மனிதன் வாழ தேவையான அடிப்படை வசதி உணவு , உடை , உறைவிடம் இவற்றுள் உணவு , உடை மட்டும் திருநர் சமூகத்திற்கு கிடைக்கிறது ஆனால் உறைவிடம் மட்டும் ??????? வேடந்தாங்கள் பறவைகள் போல ஒரு இடத்தில் தங்குவதற்கு குறைந்த நாட்கள் மட்டுமே வாழ இச்சமூகம் எங்களை அனுமதிக்கிறது . மிகுந்த வலியுடனும் வேதனையுடனும் ஒவ்வொரு இடத்தைவிட்டு இடம்பெயர்ந்து நாடோடிகளாக வாழும் நிலையை இச்சமூகம் எங்களுக்கு பரிசாக அளித்திருக்கிறது . பிச்சையெடுத்தாலும் , பாலியல் தொழில் செய்தாலும் எங்களின் வரிப்பணம் மட்டும் வாங்கும் இந்த இந்திய அரசை நாங்கள் மனதார வாழ்த்துகிறோம் . பறவைகளுக்கு கூட கண்ணயர்ந்து அசதி மறக்க தலை சாய்க்க ஒரு கூடுண்டு ஆனால் என்னை போன்ற திருநர்களுக்கு இந்த வீட்டை எப்பொழுது வீட்டு முதலாளி காலி செய்ய சொல்லிவிடுவாரோ ????? என்ற பயத்தில் தூக்கம் தொலைந்து வாழ்கிறோம் ." எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள் . ஆனால் , நான் மீண்டும் கூற விரும்புகிறேன் , எனக்கு அது இல்லை … நாய்கள் , பூனைகளைவிட நாங்கள் மோசமாக நட...