Posts

Showing posts with the label மாஞ்சோலை தேயிலை தோட்டத்தொழிலாளர்கள்

கொலை ஆயுதமாக்கப்பட்ட தாமிரபரணி ஆறு

Image
அந்த வலி சிறு வயதில் என் இதயத்தில் தைத்த முள் வலி இன்று வரையில் என் மக்கள் மீது விழுந்த ஒவ்வொரு லத்தி அடியும் அவர்கள் கதறிய அந்த கதறல்களும் தண்ணீரில் மரித்த எம் முன்னோர்களும் என் இதயத்தில் இன்று வரையில் கொடிய வலியாய் இருந்து கொண்டே இருக்கிறார்கள்.என்னால் அந்நிகழ்வை மறக்கவும் முடியாது என்னால் அக்கொடூரத்தை  மன்னிக்கவும் முடியாது.எவ்வளவு பெரிய கொரூரத்தை நிகழ்த்திவிட்டு ஆசுவாசமாய் ஆட்சி ஆளுகிறார்கள் இந்த ஆட்சியாளர்கள் என நினைக்கும் போது கோபத்தின் உச்சியில் என் உணர்வுகள் செல்கிறது.நான் ருசித்துப்பருகும் அந்த தாமிரபரணியின் நீரை என் மக்களுக்கான விஷமாய் மாற்றியவர்கள் இவர்கள்தானே!!!..சில நாட்களுக்குமுன்னால் வல்லநாட்டுக்கருகில் என் உயிர்த்தாய் தாமிரபரணியில் மூழ்கி நீந்தாலாமென்று ஆசையாசையாய் சென்றேன்  இங்கேயே ஊற்றாகி இங்கேயே உயிராகும் அந்த வற்றாத ஜீவநதி வறண்டிருப்பதை கண்டேன் அன்று ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சியினால் மக்கள் கொலைக்கு தானும் காரணமாகிவிட்டோமே என்று எண்ணி எண்ணியே இந்த ஆறு வறண்டு போயிருக்குமோ என்ற சிந்தையே என்னுள் எழுந்தது.உயிர்நீரை பருகி புதுவித ஈரமலர்களாய் பூத்து ஒள...