உழைக்கும் பெண்கள் தினம்...
அன்பிற்குரிய உழைக்கும் பெண்களே,
உங்களுடைய வாழ்வும் வாழ்வுக்கானப் போராட்டமும் மகத்தானது என்பதை நாங்கள் அறிவோம்! அதேப்போல உங்களைப்போன்று உங்களருகில் உங்களாகவே வாழ்கிற உங்களை நீங்கள் அறிவீரோ!
பல நூறு ஆண்டுகள் அடிமையாய் ,வெடிகுண்டின் அமைதியாய் இருந்த பெண் இனம் 1789 ஜூன் 14-ல் கொட்டும் மழையில் சுதந்திரம்,சமத்துவம் என முழங்கியபடி பாரிஸ் நகர வீதிகளில் வெடித்த்தில் அதிர்ந்தது உலகம் என்பதை நாங்கள் அறிவோம் ! சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் வாழ்ந்த்தைப் போன்று அடிமையாய் நீங்கள் இருந்த்தைப் போன்று வெடிகுண்டின் அமைதியாய் நிகழ்காலத்திலும் உங்களருகில் வாழும் உங்களை (திருநங்கைகளை )நீங்கள் கண்டதுண்டா?
8 மணிநேர வேலை ! பெண்களுக்கு வாக்குரிமை !பெண்கள் அடிமையாக நடத்தப் படுவதிலிருந்து விடுதலை !என பாரிஸின் ஆண் தொழிலாளர்களோடு சேர்ந்து நீங்கள் பதாகை உயர்த்தியதைக் கண்டு அரசன் லூயி பிலிப் முடித் துறந்தது வரலாற்றுப் பக்கங்களில் இன்றும் மின்னிடும்.ஆனால் வரலாற்றுப் பக்கங்களில் அச்சிடப்படாத,அச்சேறும் காகித்த்துக்கு சொந்தக்காரி உஙகளைப் போன்றே இருந்தாள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? 8 மணிநேர வேலைக்காய் அல்ல வாழ்வதற்கே வேலைக் கேட்டுப் போராடும் உங்களின் குரலை நீங்கள் கேட்டதுண்டா ?அரசிடம் வாக்குரிமை அல்ல உங்களிடம் வாழ்வுரிமைக் கோரும் உங்களின் குழந்தைகளை (திருநங்கைகளை )உங்களுக்குத் தெரியுமா?
உங்களின் ஞாயம் புரிந்து அல்லது உங்களின் போர்க்குணம் அறிந்து அமைச்சரவையில் இடமும் வாக்குரிமையும் கொடுக்க 1848 மார்ச் 08 லேயே உத்தரவிட்டான் பிரான்ஸில்,புரிஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங். 2014-லும் எந்த ஜனநாயகத்தாலும் அங்கிகரிக்கப்படாத,ஜனநாயகத்தால் தீட்டு என ஒதுக்கப்படுகிற உங்களருகில் இருக்கிற உங்களை உங்களுக்குத் தெரியுமா?
அமெரிக்காவின் நெசவு ஆலைகளில் குறைவான ஊதியத்தில் 16 மணிநேரம் உங்களின் ரத்தம் உறிஞ்சப்பட்ட்தையும் பல நேரம் ஆண் நிர்வாகத்தின் உடற்பசிக்கு நீங்கள் கொடூரமாய் குதறப்பட்ட்தையும் கனக்கும் நெஞ்சத்தோடு எங்களால் நினைவு கூற முடிகிறது.
அதுமட்டுமல்ல 1857-ல் நியூயார்க்கில் நீங்கள் தனி சக்தியாய் திரளுதல்.
1908-ல் அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்டே நிலைக்குலைந்த உங்களின் வாக்குரிமைக்கானப் போராட்டம்.
1910 கோபன்ஹேகனில் தோழர் கிளாரா ஜெட்கின் தலைமையில் 17 நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துக்கொண்ட மாநாட்டில் பெண்கள் தினத்தை சர்வதேசிய அளவில் நட்த்திட முடிவு செய்தல்.போன்ற மகத்தான நிகழ்வுகளிலிருந்து மகத்தான உணர்வுகளை எங்களால் பெறமுடிகிறது.உழைப்புச் சுரண்டலை எதிர்த்து அணிதிரண்ட,திரளும் உங்களுக்கு உணர்வுச் சுரண்டலைப் பற்றித் தெரியுமா?உங்களப் போன்ற உம்மவரின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஆண்களோடு சேர்ந்து நீங்களும் கொடூரமாக உருஞ்சுகிறீர்கள் என்பதை என்றாவது நீங்கள் உணர்ந்ததுண்டா?
ஜெர்மனி,ஆஸ்திரியா,டென்மார்க் போன்ற நாடுகளிலிருந்து வந்த மகளிர் பிரதிநிதிகளால்,லட்சக்கணக்கானப் பெண்களால் 1911 மார்ச்சிலேயே மகளிர் மாநாடு நட்த்தப்பட்ட்தை வரலாற்றில் படிக்கும்போது இதயம் மகிழ்வு கொள்கிறது.2014-லிலும் இந்நாளுக்கு சொந்தமாகமுடியாமல் இதயம் குமுறும் உங்களைப் போன்றோரை உங்களுக்குத் தெரியுமா?
1911 மார்ச் 25-ம் தேதி நியூயார்க் நகரின் ஆலையில் நடந்த தீ விபத்தில் 140 பெண்கள் கருகி இறந்தபோதுதான் அங்கு உங்களுக்கான சட்டம் இயற்றப்பட்ட்து. சட்டங்களால் தீட்டாக்கப்பட்டு சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு ,உலகில் ஏதோ ஒரு மூளையில் உங்களைப் போன்றே ஆண்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு ,கொலை செய்யப்பட்டு,தற்கொலைக்குத் தள்ளப்பட்டு கிடக்கிற உங்களைப் போன்ற உங்களுக்காகவும் ஏன் உங்களால் போராட முடிவதில்லை. உங்களைத் தடுப்பது எது?
1917லேயே ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட ருஷ்ய வீரர்களுக்காய் போராடினீர்.அங்கே அமைதிக்காகவும் ரொட்டிக்காகவும் போராடினீர்.பிப்ரவரி கடைசி ஞாயிறுகளில் உங்களின் வாக்குரிமைக்காய் கடுமையாய் போராடினீர்.மார்ச் 08 அக்கோரிக்கையை வென்றெடுத்தீர். அந்நாட்டினால் நீங்கள் குடிமக்களாய் கருதப்பட்டீர்.
இதோ 2016 !
இதோ மார்ச் 08 !
இதோ உழைக்கும் பெண்கள் தினம் !
பார்க்க முடிகிறதா உங்களால் உங்களை ! ஆம் !அந்தக் கடைகளில் கைத் தட்டிப் பிச்சைக் கேட்ப்பது உங்களைப் போன்றதொருப் பாலினம்தான் !உங்களால் வீட்டை விட்டு விரட்டியடிக்கப்படும் உங்கள் குழந்தை உங்கள் பாலினம் தான் ! உங்களின் தாயாய் ,மகளாய்,சகோதரியாய்,உங்களோடு வாழ கேட்கிறது உங்களைப் போன்ற பாலினம்,மானுடம்! உங்களின் பதில் என்ன.?
Dear working women,
we know your lives and the struggles for it are great! But do you know us, who are living along you , as one of you! Enslaved for centuries, with the peace of bomb, women exploded on 1789 june 14 in the rainy streets of paris calling for freedom and equality. Just like you were a few centuries ago, are you aware of us(transwomen) who are living enslaved and peacefully at present near you? 8 hours working time, voting rights for women, freedom for women, when you rose banners along with working men of paris, the dethroning of louis philip glitters in the pages of history. But the one who wove those pages and were never printed on it, do you know her. Not for 8 hours working time but struggling for just living, not for voting rights but living right, do you know you are children(transwomen) fighting for such?
Understanding your just stand or aware of your warring nature in 1848 march 09 louis plang who established the second democracy in the world shared ministries with you. But do you know us who are untouchables to democracies in 2014?
we can understand you struggling in the weaving factories of america for 16 hours everyday, sexually abused by the masculine office. Also your protests in 1857 newyork. Your protest for voting rights in 1908 that shook roosevelt.
In 1910 copenhagen under comrade clara jetkin’s leadership women representatives of 17 countries decided the women’s day international celebrations. We can understand your great emotions and get great inspirations from them. But you who protest work exploitaion are aware of emotional exploitation? People like you, and of you are exploited by you along with men, do you ever felt this?
My heart is filled with mirth reading about women representatives from germany, austria, denmark celebrating women’s meeting with lakhs of women in 1911 march. But do you know those who cant claim this day still inn 2014? laws are written after 140 women died in a fire accident in newyork on 1911 march 25 in a factory. But you cant protest for us who are untouchables to the law, raped by men throughout the world like you, killed and pushed towards suicide. What stops you?
You fought for thousands of russian soldiers killed in 1918. you fought for peace and bread there. For you voting rights in the last sundays of february and won it in march 08. you were recognised as the citizens of the country.
here’s 2016
here’s march 8
here’s working women’s day
can you see you yes, those begging in those shops clapping hands share your gender. Your children thrown out of your homes. Your gender that asks to live together as you mother, daughter, sister. what’s you answer?
...மதிப்பிற்குரிய மங்கை பானு
#WomensDay
#InternationalWomensDay
#TransLivesMatter
#சர்வதேசமகளிர்தினம்
#மகளிர்தினம்
Pray for a girl child, protect her, give her good platform to empower herself, enjoy her naughty deeds, give her the independence, respect her decisions, constantly motivate her to be strong and respect humanity.
ReplyDeleteLets ensure "Gender Equality" and Respect Women as Human beings.
Happy International Women's Day...
❤️