மாற்றுப் பாலினத்தோரின் உடலியங்கியலில் குழம்பி நிற்கும் உலக ஜனநாயகம்…! அதில் விஞ்சி நிற்கிறது ட்ரம்பின் அதிகாரம்..! பிரபஞ்ச ஆய்வு,பரிணாம ஆய்வு என பல்வேறு ஆய்வுகளில் படிப்படியான முன்னேற்றத்தை அடைந்து வரும் மனித சமூகத்தின் இன்றையக் கட்டமான ஜனநாயக வடிவம்.மாற்றுப் பாலினத்தோரின் உடலியங்கியலில் குழம்பிய ஒரு புரிதலில், அக்கறையற்றும் வெறுப்புற்றுமே காட்சியளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றான நம்முடைய நாடாளுமன்றத்தில் ’மாற்றுப் பாலினத்தோர் மசோதா 2016’ கேட்பாரறற்றுக் கிடப்பது,அச்சபையில் ஆளுமைப் புரியும் அக்கணவான்களின் வெறுப்பையே நமக்கு பிரதிபளிக்கிறது. இத்தகைய வெறுப்பின் பிரதிபளிப்பைத் தான் அமெரிக்க ஜனநாயகத்தை தற்போது வழி நடத்திக் கொண்டிருக்கும் டெனால்ட் ட்ரம்ப் அவர்களும் ஓர் அறிவிப்பின் மூலம் செய்திருக்கிறார். ’’அமெரிக்க ராணுவத்தில் “எந்த விதத்திலும்” திருநங்கைகள் பணியாற்ற முடியாது ’’.என்றும் அதற்கான காரணமாக “ இவர்கள் ராணுவத்தில் பணியாற்றுவதினால் வியக்கத்தக்க அளவில் மருத்துவ செலவுகளும், இடையூறுகளும் ஏற்படுகிறது”என்றும் கூறுகிறார்.அவருடைய விசித்திரக் கருத...