மழையில் நனையா பூச்சிகளிடமிருந்து கற்றுகொண்ட பாடம்...

நான் பிறந்ததிலிருந்து பார்த்திராத ஓர் அழகிய காட்சியை இன்றைய இரவில் கண்டேன்...! 
அப்பப்பா.... அப்படியொரு பேரழகு அக்காட்சியில்..! 
அதுதானோ இயற்கை எழில்..!
 திடீரெனெ தூவும்,பெய்யும் இந்த ஆடி மழை...!
 நம் தலைமயிரின் நுனியில் பூக்கும் லேசான மழை விதை அது.நான் இறங்கிய பேருந்து நிறுத்தத்தில் ஓங்கி வளர்ந்த இரும்பு கம்பத்தின் முனையில் நாற்புறமும் பிரகாசமாய் எரியும் விளக்கொளி.அந்த ஒளி பிரகாசத்தின் கீழ் வான் மேகம் வெண்ணிற மழை விதையை தூவும் காட்சி அற்புதமாய் மிளிர்ந்தது.மின் விளக்கொளியில் மிளிரும் கணக்கில்லா வெண் விதைத் தூவலின் ஈரம் படாமல், பிரகாசிக்கும் விளக்கொளியை நோக்கி பறக்கிறது சில சிறு பூச்சிகள்....! 
 Related image
எவ்வளவு அசாத்திய தையிரியம் இச்சிறு பூச்சிகளுக்கு என்பதை எண்ணி பிரம்மித்து போனேன். மழையில் நினைந்த வாரே ஓரம் நின்று அக்காட்சியை கூர்ந்து நோக்கலானேன். இதுவரையில் காற்றின் இசைக்கு தலை அசைத்த இலைகள் மழைத்துளிகளின் முத்தமிடலுக்கு சொக்கி கிடக்கும் போது, தன் ரெக்கையில் சிறு நீர்த்துளிப் பட்டாலே புவியில் வீழ்ந்து போகும் இச்சிறு பூச்சிகளுக்கு மட்டும் சொக்காமல் பறக்கும் துணிச்சல் எங்கிருந்து வந்தது...?அடுத்தடுத்து அடுக்கடுக்காய் வரும் எண்ணிக்கையில்லா வெண் விதையில் நினையாமல் ஒளி நோக்கி மட்டுமே எவ்வளவு துள்ளியமாய் பாய்கிறது இவைகள்.என பிரம்மித்து தூரலில் நின்ற எனக்கு, இப்பூச்சிகள் ஆசான்களானது.அவைகளுக்கு நான் மாணவியானேன்...! ரத்த உறவுகள் செத்து,அரசுகள் கெடுத்து,சமூகம் ஒதுக்கி, பிணமாய் இயங்கும் என் போன்ற பாலினத்திற்கு அற்புத ஆசான்கள் அச்சிறுப்பூச்சிகள்.அவைகளிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது எங்களுக்கு. தெற்காசிய பிராந்தியத்தில் விரிவாதிக்க திட்டத்தோடும் தம் தேச மக்களின் உரிமைகளை மேலும் மேலும் சுருக்கியும் வரும் இந்திய தேசத்தை எதிர்த்து அரசியல் புரிய இச்சிறு பூச்சிகளின் முயற்சி வேண்டும் எங்களுக்கு.திக்குத் தெசை தெரியாமல் நீங்கள் மட்டுமே உரிமை கொள்ளும் உங்கள் வீதிகளில்,எங்கள் வயித்துப் பசியைப் போக்க உங்களிடம் பிச்சைக் கேட்கும் எங்களுக்கு சில்லறைக் காசகளை வீசும் துற்நாற்றமடிக்கும் உங்களின் நச்சுப் பார்வையை கடக்க அச்சிறு பூச்சிகளின் போர் கரங்களான அந்த ரெக்கைகள் வேண்டும். 
Image result for transgender rights bill india
மாநிலங்களவையில் ஒன்றும் மக்களவையில் ஒன்றும் என வித வித மசோதக்களை இயற்றி எங்கள் வாழ்வு பறிக்கும் உங்களின் புதுவித அடக்குமுறைகளில் சிக்காமல் எங்களின் விடுதலை இலக்கை அடைய அச்சிறுப் பூச்சிகளின் அசாத்திய தையிரியம் வேண்டும் எங்களுக்கு. எங்களை இழிவு செய்து வாழும் பொதுச் சமூகமே... எங்களின் உரிமைகளை மறுக்கும் அரசு இயந்திரமே..... எங்களின் உறவை விலக்கி குழுமி வாழும் ரத்த உறவுகளே.... இதோ மழையில் நனையா இப்பூச்சிகளிடமிருந்தும் நாங்கள் கற்றுக் கொள்வோம்.ஏனெனில் நாங்கள் இழப்பதற்கு ஏதுமில்லை.ஆனால் வெல்வதற்கு நீங்கள் இருக்கிறீர்கள். அதன் பிறகு மாமேதை மார்க்ஸ் கூறியது போன்று உழைப்போரோடு சேர்ந்து வெல்வதற்கு இப்பொன்னுலகம் காத்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016