உயிர் வளியில்லா அரசும்...!உயிர் வலி கொண்ட தேசமும்...!



உயிர் வளியில்லா அரசும்...!உயிர் வலி கொண்ட தேசமும்...!


பச்சை உடம்புக்காரிக்கு குழந்தை வந்த தடத்தின் ரணம் இன்னும் அப்படியே இருக்கிறது.இருபது நாட்களும் மழலையின் முகம் மட்டுமே அவளின் உடல் ரணத்தை ஆற்றும் பெரும் மருந்தாக இருக்கிறது.ரோஜாவின் நிறத்தை பூசி,அறுத்த தொப்புள் கொடியின் துண்டு இன்னும் உலர்ந்து உதிராமல்,மினுக்,மினுகென கண்களை உருட்டி,அழுகையாலும் புன்னகையாலும் தன் வாழ்விற்காக பேரற்தத்தைக் கொடுத்த பூ சிசுவைப் பார்த்து மகிழ்வாள் தீபா.
ஆஹா… இவ்வுலகில் குழந்தையை ஈன்றெடுத்த தாயின் மகிழ்விற்கு நிகரொன்று உண்டோ!எனும் பெருமிதத்தோடு பிரம்மித்து வந்தால் அவள்.அங்கே இவளின் குழந்தை சத்தமிட்டாள் இவளின் ரத்த நாளங்கள் கதறித் துடிக்கும்,அம்மழலை புன்னகை சிந்தினால் இவளின் இதயம் பூத்துக் குலுங்கும் பசியால் அச்சிசு பீறிட்டழுதால் “கண்ணே….செல்லமே….இங்கே வா….”என படற காத்திருக்கும் முல்லைக்கொடியைப் போல இவளின் முலைக்காம்பு மழலையின் வாய் தேடி அலையும் .
இப்படித்தான் சென்றது ஒவ்வொரு நொடியும் இந்த இருபது நாளும் தீபாவின் கணவர் பழனிக்கும் பேரானந்தம்.மழலை இம்மண்ணில் வந்து சப்தமிட்டட்போது மூவுலகையும் வென்ற போர் வீரனாய் அவன் மார்பு நிமிர்ந்தது.அந்த நொடியிலிருந்து தீபாவிற்கு கணவனாய் இருந்தவன் அவளின் இன்னொரு குழந்தையாய்,தந்தையாய் மாறிப்போனான்.இவனுக்கு தீபா இன்னொரு தாயானாள்! தீபாவிற்கும் குழந்தைக்கும் வேண்டியதை ஓடி ஓடி ஓய்வில்லாமல் செய்துகொண்டேயிருந்தான்.
மழலை இப்பூவுலகில் உதித்த போது இப்படித்தான் இவர்களின்  உறவுகள் அழகழகாய் இடம் மாறி ஆனந்தமாய் இயங்கியது .ஆகஸ்ட் மாதத்தின் இளவேனிற்காலம் இருள் புதரை விலக்கி காலைப்பூவைப்பறிக்க கதிரவனின் கரங்கள் இன்னும் புவி வரவில்லை.சிறு சப்தமிட்டு கைகள் அசைத்து,கால்கள் உதைத்து ,மழலை புரியும் செயலை ரசித்து சுவைத்துக் கொண்டிருந்தாள் தீபா.திடிரென மழலையின் ஒலியிலும் அதன் செயலிலும் சிறு மாறுபாடு தெரிந்தது.குழந்தையிடமிருந்து உறுமல் மூச்சு வெளிப்பட்டது.அதை ஆபத்தான மாறுதலாக உணர்ந்தாள் அவள்.பதறித்துடித்து மருத்துவர்களை சப்தமிட்டு அழைத்தாள்.செவிலியர் குழு உடனே அங்கு வந்து குழந்தையை பரிசோதித்தார்கள் முதலுதவி செய்தார்கள் .மருத்துவர் குழு வந்தது அவர்களும் பரிசோதித்தார்கள் .தாயிடமிருந்து சேயை விலக்கி அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தையை வைத்தார்கள்.தீபா கதறித்துடித்தாள் .பழனி பதறி வெதும்பினாள்.
”ரத்ததில் கரிமில வாயுவின் அடர்த்தி கூடியிருப்பதாகவும் அதனால் மூச்சு சுற்றோட்ட செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து  உயிர் வளி சிகிச்சை அளிப்பின் இந்நிலை சரியாகிவிடும் “என்பதாக மருத்துவ தரப்பிடமிருந்து பழனிக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.விளக்கத்தை உள்வாங்கி தீபாவிடம் அதை எடுத்துக் கூறி அவளைத் தேற்றினாள் பழனி.

Image result for gorakhpur
            அவசர சிகிச்சைப் பிரிவில் இதைப் போலவே கிட்டத்தட்ட 70 குழந்தைகள் வரை இதுபோன்ற நோய்களுக்காகவே அனுமதிக்கப்பட்டிருந்தது.சிகிச்சைப் பிரிவை சுற்றி பதட்டம் தொற்றிய பாச உயிருருக்கள் தீபா,பழனியை போல அங்கே நிறைய குழுமியிருந்தது.அவர்கள் இதயத்தில் நிறம்பிய பேரானந்தம் வழிந்திடா வண்ணம் ஒரு சோகத் தடுப்பணை குறுக்கே இருந்தது.
            
 காலைப்பொழுதை மட்டுமல்ல மழலைகளின் உயிர்களையும் உறிஞ்சிட புவி மீது படர்கிறது இருள் என யாரும் அறியார்.

            நள்ளிரவு நிசப்தத்தைக் கிழித்து மழலைகளின் ”உருமல் மூச்சுகள் அதிகமாய் ஒலிக்க ஆரம்பித்தது .அவசர சிகிச்சைப்பிரிவை பதற்றம் பற்றிக்கொண்டது.மருத்துவர்களும் செவிலியர்களும் செய்வதறியாது அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் .ஒரு வழியாய் ஒரு மருத்துவர் வாய் திறந்தார்”உயிர்வளிக்கலன் தீர்ந்து போயிற்று!நம் அரசு மருத்துமனையில் கலன் இருப்பு இல்லை.இருக்கிற உயிர் வளிக்கலனை வைத்து இன்னும் சில மணிநேரம் தான் சமாளிக்க முடியும்”என்றார்.என்னசெய்வதென்று புரியாமல் ஏழை பெற்றோரின் உசுரு எரிகிறது.தன் கண்ணெதிரே மாஸ்கின் அடியில் புதைந்து கிடக்கும் ரோஜா முகங்கள் மூச்சு முட்டி உசுரு பொசுங்குவதை கண்ணெதிரே காணும் பெற்றோரின் மனத்துயரத்திற்கு இவ்வுலகில் நிகரில்லை.

            ”அய்யோ  ….செல்ல்லமே…எங்களை விட்டு போகாதிரு…!”எங்கள் வாழ்விற்கு பேரற்தத்தைக் கொடுத்த எங்களின்  ஆருயிரே…எங்களை விட்டு விலகாதிரு”…!”கடவுளே என் குழந்தைகளைக் காப்பாற்று…”என பெத்தவர்களின் வெவேறு துடிப்புகள் ஒன்றாய் அங்கே ஒலித்தது .

            மாஸ்கின் அடியில் புதைந்து கிடக்கும் சிசுக்களின் உருமல் மூச்சுகள் அதிகரிக்கிறது .ரோஜா வண்ண முகங்கள் நீல நிறமாகவும் கருநிறமாகவும் உருமாறுகிறது.நிறம்மாறிய ரோஜாக்கள் உதிர்ந்து விழுந்து கொண்டே இருக்கிறது .ஒன்றல்ல ,இரண்டல்ல 74 பூக்கள் மொத்தமாய் உதிர்ந்தது …!
           
      பெற்றோரின் அழுகுரல்களைக் கண்டு அஞ்சி இரவின் நிசப்தம் எங்கோ ஓடி ஒளிந்துவிட்டது !

கொரக்பூர் கொடிய ஊராய் பெயர் மாறியது …!

தீபா நெஞ்சடைத்து மயங்கினாள் பழனி உயிருள்ள பிணமானான் .விதி அன்று ஒரு நாள் மட்டும் உலகத்துயரங்களை குவியலாக்கி இந்த அவசரச்சிகிச்சைப்பிரிவில் கொட்டிச் சென்றது.
            
 இக்கொடியதுயரம் விதி செய்த வழியல்ல .ஆட்சியின் சதி!ஆட்சியாளர்களால் ஒழுங்காக நிரப்பப்படாத உயிர்வலியாய் மாறிப்போனது.
Image result for gorakhpur children death
            ஆட்சியாளர்கள் ஆசுவாசமாய் உதிர்ந்த ரோஜாக்கள் தன் பார்வையால் நுகர்ந்துப் பார்த்தார்கள் .மக்கள் கொதித்தெழுந்தார்கள் …!தன் கண்டனங்களை ஆட்சியாளர்களுக்கெதிராய் போர்குணத்தோடு வீசினார்கள்.ஒவ்வொரு கண்டனத்திலும் கோபமும் சோகமும் சேர்ந்தே ஒலித்தது.மொழி வழி தேசியம் நில வழி தெசியம் சாதிய அழுக்கு ,பாலின அடுக்கு என அனைத்தும் உடைந்து மானுட ஞாயம் ஆட்சிக்கெதிராய்  ஆர்ப்பரித்து  நின்றது .மாணவர்கள் களத்தில் குதித்தார்கள் .தங்கள் கண்டனங்களை அச்சடித்து ஆட்சிக்கெதிராய் விநியோகித்தார்கள்.அது  ஆட்சிக்கவிழ்ப்பிற்கு அனைத்து மக்கள் திரளையும் கர்ஜித்து அழைத்தது .அதன் கர்ஜனை இப்படிதான் இருந்தது.

அன்பிற்குரிய உழைக்கும் மக்களே…..
            இன்றைக்கு நம் தேசம் எந்த நிலையில்  இருக்கிறது என்பதற்கு கோரக்பூர் அரசு மருத்துவமனையில்  படுகொலை செய்யப்பட்ட 74 சிசுக்களின் சடலங்களே சாட்சி.
            அண்டை தேசத்தை வம்புக்கு இழுத்து போர் புரிய அதற்கான ஆயுதங்கள் வழங்க ,அமெரிக்காவிடம் நம் வரிப்பணத்தை எல்லாம் கொட்டிக் கொடுக்கும் இந்த தேசத்தினால் நம் குழந்தைகளை காக்க உயிர்வளி கலன்களை வாங்க இயலாதா… சாதாரண உயிர் வளியை கூட நிரப்ப துப்பற்றவர்களிடம் இனிமேலுமினிமேலும் நம் தேசத்தை ஒப்படைத்திருப்பது எந்த வகையில் நியாயம்.ஏழைகளுக்கான நம் அரசு மருத்துவமனையை அந்நியனுக்கு தாரை வார்த்திடவே இப்படியொரு படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள் படுபாதகர்கள்…!
            
         மாட்டிற்க்காக கவலையுறும் காவிகள் நம் குழந்தைகளின் மரணத்திற்கு பொருபேற்காமல் ஆணவமாய் கோட்டையிலே கொடியேற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்ன செய்ய்யப்போகிறோம் நாம்…?
      
 நமக்கு உணவளித்து வந்த பொது விநியோக திட்டத்தை நம்ம்மிடமிருந்து பிடுங்குகிறார்கள் …!

நாம் வசிக்கும் மலை உடைத்து நம்மை கொலை செய்கிறார்கள்!

உலகுக்கே உணவளிக்கும் விவசாய வயலை அழித்து  ஹைட்ரோ கார்பனை அரங்கேற்றுகிறார்கள்!

மீன்பிடிக்கும் மீனவனை ஆழ்கடலில் சுட்டுக்கொல்கிறார்கள்…!

நீட் என்று மாணவர்களின் எதிர்காலத்தைப் பறிக்கிறார்கள்..!

மாட்டிறைச்சி உண்ணும் தலித்துகள் அடித்தே கொலை செய்யப்படுகிறார்கள்.

இவ்வரிசையில் இன்று நம் குழந்தைகளை அவர்கள் கொலை செய்திருக்கிறார்கள்…!

இவர்களை இனிமேலும் விட்டு வைக்கலாமா?
அணி திரள்வோம்…!

அயோக்கியர்களின் ஆட்சியை அடித்து நொறுக்குவோம்!”

இந்த அறைகூவல் துண்டறிக்கையை தேசம் முழுவதும் மாணவர்கள் பரவாலக வினியோகிக்கிறார்கள்..!

தீபா,பழனி போன்ற பெற்றோரின் சோகம் மக்களின் கோபமாக எங்கும் பற்றி எரிகிறது.துண்டறிக்கை வினியோத்த மாணவிகள் குண்டர்கள் என கைது செய்யப்படுகிறார்கள்.மக்களின் கோபம் மேலும் அதிகரிக்கிறது .அமைச்சர்களின் மீது செருப்புகள் வீசப்படுகிறது.

ஆட்சியாள தகுதியற்ற கொடியவர்களே…..

ஆட்சியை விட்டு ஓடி விடுங்கள்..! என்ற முழக்கம் எங்கும் ஒலிக்கிறது!

            இந்த கொடிய ஆட்சியாளர்களால் கசக்கி  உருட்டி எரியப்பட்ட ஜீவனற்ற காகித உருண்டையாய் புத்திர சொகத்தை மட்டுமே சுமந்துகொண்டு தீபா கட்டிலின் மீது சுருண்டு கிடக்கிறாள்.பழனி தேநீர் கோப்பையை அவளருகில் வைத்துவிட்டு  மாணவர்கள் விநியோகித்த துண்டறிக்கையை அவளிடம் படித்து காண்பிக்கிறான் .தீபா அதை முழுவதுமாய் படிக்கிறாள்.ஆமாம் மாணவர்கள் கூறுவது உண்மை  தான்!இந்த கொடிய ஆட்சியாளர்கள் தான் நம் செல்லத்தை  கொன்றார்கள் !இவர்களிடமிருந்து  நம் தேசத்தையும் நம் குழந்தைகளையும் காக்க வேண்டும்.இக்கொடியவர்கள் ஒரு கணம் கூட ஆட்சியாளர்களாய் நீட்டிக்ககூடாது!சத்தியத்திற்கான மாணவர் போராட்டம் வெல்லட்டும்!கொடியோர் ஒழியட்டும் !வாய் திறந்து இந்த அரசுக்கு எதிராய் சாபத்தை வீசி சாளரத்திற்கு வெளியே தன் பார்வையை செலுத்தினால்  வானில் பறவைகள் கூட்டாக சிறகு விரித்து பறந்து கொண்டிருந்தது…!


 Image result for gorakhpur children death

...மதிப்பிற்குரிய மங்கை பானு

Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

மாற்றுப்பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை மசோதா -2016