Posts

கருணைக் கொலை செய்யுங்கள்…!

Image
கருணைக் கொலை செய்யுங்கள்…! இந்தியாவின் பிரதமர் அவர்களுக்கும் குடியரசு தலைவர் அவர்களுக்கும்… வணக்கம்…!     இந்த ’’சுதந்திர’’ தேசத்தில் இம்மண்ணின் மைந்தர்களாகப் பிறந்து ரத்த உறவுகளால்,சொந்த அரசினால்,சுற்றி நிற்கும் சமூகத்தினால் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தோர் அனுபவிக்கும் கொடிய துக்கம் சிந்தும் வெண் ரத்தத்தையும் செங்குருதியையும் மையாய் உறிஞ்சி எழுத்துக்களாய் உருட்டி உங்களுக்கு கடைசிய்யாய் ஒரு கோரிக்கை வைக்கிறேன் எங்களைக் கருணைக் கொலையாவது செய்யுங்கள்…!     ’’மாற்றுப் பாலினத்தோர் பாதுகாப்பு மசோதா 2016(The Transgender Persons(Protection of Rights)bill,2016 ’’ல் இந்திய ஜனநாயகம் அதன் உட்கரு ஆற்றலைத் துறந்து ஒரு வகையான வினோத நச்சு செயல்களை எங்கள் மீது உமிழ்ந்து வருகிறது.நீங்கள் உமிழும் நச்சுப் பட்டு எங்கள் உயிர் துடி துடித்துக் கொண்டிருக்கிறது…துடிதுடிப்பின் சித்ரவதையை விட உயிர் துறப்பு எவ்வளவோ மேலானது.அகையினால் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள்…! அரசியலமைப்புச் சட்டமும் நீதித்துறையும் நிர்வாகமும் பிரிதிநிதித்துவ அவைகளும் ஒன்ற...

Day of the Betrayed(Transgender Day of Remembarance)

Image
TRANSGENDER DAY OF REMEMBARANCE ,NOVEMBER-20 My community has named this day Transgender Day of Remembrance in memory of transwomen and transmen who have lost their lives. I stand with them in holding up this day, with a new name " Day of the Betrayed "br Yes. We were betrayed, we are and we are continuously being betrayed more than anyone else in this world. More than those black slaves, the dalits of India and cis-women. The public who are bred with family as the building block, do you know we are betrayed by you! You are everywhere from family to state! And are being "careful" about denying us entry everywhere. This "carefulness" is apartheid. It's a murder weapon against us. You use it more fluently than brahmins, Brahmanism, racism or male chauvinism. That effluence is betrayal. And only us who had a taste of it knows how poisonous it is. photo courtesy by: Sanghapaliaruna This betrayal of yours have prematurely sent number of ...

மாற்றுபலினத்தவர் மீதும் அக்கறை கொண்ட தோழர்.கௌரிலங்கேஷ்

Image
கடந்த மாதம் காட்டாட்சியின் கொலை ஆயுதங்களால் உசுரிழந்தார்கள் தமிழகத்தில் வளரும் லங்கேஷும் கன்னடத்தில் வளந்த அனிதாவும்.அனிதாவின் கழுத்தை இறுக்கியது தூக்குக் கயிறாக இருக்கலாம்,லங்கேஷை துளைத்தது துப்பாக்கித் தோட்டாக்களாக இருக்கலாம்.ஆனால் அதை எய்த கைகள் ஒன்றுதானே…! அந்த கரங்கள் தானே மஹராஷ்ரத்தில் 21.08.2013 அன்றின் காலைப் பொழுதின் முகத்தில் நரேந்திர தபோல்கரின் ரத்தத்தை பூசி சென்றது…!அந்த கரங்கள் தானே 19.02.2015 அன்று அதே மஹராஷ்ரத்தில் அதேப் போன்றதொரு காலைப் பொழுதின் முகத்தில் கோவிந் பன்சாரேவின் ரத்தத்தைப் பூசி சென்றது.கெளரியையும் கல்புர்கியையும் பன்சாரேவையும் ஒரே பானியிலேயே அவர்கள் கொன்றிருக்கிறார்கள் அது மோட்டார் சைக்கிள்,முகமூடி, 7.6 எம்.எம். அளவுள்ளத் துப்பாக்கி.இதுவே அவர்களின் பானியாக இருக்கிறது.அவர்களின் இந்த பானியால் சமூக செயல்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள் போன்றோரின் மனங்களில் மரண பயத்தை விதைக்க நினைக்கிறார்கள்.அத்தகைய நினைப்பிற்கு நீரூற்றி வேலியடித்து அதற்கு ஒன்றும் நேர்ந்திடாதவாறு காத்து வருகிறது பி.ஜே.பி.ஆட்சி. அவர்கள் அந்த மசூதி இடிப்பைப் போன்றே,அந்த ரத யாத்திரையைப் போன்றே,க...

திருநர் தீட்டாத வீடோவியம்..!!!!!

Image
 திருநர் தீட்டாத வீடோவியம்..!!!!! மனித சமூகம் நாகரீகம் அடைந்ததின் ஒரு குறியீடு வீடு. சமூகத்தில் வீடு வகிக்கும் பாத்திரம் மகத்தானது.உயிரற்ற கல்லும் மண்ணும்,கூரையும் ஓலையும்,தரையும் தளமும் உயிருள்ள ரத்த உறவுகளின் உணர்வுகளை குழைந்து எழுந்து நிற்கும்.சில பழங்காலத்து வீடுகள் மரபுவழிப்பட்ட தங்கள் உறவுகளின் உயிரோட்ட உணர்வுகளை கடத்திக் காட்சிப் படுத்தும் அற்புத அமைப்பாக இயங்கும்.அந்த அமைப்பின் ஏதோ ஒரு பகுதி சிதிலமடைந்தால் அங்கே வசிக்கும் உசுருகள் பதறித் துடிக்கும்.ஏனெனில் அது அவர்களின் முன்னோர் கல்லாலும் மண்ணாலும் வரைந்திட்ட வீடோவியம். சில புது வீடுகள் அங்கே குழுமி வாழும் ரத்த உறவுகளின் இன்பங்களை ரசித்து சுவைக்கும்.சில சமையம் இவர்களை உறசிச் செல்லும் துன்பங்களைக் கண்டு மனம் வெதும்பும்.ஏனெனில் இவர்கள் தங்களின் நிம்மதியின் இன்பத்திற்காகவே அந்த வீடோவியத்தை வரைந்திருக்கிறார்கள். இன்றைக்கு பல்வேறு காரணங்களால் மக்கள் தங்கள் வீட்டோவியத்தை இழந்து நிற்கிறார்கள்.  பொருளாதார வெறி உச்சமடைந்து போர் வெறியாக மாறும் போது தனது பீரங்கிகளால், எளிய மனிதர்கள் வரைந்திட்ட வீட்டோவியத்தை பெயர்த...

அனிதாக்களே உங்களுக்காக............

Image
என்னுள் இயங்கும் பாலுயிரியை வெளிபடுத்திட அவ்வுயிரில் வாழ்ந்திட தொடைக்கு நடுவே மூன்றங்குலம் தொங்குகிற ஆணுறுப்பை அறுத்தெரிந்து ,ரத்ததில் நனைந்து “ திருநங்கை ”யாய் மலர்ந்தேன் .அது ஒரு பேரானந்தம் என்றே மகிழ்ந்தேன்.ஒரு சுய பாலுயிரியாய் சிறகை விரித்தேன்.சிறுவயதாய் இருந்த அப்போதெல்லாம் எனக்கு தெரியாது,சுயமாய் சிறகைவிரித்தால் பொதுச்சமூகம் எனும் மேகம் என் மீது மலத்தை மட்டுமே பொழியுமென்று..! எங்களை ஏளனமாய் பார்க்கும் பொதுச்சமூகத்தின் கண்கள் நாற்றமெடுக்கும் ஒரு மலக்குவியலைப் போலவே என்னுள் ஒரு கற்பனை உருவை உருவாக்கி வைத்திருந்தேன் .பெரும்பாலும் இது உண்மையும் கூட!அதனாலயே என் சமூகம் நாற்றமெடுக்கும் இந்த பொதுச்சமூகத்திடமிருந்து ஒதுங்கியே வாழ்ந்து வருகிறது. எங்களிடம் பொதுச்சமூகம் காட்டும் பாகுபாடு என்பது ஒரு கருப்பினத்தவரிடம் வெள்ளை வெறியன் காட்டும் பாகுபாட்டை விட ,ஒரு அருந்ததியர் மீது சாதிய வாதிகள் சுமத்திய பீக்கூடையை விட மிகக்கொடியது.அதை ஒவ்வொரு நாளும் நாங்கள் உணர்ந்தாலும் சமீபத்தில் சென்னை புழல் சிறையில் நான் கண்ட   வேதனையினால் இவர்கள் எவ்வளவு பெரிய கொடூரர்கள் என்பதை மேலதிகமா...

உயிர் வளியில்லா அரசும்...!உயிர் வலி கொண்ட தேசமும்...!

Image
உயிர் வளியில்லா அரசும்...!உயிர் வலி கொண்ட தேசமும்...! பச்சை உடம்புக்காரிக்கு குழந்தை வந்த தடத்தின் ரணம் இன்னும் அப்படியே இருக்கிறது . இருபது நாட்களும் மழலையின் முகம் மட்டுமே அவளின் உடல் ரணத்தை ஆற்றும் பெரும் மருந்தாக இருக்கிறது . ரோஜாவின் நிறத்தை பூசி , அறுத்த தொப்புள் கொடியின் துண்டு இன்னும் உலர்ந்து உதிராமல் , மினுக், மினுகென கண்களை உருட்டி , அழுகையாலும் புன்னகையாலும் தன் வாழ்விற்காக பேரற்தத்தைக் கொடுத்த பூ சிசுவைப் பார்த்து மகிழ்வாள் தீபா . ஆஹா… இவ்வுலகில் குழந்தையை ஈன்றெடுத்த தாயின் மகிழ்விற்கு நிகரொன்று உண்டோ!எனும் பெருமிதத்தோடு பிரம்மித்து வந்தால் அவள்.அங்கே இவளின் குழந்தை சத்தமிட்டாள் இவளின் ரத்த நாளங்கள் கதறித் துடிக்கும்,அம்மழலை புன்னகை சிந்தினால் இவளின் இதயம் பூத்துக் குலுங்கும் பசியால் அச்சிசு பீறிட்டழுதால் “கண்ணே….செல்லமே….இங்கே வா….”என படற காத்திருக்கும் முல்லைக்கொடியைப் போல இவளின் முலைக்காம்பு மழலையின் வாய் தேடி அலையும் . இப்படித்தான் சென்றது ஒவ்வொரு நொடியும் இந்த இருபது நாளும் தீபாவின் கணவர் பழனிக்கும் பேரானந்தம்.மழல...

மழையில் நனையா பூச்சிகளிடமிருந்து கற்றுகொண்ட பாடம்...

Image
நான் பிறந்ததிலிருந்து பார்த்திராத ஓர் அழகிய காட்சியை இன்றைய இரவில் கண்டேன்...!  அப்பப்பா.... அப்படியொரு பேரழகு அக்காட்சியில்..!  அதுதானோ இயற்கை எழில்..!  திடீரெனெ தூவும்,பெய்யும் இந்த ஆடி மழை...!  நம் தலைமயிரின் நுனியில் பூக்கும் லேசான மழை விதை அது.நான் இறங்கிய பேருந்து நிறுத்தத்தில் ஓங்கி வளர்ந்த இரும்பு கம்பத்தின் முனையில் நாற்புறமும் பிரகாசமாய் எரியும் விளக்கொளி.அந்த ஒளி பிரகாசத்தின் கீழ் வான் மேகம் வெண்ணிற மழை விதையை தூவும் காட்சி அற்புதமாய் மிளிர்ந்தது.மின் விளக்கொளியில் மிளிரும் கணக்கில்லா வெண் விதைத் தூவலின் ஈரம் படாமல், பிரகாசிக்கும் விளக்கொளியை நோக்கி பறக்கிறது சில சிறு பூச்சிகள்....!    எவ்வளவு அசாத்திய தையிரியம் இச்சிறு பூச்சிகளுக்கு என்பதை எண்ணி பிரம்மித்து போனேன். மழையில் நினைந்த வாரே ஓரம் நின்று அக்காட்சியை கூர்ந்து நோக்கலானேன். இதுவரையில் காற்றின் இசைக்கு தலை அசைத்த இலைகள் மழைத்துளிகளின் முத்தமிடலுக்கு சொக்கி கிடக்கும் போது, தன் ரெக்கையில் சிறு நீர்த்துளிப் பட்டாலே புவியில் வீழ்ந்து போகும் இச்சிறு பூச்சிகளுக்கு மட்டும் சொக்காமல் ...