணியில் மூழ்கி நீந்தாலாமென்று ஆசையாசையாய் சென்றேன்
இங்கேயே ஊற்றாகி இங்கேயே உயிராகும் அந்த வற்றாத ஜீவநதி வறண்டிருப்பதை கண்டேன் அன்று ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சியினால் மக்கள் கொலைக்கு தானும் காரணமாகிவிட்டோமே என்று எண்ணி எண்ணியே இந்த ஆறு வறண்டு போயிருக்குமோ என்ற சிந்தையே என்னுள் எழுந்தது.உயிர்நீரை பருகி புதுவித ஈரமலர்களாய் பூத்து ஒளிரிய தாமிரபரணியின் மணற்துகள்கள் சிறு சிறு நெருப்பு கங்குகளாய் என் பாதத்தை சுட்டது.
இது கார்பரேட் கொக்ககோலாவினால் நிகழ்ந்துதானே என்பதையும் அறிவேன்.இந்த கார்பரேட் பிசாசுக்காகதானோ அன்று பளிச்சுட்டு சலசலத்தோடு என் தாயின் வெண்ணிறத்தின் மீது இரத்தக்கறை பூசியதோ அந்த அரசாங்கம்.மாவோ சொன்னது சரிதான் "ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னும் ஒரு வர்க்கத்தின் நலன் இருக்கிறது" என்றாரே அந்த மாஞ்சோலை தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் படுகொலைக்கு பின்னால் ,நீர்க்கோர்த்திருந்த மணல் துகள்கள் நெருப்புக்கங்குகளாய் சுடுவதற்கு பின்னால் கார்பரேட் அரசியல் தானே இருக்கிறது.
Comments
Post a Comment