அனிதாக்களே உங்களுக்காக............
என்னுள் இயங்கும் பாலுயிரியை வெளிபடுத்திட
அவ்வுயிரில் வாழ்ந்திட தொடைக்கு நடுவே மூன்றங்குலம் தொங்குகிற ஆணுறுப்பை அறுத்தெரிந்து
,ரத்ததில் நனைந்து “திருநங்கை”யாய் மலர்ந்தேன் .அது ஒரு பேரானந்தம் என்றே மகிழ்ந்தேன்.ஒரு
சுய பாலுயிரியாய் சிறகை விரித்தேன்.சிறுவயதாய் இருந்த அப்போதெல்லாம் எனக்கு தெரியாது,சுயமாய்
சிறகைவிரித்தால் பொதுச்சமூகம் எனும் மேகம் என் மீது மலத்தை மட்டுமே பொழியுமென்று..!
எங்களை ஏளனமாய் பார்க்கும் பொதுச்சமூகத்தின்
கண்கள் நாற்றமெடுக்கும் ஒரு மலக்குவியலைப் போலவே என்னுள் ஒரு கற்பனை உருவை உருவாக்கி
வைத்திருந்தேன் .பெரும்பாலும் இது உண்மையும் கூட!அதனாலயே என் சமூகம் நாற்றமெடுக்கும்
இந்த பொதுச்சமூகத்திடமிருந்து ஒதுங்கியே வாழ்ந்து வருகிறது.
எங்களிடம் பொதுச்சமூகம் காட்டும் பாகுபாடு
என்பது ஒரு கருப்பினத்தவரிடம் வெள்ளை வெறியன் காட்டும் பாகுபாட்டை விட ,ஒரு அருந்ததியர்
மீது சாதிய வாதிகள் சுமத்திய பீக்கூடையை விட மிகக்கொடியது.அதை ஒவ்வொரு நாளும் நாங்கள்
உணர்ந்தாலும் சமீபத்தில் சென்னை புழல் சிறையில் நான் கண்ட வேதனையினால் இவர்கள் எவ்வளவு பெரிய கொடூரர்கள் என்பதை
மேலதிகமாகவே உணர்ந்தேன்.
பிச்சையெடுக்கும் கரங்கள் புத்தகங்களை
ஏந்த வேண்டும்,பாலியல் தொழிலுக்குத் தள்ளப்பட்ட என் பாலினம் அதிகார பதவிகளில் அமரவேண்டும்
என்ற தீரா வேட்கை தான் ,நான் பட்ட இன்னல்களை தான்,அனிதாவை என் சொந்த சகோதரியாக உணர வைத்தது .ஒரு வகையில் நானும் அவளும் ஒன்றே!
நான் பாலினத்தால் ஒடுக்கப்பட்டவள் அவள் சமூகத்தால் ஒடுக்கபட்டவள் .”ஒரு ஒடுக்கப்பட்டவரின் வலியை ஒரு ஒடுக்கபட்டவரால் தான் அதிகமாக புரிந்துகொள்ளமுடியும்
“என்று கவிஞர் இன்குலாப் கூறிய வார்த்தைகளை இக்கணம் நினைவு கூறுகிறேன்.உண்மைதான் !அவருடைய
வார்த்தைகளில் பேருண்மை புதைந்து கிடக்கிறது.தங்கை அனிதா இறப்பதற்கு முன்னால் எத்தகைய
வலியை உணர்ந்திருப்பாள் என்பதை என்னால் புரிந்து
கொள்ள முடியும் .ஏனெனில் நான் அதை கடந்து வந்தவள்.அதனாலயே போராட தூணிந்தேன் .இனிமேலும்
எந்த அனிதாவும் புதையக்கூடாது என்பதற்காக வீதிக்கு வந்தேன்.
அவள் உயிரை பறித்த ஆயுதம் சுறுக்கு
கயிறு அல்ல “உலக வர்த்தக கழகம்”.அந்த ஆயுதத்தை தன் கரங்களில் ஏந்தி அவளை கொலை செய்தது
இந்திய அரசும் ,தமிழக அரசாங்கமும் என்று எல்லோரும் மூடி மறைக்கும்!உண்மையை உலகுக்கு
உரைக்க சென்னையிலுள்ள அறிவுசார் சொத்துரிமை அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டம்
தோழர்கலோடு சேர்ந்து நடத்தினேன் .
”கல்வியை விற்காதே..!”
“இந்திய அரசே….உலக வர்த்தக கழகத்திலிருந்து
வேளியேறு…!”
என
முழங்கினோம்.இறுதியில் தமிழக போலிஸினால் கைது செய்யப்பட்டோம் !நானும் என்னுடன் வந்த
மோனல் என்ற இன்னொரு திருநங்கைத் தோழியும் புழல்
பெண்கள் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டோம்.
சிறையின்
முகவாயிலின் ஓரம் உள்ள சோதனை அறையில் நானடைந்த அவமானமும் அதனால் எனக்கேற்பட்ட பெரும்
துயரும் இவ்வுலகில் யாருக்காவது ஏற்பட்டிருக்குமா என்றால் அது சந்தேகத்திற்குரியதே….!
இருபெண்
காவலர்கள் என் ஆடைகளை களைந்து சோதனை இடவேண்டுமென்று கூறுகிறார்கள் அதற்கு நான் மறுப்பு
தெரிவிக்கிறேன் .அவர்கள் என்னை அதிகார தோரணையில் மிரட்டுகிறார்கள் .நான் உறுதியோடு
நிற்கிறேன்.”இது ஜனநாயகத்திற்கு விரோதமானது நான் ஒரு அரசியல் கைதி “என கூறுகிறேன்.ஆனால்
அவர்களோ “நீ அரசியல் கைதியா இருந்துட்டுபோமா,இது பெண்கள் சிறை நீ ஆணா?அல்லது திருநங்கையான்னு
எங்களுக்கு தெரியனும் என்று கூறி அந்த பெண் காவலர்கள் தங்களுக்கிடையில் ஒரு வகையான
சிலுமிஷப் பார்வையை பரிமாறிக்கொள்கிறார்கள் அதைக்கண்ட எனக்கு துக்கம் தொண்டையடைக்கிறது
.”நான் அறுத்து போட்டவ,நான் திருநங்கைதான் என்னை சிறையில் அடைப்பதற்கு முன் போலிசார்
மருத்துவரிடம் கூட்டிச்சென்று சோதனை செய்த பிறகே இங்கு அழைத்து வந்திருக்கிறார்கள்
“எனக்கூறினேன்.”அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதும்மா உனக்கு என்ன இருக்குன்னு நாங்க
பார்க்கனும் “அதன் பிறகுதான் உன்னை நாங்கள் சிறையில் அடைக்க முடியும் “என அவர்களின்
மிரட்டல் உச்சம் அடைந்தது .
என்
மனம் கணத்தது ,துக்கம் உயிர் முழுதும் பரவியது
,பெருக்கெடுத்த என் கண்ணீரோடு என் ஆடைகளையும் உதிர்த்து அவர்களின் முன் நிர்வாணமாகிறேன்.அவர்களின்
கண்கள் என் பிறப்புறுப்பின் மீது குவிகிறது.சோதனைக்குப்பின் அந்த பெண்காவலர்கள் சிந்திய ஏளன சிரிப்பு ஒரு நச்சு முள்ளாய் இப்போது
வரை என் இதயத்தை தைத்துக்கொண்டே இருக்கிறது .அந்த சோதனையறையில் நான் உயிருள்ள பிணமானேன்.பின்
தொற்றுத்தடைப்பிரிவில் அடைக்கப்பட்டேன் .மற்ற பெண் சிறைவாசிகளோடு பேசாதவாறு தனிமைபடுத்த
பட்டேன்,நுகர்ந்தால் குமட்டல் வரும் உணவுகளையே உண்டேன்!
இந்த
சிறையின் சித்ரவதைகள் அனைத்தும் அனிதாவே உனக்காக…..!
அனிதாக்களே….நீங்கள்
மறிக்காமல் இருப்பதற்காக….!
வாழ்க
இந்திய ஜனநாயகம்…!
...மதிப்பிற்குரிய மங்கை பானு
மானமிகு பானு அவர்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் பாகுபாடான வன்கொடுமையை மிகவும் வன்மையாக கண்டிக்க தக்கது இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு எதிராக மிகப்பெரிய கருத்து பரப்புரை இயக்கத்தை கட்டமைக்க வேண்டும் அத்தகைய நடவடிக்கைகளில் என்னையும் இணைத்து கொள்ள விரும்புகிறேன்.
ReplyDeleteதோழி கிரேசுபானு அவர்களுக்கு என்னுடைய பெரும் ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
மீண்டும் சந்திப்போம்.
என்னுடைய பெயர்: புரசை கோ. தமிழேந்தி.
இது எனது கைபேசி மற்றும் புலனம் (வாட்ஸ் ஆப்) எண் :
72992 53597.
மானமிகு பானு அவர்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் பாகுபாடான வன்கொடுமையை மிகவும் வன்மையாக கண்டிக்க தக்கது இதுபோன்ற வன்கொடுமைகளுக்கு எதிராக மிகப்பெரிய கருத்து பரப்புரை இயக்கத்தை கட்டமைக்க வேண்டும் அத்தகைய நடவடிக்கைகளில் என்னையும் இணைத்து கொள்ள விரும்புகிறேன்.
ReplyDeleteதோழி கிரேசுபானு அவர்களுக்கு என்னுடைய பெரும் ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்.
நன்றி, வணக்கம்.
மீண்டும் சந்திப்போம்.
என்னுடைய பெயர்: புரசை கோ. தமிழேந்தி.
இது எனது கைபேசி மற்றும் புலனம் (வாட்ஸ் ஆப்) எண் :
72992 53597.
ஐயோ.....கொடுமை
ReplyDeleteஐயோ.....கொடுமை
ReplyDeleteோழி பானு அவர்களே அவர்கள் முகத்தில் காறி உமிழ்ந்திருக்கலாமல்லவா..பரதேசி நாய்கள்...த்தூ
ReplyDeleteதோழி பானுவிற்கு ஏற்பட்ட அனுபவம் நம் யாவருக்கும் ஏற்பட்டது, சனநாயகம் என்ற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அடக்குமுறை !!!
ReplyDeleteகுரல் கொடுக்கும் தோழர்களுக்கு கரம் கொடுப்போம்!!!
nandri
ReplyDelete