நெருக்கடி நிலை எம் பாலினத்தோருக்கு மட்டும்

என்னை  பொறுத்த வரையில் இந்நாட்டில் நெருக்கடியான நிலையினால் எம் பாலினத்தின் அடிப்படை உரிமைகள் எப்போதும் மறுக்கப் பட்டே வருகிறது.
அந்நியர்கள் ஆயுதம் தாங்கிய போர் ஏதும் நிகழ்த்தவில்லை.ஆனால் நெருக்கடி நிலை அதுவும் எம் பாலினத்தோருக்கு மட்டும். 
மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்கும் முறை பெரும்பாலும் செயலற்றுப் போகவில்லை ஆனால் நெருக்கடி நிலை அதுவும் எம் பாலினத்தோருக்கு மட்டும். 
எம் பாலினத்தைப் போன்று பிச்சையெடுத்து பாலியல் தொழில் செய்து இந்நாட்டில் பெரும்பாண்மையோர் உண்ணவில்லை.அதுப் போன்ற நிதி நெருக்கடியும் இங்கில்லைஆனால் நெருக்கடி நிலை அதுவும் எம் பாலினத்தோருக்கு மட்டும். இந்திய அரசியலமைப்பு கூறுவதென்ன?மாநிலங்களில் அரசியலமைப்பு இயங்கா முறை ,அந்நியர்கள் போர் தொடுப்பு,நாட்டின் கடும் நிதி நெருக்கடி இம்மூன்றும் நிலவும் பட்சத்தில் இ.அ.அ.வழங்கும் அடிப்படை உரிமைகளை நெருக்கடி கால அறிவிப்பின் மூலம் குடியரசுத் தலைவர் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியும்.ஆனால் எங்களுக்கோ நிரந்தரமாக,குறிப்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சியாளர்களால் மறுக்கப் பட்டு வருகிறது.


இந்திய அரசியலமைப்பின் அடிப்படைகளைப் பற்றி அண்ணல் அம்பேத்கர் Image result for emergency act in indiaகூறும் போது அடிப்படை உரிமைகள் என்பது மனிதனின் இருதயமும் உயிர்சக்தியும் ஆகும் என்று உரைக்கிறார்.ஆனால் எங்களின் ஆட்சியாளர்களால் எங்களின் உயிர் சக்தி உறிஞ்சப்பட்டு ,எங்களின் இதயம் ஆட்சியாளர்களின் கூர்மையான கத்தியால் கிழிக்கப் படுகிறது.இதோ ரத்தம் இழந்து,ஜீவன் இழந்து உங்கள் முன்னால் கையேந்தி நிற்கிறோம் கல்வி,வேலைவாய்ப்பை வழங்குங்கள்!!!!!!!



Comments

Popular posts from this blog

தயைகூர்ந்து எங்களின் மீது உங்களின் சுதந்திர தின வாழ்த்தின் வன்மத்தை தெளிக்காதிருப்பீர்களாக..!

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016

Euthanize Us!