வஞ்சிக்கப்பட்டோர் தினம்(Transgender Day of Remembarence )

நவம்பர் 20வஞ்சிக்கப்பட்டோர் தினம்

 வஞ்சிக்கப்பட்டோர் தினம் உயிர் நீத்த திருநங்கைகளை நினைவுகூறும் வகையில் இந்நாளை "மாற்றுபாலினத்தோரின் நினைவுதினம்" என்று என் சமூகம் கட்டமைத்து கடைபிடித்து வருகிறது...நானும் அவர்களுடன் இணைந்து இந்நாளை உயர்த்தி பிடிக்கிறேன் இது "வஞ்சிக்கப்பட்டோர் தினம் " என்று இன்னுமொரு பெயரிட்டு!!!!!!!
ஆம் !!!!நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் ,வஞ்சிக்கப்படுகிறோம்..

இவ்வுலகில் யாவரையும் விட அதிகமாய் நாங்கள் வஞ்சிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம்...அந்த கருப்பு அடிமைகளை விடவும் ,இந்திய தலித்துகளை விடவும் ,பெண் பாலினத்தை விடவும் நாங்கள் அதிகமாய் வஞ்சிக்கப்படுகிறோம்!!!!!

குடும்பத்தை அடிப்படை அலகாக கொண்டு கொத்துகுலையாய் திரட்சியுற்றிருக்கும் பொது சமூகத்தோரே.............

உங்களால் நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்பதனை நீங்கள் அறிவீரோ...!!!!
குடும்பம் தொடங்கி அரசின் அங்கம் ஒவ்வொன்றிலும் நீங்கள்தான் நீங்களேதான் நிரம்பி இருக்கிறீர்!!!!இதில் எதிலும் நாங்கள் நுழையா வண்ணம் மிகு "எச்சரிக்கையோடு" இருக்கிறீர் இந்த எச்சரிக்கை உணர்வு கொடிய தீண்டாமையின் வடிவம் .அது எங்களை கொல்லும் கொடிய கொலை கருவியும் கூட அதை நீங்கள் பார்ப்பனர்களை விடவும், பார்ப்பினியத்தை விடவும், நிற வெறியர்களை விடவும்,ஆணாதிக்கர்களைவிடவும் மிகவும் லாவகமாய் பயன்படுத்துகிறீர் !!!!

இந்த லாவகத்தின் வடிவம்தான் "வஞ்சனை".இது நஞ்சைவிட கொடியது என்பதை இதை பருகும் எங்களால் தான் உணரமுடியும்.
உங்களுடைய இக்கொடிய வஞ்சனையாள் எவ்வளவோ திறமைகள்,பேராழுமைகள் ,மாமனித பேருருக்கள் புற உலகில் உயிர்க்க முடியாமல் அந்த கல்லறையில் புதைக்கப்பட்டிருக்கிறது!!!இப்போது நாங்கள் அனுபவிப்பதை விடவும் எம் முன்னோர்கள் அனுபவித்த கொடுமை மிக கொடியது.அவர்களின் நினைவுகள் என் சிந்தையில் நிழலாடும்போதெல்லாம் உங்களின் உயிருருக்கள் அணுக்களினால் அல்ல கற்களினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதாய் நான் புரிந்து கொள்வேன் !!!

கற்களால் சமைக்கப்பட்ட வஞ்சனை நிறைந்த உங்களின் உயிருருக்களை உடைத்து மானுட பேருருவாய் மாற்றிட ..

இதோ !!!
நாங்கள் எங்களின் மூத்தோர் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறோம்.பசும் புல்லைபோன்று அல்ல கடும்

உலியை போன்று !!!!

எங்களின் முழக்கத்தாலும் ,போராட்டத்தாலும் இவ்வுலகை நாங்கள் செதுக்குவோம்!!!!!நிச்சயம் பாலின சமத்துவம் படைப்போம்!!!என்று கல்லறையில் உறங்கும் எம் முன்னோர் மீது இந்நாளில் ஆணையிட்டு கூறுகிறேன்.....!!!!














Image result for transgender tara death tamilnadu

My community has named this day Transgender Day of Remembrance in memory of transwomen and transmen who have lost their lives. I stand with them in holding up this day, with a new name "Day of the Betrayed"br
Yes. We were betrayed, we are and we are continuously being betrayed more than anyone else in this world. More than those black slaves, the dalits of India and cis-women.
The public who are bred with family as the building block, do you know we are betrayed by you! You are everywhere from family to state! And are being "careful" about denying us entry everywhere. This "carefulness" is apartheid. It's a murder weapon against us. You use it more fluently than brahmins, Brahmanism, racism or male chauvinism. That effluence is betrayal. And only us who had a taste of it knows how poisonous it is.

This betrayal of yours have prematurely sent number of talents, personalities, gifts of humanity to grave. What we experience today is much less than what our elders faced. Whenever their memories float up I think your cells must have been made of stone. To break your stone made cells of betrayal and make then human. Now!
We arise from the graves of our elders.
Not as tender grass, But as tough chisels.
We'll shape this world with our protests and battle cry.

 In this day, I promise on the graves of my elders that we'll build a world of gender equality.






Comments

  1. புகை படங்களில் பெயர்கள் குறிப்பிடவும்

    ReplyDelete
  2. உங்களுடன் இணைந்து கைகோர்த்து நாங்களும் பயணிப்போம் தோழர். எந்த விதமான அத்துமீறலையும் இந்த உலகம் கைவிடும் வரை...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016