Posts

சாதியை ஒழிப்போம்!!கையால் மலம் அள்ளும் இழிவுக்கு முடிவு கட்டுவோம்!!!

Image
வாசபூக்களை கூந்தலில் சூட எம் பெண்களுக்கு பேரார்வம்மில்லை ஆம் உங்கள் மலத்தின் துற்வாடையை தோற்கடிக்காது அப்பூக்கள் வாசம். ”இந்த நாட்டிலே வர்க்கம் இருக்கிறது.அதன் பக்கத்திலே சாதியும் இருக்கிறது.இங்கே காற்றுக்கும் பாசன கால்வாய்களுக்கும்,விளையும் பூமிக்கும்,கோவிலுக்கும்,குளத்திற்கும்,பள்ளிக்கூடத்திற்கும்,ஊர் பொது இடத்திற்கும்,உண்ணும் உணவிற்கும்,குடிக்கும் தண்ணீருக்கும்,உடுத்தும் உடைக்கும்,பேசும் மொழிக்கும்,இலக்கியத்திற்கும்,கலாச்சாரத்திற்கும்,அரசிற்கும்,அதன் சட்டத்திற்கும்,நீதிக்கும்,நீதி மன்றத்திற்கும்,பிணத்திற்கும்,மயானத்திற்கும்,சாமிக்கும்,,பேய்க்கும் கூட சாதி இருக்கிறது.” என்று சாதியத்தின் இயங்கியலை தன் எழுத்தில் கோபமாய் வரைந்திருப்பார் ஆந்திர எழுத்தாளர் ஜி.கல்யாண ராவ் அவர்கள். அவரின் இந்தக் கோபக் கோவையில் ’’மனித கழிவிற்கும் சாதி இருக்கிறது’’ என்பதையும் சேர்க்க விரும்புகிறேன். இன்றும் கூட அந்த காட்சி என் மனதை விட்டு அகலவில்லை.நான் அப்போது ஐந்தாம் வகுப்புப் படிக்கிறேன்.என் சொந்த கிராமமான புதூர் பாண்டியாபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு வீடு மாறினோம்.அது ஒரு தனியார் ப...

ஜி.எஸ்.டி

Image
GST ஜி . எஸ் . டி . யை சுமந்த பொருட்களை நுகர்வதற்கு எங்கள் எஜமானர்களாகிய பிச்சையிடுபவர்களிடம் பிச்சையை உயர்த்தியிடும்படி எங்களால் போராடமுடியாது .......... மக்களை மேலும் ஒரு அபாய கட்டத்தில் தள்ளிவிடுவதற்காக மீண்டுமொரு இரவு பானி பொருளாதார நடவடிக்கையை மேற்கொள்ள இளவேணிற் காலத்தின் அவ்விரவில் நாடாளுமன்ற மையப் பகுதியில் அவர்கள் குழுமியிருந்த அக்கனம் என்னுள் எத்தனையோ கருத்துருக்களும் வரலாற்ருருக்களும் முட்டி மோதியவண்ணம் இருந்தது . இது போன்ற அவர்களின் இரவு பானி பொருளாதார நடவடிக்கைகள் எத்துருவத்தில் யார் யார் பிடியில் நம்மை நம்மை தூக்கி வீசப் போகிறதோ என்கிற பேரய்யம் எழும்பியது .! அதே நேரம் 1947 ஆகஸ்ட் 14-15 தேதிகளுக்கு இடைப்பட்ட அந் நள்ளிரவிலிருந்து இன்றுவரையில் தொடர்ந்து வருகிற அவர்கள் நம்மவர்களா ? அவர்களுடையவர்களா ..? என்ற விவாதப் பொருளுக்கு என்னளவில் முடிவு கண்டிட துணிந்தேன் . அம்முடிவை துள்ளியத்துடன் பெற்றிட என்னுள் பதிந்திருக்கிற பல வரலாற்று விவரத் தொகுப்புகளை தூசித் தட்டி எழச்செய்தேன் . அதன் ...

கருப்பு சட்டை அணிந்தததால் தலைமைசெயலகட்திற்குள் அனுமதி மறுப்பு..

Image
இன்று நான்....! நாளை....! நேற்று தலைமைச் செயலக வாயலில் எனக்கேற்பட்ட கசப்பான உணர்வு என் இரவு உறக்கம் அனைத்தையும் மிச்சம் வைக்காமல் விழுங்கிவிட்டது.சமூக நலத்துறை அமைச்சரிடம் என் சமூகத்திற்கான சில சலுகை கோரிக்கைகளை எடுத்தியம்பி கோரிக்கை மனு ஒன்றை கொடுத்து வர திருநங்கை தோழிகளுடன் நான் நேற்று தலைமைச் செயலகம் சென்றிருந்தேன்.கருப்பு நிற ஆடை அணிந்திருப்பதாகக் கூறி நான் மட்டும் தடுத்து நிறுத்தப்பட்டேன்..! கேவலமான,மடத்தனமான,மூட புத்தியுள்ள இந்த அரசாங்கத்தை எதிர்த்து அங்கேயே தர்ணா அமர்ந்து விடலாமா என்று கூட யோசித்தேன்.பதவியைத் தக்கவைத்துக் கொள்ள ஆரவாரமாய்,அடிமைப் புழுக்களாய் நெளிந்து கொண்டிருக்கும் அமைச்சர்களின் அருள் பார்வைக்கு முன்னால் என் ஒடுக்கப்பட்ட பாலினத்தின் சிறு சலுகை கோரிக்கையை முன் வைப்பதே பெரும்பாடாயிற்றே...!அதனால் காரியம் தடைபடக் கூடாது என நினைத்து மற்ற திருநங்கை தோழிகள் அமைச்சரைப் பார்க்கச் சென்றனர். “காரியம் பெரிதா...! வீரியம் பெரிதா...! எனும் சொல்லடை சில நேரங்களில் அதிகாரத்திளுள்ளவர்களும் பல நேரங்களில் அடக்கப்பட்டவர்களும் பயன்படுத்தக் கூடியது...

வைரவிழா நாயகனுக்கு வாழ்த்து மடல்..

Image
பெரு மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய மகத்தான அரசியலாளர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு...! 2017 ஜூன் 3 தங்களின் 94 அகவையில் 60 ஆண்டு சட்டமன்ற பணி வைர விழா ஏற்பாட்டை கேள்வியுற்று மனமகிழ்வடைகிறேன். தமிழரின் வரலாற்றில் தங்களின் மகத்தான அரசியல் வாழ்வு முக்கனியில் இனிய சாராய் புதைந்து அதி ருசியூட்டுவதாய் இன்றும்,என்றும் இருக்கும். தாங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதை எண்ணி பேரின்பம் கொள்கிறேன்..! விளிம்பு நிலைச் சமூகமான மாற்றுப் பாலின சமூகத்தின் கொடிய,நுண்ணிய வேதனைகளை கூர் அறி வாற்றலால் உணர்ந்து மாற்றுகள் பல முன் வைத்து மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் நீங்கள் ! எங்கள் பாலினத்தின் தற்போதைய சிறு முன்னேற்றத்திலும் பெறும் பங்கு தங்களுடையது என்பதை திநங்கைச் சமூகமான என் சமூகம் நன்கு உணர்ந்திருக்கிறது. `ஒம்போது`,`அலி`,`பொட்டை` என்றெல்லாம் பிறரால் கேவலமாக விளிக்கப்பட்டு கொரூர இழிவு செய்யப்பட்ட என் சமூகத்தை ;மாற்றுப் பாலினத்தோர்`,`திருநங்கையர்` என பெயரிட்டு பல பெரும் மேடைகளிலும் அச்சு,காட்சி ஊடகங்களிலும் இப்பெயரை பிரச்சாரித்து எங்கள் இழி துடைக்க ...

உழைக்கும் பெண்கள் தினம்...

Image
அன்பிற்குரிய உழைக்கும் பெண்களே, உங்களுடைய வாழ்வும் வாழ்வுக்கானப் போராட்டமும் மகத்தானது என்பதை நாங்கள் அறிவோம்! அதேப்போல உங்களைப்போன்று உங்களருகில் உங்களாகவே வாழ்கிற உங்களை நீங்கள் அறிவீரோ! பல நூறு ஆண்டுகள் அடிமையாய் ,வெடிகுண்டின் அமைதியாய் இருந்த பெண் இனம் 1789 ஜூன் 14-ல் கொட்டும் மழையில் சுதந்திரம்,சமத்துவம் என முழங்கியபடி பாரிஸ் நகர வீதிகளில் வெடித்த்தில் அதிர்ந்தது உலகம் என்பதை நாங்கள் அறிவோம் ! சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் வாழ்ந்த்தைப் போன்று அடிமையாய் நீங்கள் இருந்த்தைப் போன்று வெடிகுண்டின் அமைதியாய் நிகழ்காலத்திலும் உங்களருகில் வாழும் உங்களை (திருநங்கைகளை )நீங்கள் கண்டதுண்டா? 8 மணிநேர வேலை ! பெண்களுக்கு வாக்குரிமை !பெண்கள் அடிமையாக நடத்தப் படுவதிலிருந்து விடுதலை !என பாரிஸின் ஆண் தொழிலாளர்களோடு சேர்ந்து நீங்கள் பதாகை உயர்த்தியதைக் கண்டு அரசன் லூயி பிலிப் முடித் துறந்தது வரலாற்றுப் பக்கங்களில் இன்றும் மின்னிடும்.ஆனால் வரலாற்றுப் பக்கங்களில் அச்சிடப்படாத,அச்சேறும் காகித்த்துக்கு சொந்தக்காரி உஙகளைப் போன்றே இருந்தாள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா...

ஹைட்ரோ கார்பன்,மீத்தேன்.....

Image
வயலின் உயிராய் புதைந்திருக்கும் ஹைட்ரோ கார்பனை உறிஞ்செடுத்து,பின் நிலக்கரிக்காய் வயலுடலையும் வெட்டியெடுக்க இந்தியாவில் மொத்தம் 31 நிலப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெடுவாசலும் காரைக்காலும் போக மீதி அசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள் என இதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது பெரும் தொழிற்குழுமங்களோடு கூடிக் குலாவும் இந்திய அரசின் போர் அறிவிப்பு தான் `` இந்தியாவின் உழைக்கும் பெருந்திரளான மக்களும்,இயற்கை வளங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய புல்லுருவிகளால் உரிஞ்சப்படும் வரை போர் நிலைமை இன்றும் நீடிக்கிறது.எதிர்காலத்திலும் நீடிக்கும் என நாங்கள் பிரகடனம் செய்கிறோம் . உறிஞ்சுபவன் ஒரு பிரிட்டிஷ் முதலாளியாக இருக்கலாம் அல்லது அவனோடு சேர்ந்த இந்தியனாக இருக்கலாம்,அல்லது தனித்த இந்தியனாகவே இருக்கலாம்....இதனால் ஒன்றும் வேறுபாடு இல்லை. ’’ -பகத்சிங் அவரின் எழுத்தில் எத்தனை தொலைநோக்கு உள்ளடங்கியிருக்கிறது என்பதை மெய்ப்பித்துக் காட்ட அவரின் ...

வஞ்சிக்கப்பட்டோர் தினம்(Transgender Day of Remembarence )

Image
நவம்பர் 20 வஞ்சிக்கப்பட்டோர் தினம்  வஞ்சிக்கப்பட்டோர் தினம் உயிர் நீத்த திருநங்கைகளை நினைவுகூறும் வகையில் இந்நாளை "மாற்றுபாலினத்தோரின் நினைவுதினம்" என்று என் சமூகம் கட்டமைத்து கடைபிடித்து வருகிறது...நானும் அவர்களுடன் இணைந்து இந்நாளை உயர்த்தி பிடிக்கிறேன் இது "வஞ்சிக்கப்பட்டோர் தினம் " என்று இன்னுமொரு பெயரிட்டு!!!!!!! ஆம் !!!!நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் ,வஞ்சிக்கப்படுகிறோம்.. இவ்வுலகில் யாவரையும் விட அதிகமாய் நாங்கள் வஞ்சிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம்...அந்த கருப்பு அடிமைகளை விடவும் ,இந்திய தலித்துகளை விடவும் ,பெண் பாலினத்தை விடவும் நாங்கள் அதிகமாய் வஞ்சிக்கப்படுகிறோம்!!!!! குடும்பத்தை அடிப்படை அலகாக கொண்டு கொத்துகுலையாய் திரட்சியுற்றிருக்கும் பொது சமூகத்தோரே............. உங்களால் நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்பதனை நீங்கள் அறிவீரோ...!!!! குடும்பம் தொடங்கி அரசின் அங்கம் ஒவ்வொன்றிலும் நீங்கள்தான் நீங்களேதான் நிரம்பி இருக்கிறீர்!!!!இதில் எதிலும் நாங்கள் நுழையா வண்ணம் மிகு "எச்சரிக்கையோடு" இருக்கிறீர் இந்த எச்சரிக்கை உணர்வு கொடிய தீண்டாமையின...