ஹைட்ரோ கார்பன்,மீத்தேன்.....

வயலின் உயிராய் புதைந்திருக்கும் ஹைட்ரோ கார்பனை உறிஞ்செடுத்து,பின் நிலக்கரிக்காய் வயலுடலையும் வெட்டியெடுக்க இந்தியாவில் மொத்தம் 31 நிலப்பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நெடுவாசலும் காரைக்காலும் போக மீதி அசாம் மாநிலத்தில் 11 இடங்களும், ஆந்திர மாநிலத்தில் 4 இடங்களும், ராஜஸ்தானில் 2 இடங்களிலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 4 இடங்களிலும் மற்றும் குஜராத் மாநிலத்தில் 5 இடங்கள் என இதற்கான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது பெரும் தொழிற்குழுமங்களோடு கூடிக் குலாவும் இந்திய அரசின் போர் அறிவிப்பு தான்

``இந்தியாவின் உழைக்கும் பெருந்திரளான மக்களும்,இயற்கை வளங்களும் விரல்விட்டு எண்ணக்கூடிய புல்லுருவிகளால்
உரிஞ்சப்படும் வரை போர் நிலைமை இன்றும் நீடிக்கிறது.எதிர்காலத்திலும் நீடிக்கும் என நாங்கள் பிரகடனம் செய்கிறோம் .
உறிஞ்சுபவன் ஒரு பிரிட்டிஷ் முதலாளியாக இருக்கலாம் அல்லது அவனோடு சேர்ந்த இந்தியனாக இருக்கலாம்,அல்லது
தனித்த இந்தியனாகவே இருக்கலாம்....இதனால் ஒன்றும் வேறுபாடு இல்லை.
’’
-பகத்சிங்
அவரின் எழுத்தில் எத்தனை தொலைநோக்கு உள்ளடங்கியிருக்கிறது என்பதை மெய்ப்பித்துக் காட்ட அவரின் பிரகடனம்
நெடுவாசல்,கதிராமங்களம் வரை வந்து ஒலி்க்கிறது.

தண்டகாருண்ய பகுதிகளில் ஒலிக்கும் அதே குரல்கள் தான்...போஸ்கோ திட்டத்தை எதிர்த்து ஒரிசாவில் எழும் அதே குரல்கள்
தான்,ராஜஸ்தானில் கடுகை மரபணு மாற்றம் செய்யப்படுவதை எதிர்த்த அதே குரல்கள் தான்.நெடுவாசலிளும் ஒலிக்கிறது.இன்னும் மற்ற இடங்களிலும் ஒலிக்க இருக்கிறது.
கடல்,வயல்,மலை என அனைத்திலும் நச்சு தர்பார் உச்சத்தில் நிற்கிறது.தாது பொருட்களுக்காக மலைகளை
உடைப்பதும்,எரிவாயுகளுக்காக வயல்களை உறி்ஞ்சுவதும்,கழிவுகளைக் கொட்டி கடலின் பவள வளத்தை அழிப்பதுமாக
லாபவெறி பரந்து விரிகிறது.உலகமயமாக்களுக்கு பின்பு அதி வேகம் எடுத்திருக்கும் லாப வெறியை மக்கள் தற்போது உணரத்
துவங்கியிருக்கிறார்கள்.25 ஆண்டு காலம் உலக வர்த்தக கழகத்தின் கொடும் விளைவுகளைப் பற்றி போதுமான அக்கறை
கொள்ளாமல் பிசுபிசுத்த நிலமாயிருந்த மக்கள் தற்போது தன் சொந்த அனுபவத்தின் மூலம் முழங்க
துவங்கியிருக்கிறார்கள்.பிசுபிசுப்பிலிருந்து பற்றி எரிவதற்கான உலர்ந்த காடாய் தங்களைத் தாங்களே முழக்கங்களின் மூலம், பல வகையான போராட்டங்களின் மூலம் உருமாற்றி வருகிறார்கள். பன்னாட்டு தொழிற்குழுமங்களோடு
கூடிக் குலாவும் இந்திய அரசு,இதுவரையில் அதனால் இயற்றப்பட்டு அதனால் விரிவாக்கப்பட்டு அதனால் கடைபிடிக்கப் பட்ட சட்டங்களை அதுவே கிழித்தெரிகிறது. பழைய சட்டங்கள் யாவும் பெரும் தொழிற்குழுமங்களின் கழிவரைக் காகிதங்களாக சிதறிக்கிடக்கிறது.தான் கொல்லப் படுவதற்கு ஒருவருடத்திற்கு முன்னால் சேகுவேரா எழுதினார் ``நிறுவப்பட்ட சட்டத்திற்கெதிராக,ஒடுக்குகிற சக்திகள் ஆட்சியில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள வரும் போது, ஏற்கனவே அமைதி உடைந்து போனதாகத்தான் கருத வேண்டும்.” சேவின் இவ்வார்த்தைகள் ஒரு முழுமையான சர்வாதிகாரத்தை தெளிவாக வரையருக்கிறது.1975 ஜூன் 25 நள்ளிரவில் இந்திரா அறிவித்த அந்த அவசர நிலை பிரகடன அறிவிப்பு இன்றைய மோடியின் ஆட்சி வரையில் சிறு நெகிழ்வுத் தன்மையை மட்டும் உள்ளடக்கி அப்படியே நீடிக்கிறது.வாழ்வாதார கோரிக்கையை ஓரிடத்தில் கூடி உரைப்பதற்கும் இரவு 10 மணிக்கு மேல் தேனீர் சுவைக்கவும் அனுமதி மறுத்து ஒரு வகையான பய உணர்விலேயே நாட்டு மக்களை வைத்திருக்க நினைக்கிறது,இயற்கை வளத்தை உரிஞ்சும் திட்டங்களின் அறிவிப்பால் தன் சொந்த மக்களின் மீதே போர்பிரகடணம் செய்கிறது கார்ப்ரேட்டுகளின் கைக்கூலி ஆட்சி..
என்ன செய்யப் போகிறோம்...?

``நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டுமென்று எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்..!
-தோழர்.மா-சே-துங்.





...மதிப்பிற்குரிய மங்கை பானு

Comments

Popular posts from this blog

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016

போர் பறவைகள்

உலகப் பெண்களே வாழ்த்துக்கள்…!Wishes to all women of the world..!