மாற்றுபலினத்தவர் மீதும் அக்கறை கொண்ட தோழர்.கௌரிலங்கேஷ்

கடந்த மாதம் காட்டாட்சியின் கொலை ஆயுதங்களால் உசுரிழந்தார்கள் தமிழகத்தில் வளரும் லங்கேஷும் கன்னடத்தில் வளந்த அனிதாவும்.அனிதாவின் கழுத்தை இறுக்கியது தூக்குக் கயிறாக இருக்கலாம்,லங்கேஷை துளைத்தது துப்பாக்கித் தோட்டாக்களாக இருக்கலாம்.ஆனால் அதை எய்த கைகள் ஒன்றுதானே…!

அந்த கரங்கள் தானே மஹராஷ்ரத்தில் 21.08.2013 அன்றின் காலைப் பொழுதின் முகத்தில் நரேந்திர தபோல்கரின் ரத்தத்தை பூசி சென்றது…!அந்த கரங்கள் தானே 19.02.2015 அன்று அதே மஹராஷ்ரத்தில் அதேப் போன்றதொரு காலைப் பொழுதின் முகத்தில் கோவிந் பன்சாரேவின் ரத்தத்தைப் பூசி சென்றது.கெளரியையும் கல்புர்கியையும் பன்சாரேவையும் ஒரே பானியிலேயே அவர்கள் கொன்றிருக்கிறார்கள் அது மோட்டார் சைக்கிள்,முகமூடி, 7.6 எம்.எம். அளவுள்ளத் துப்பாக்கி.இதுவே அவர்களின் பானியாக இருக்கிறது.அவர்களின் இந்த பானியால் சமூக செயல்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள் போன்றோரின் மனங்களில் மரண பயத்தை விதைக்க நினைக்கிறார்கள்.அத்தகைய நினைப்பிற்கு நீரூற்றி வேலியடித்து அதற்கு ஒன்றும் நேர்ந்திடாதவாறு காத்து வருகிறது பி.ஜே.பி.ஆட்சி.

Image result for gauri lankesh

அவர்கள் அந்த மசூதி இடிப்பைப் போன்றே,அந்த ரத யாத்திரையைப் போன்றே,குஜராத் பாணி கலவரத்தைப் போன்றே இதையும் மிக வெளிப்படையாகவே செய்துவருகிறார்கள்.முன்பெல்லாம் அவர்கள் இஸ்லாமியரையும் தலித்துகளையும் வெளிப்படையாகவே,நேரடியாகவே கொன்றொழித்து வந்தார்கள்.இப்போது சற்றே தன் பானியை மாற்றி அவர்களுக்காகப் போராடுவோரை,அவர்களுக்காக எழுதுவோரை,அவர்களுக்காக செயல்படுவோரை கொன்றொழிக்கிறார்கள்.அவர்களின் சனாதன சட்டங்களை மீறுவோரை,அவர்களின் தேச விரோத சட்டங்களை கேள்வி கேட்போரை வெளிப்படையாகவே அவர்கள் மிரட்டுகிறார்கள்,கடத்துகிறார்கள்,கொல்கிறார்கள்.தன் சட்டத்தையும் சனாதனத்தையும் காக்க ஒவ்வொன்றின் கிளையிலும் அவர்களின் கொலைக் கரங்கள் பலமாய் பரவியிருக்கிறது.நாட்டின் உயர் கல்வித் துறையில்,பல்கலைக் கழகங்களில் அவர்கள் கொலை உருவங்களையே தரித்திருக்கிறார்கள்.அங்கேதான் அவர்கள் ரோஹித்தைக் கொன்றார்கள்.முத்துக் கிருஷ்னணை கொன்றார்கள்.அவர்கள் மருத்துவ துறையிலும் தன் சட்டத்தையும் சனாதனத்தையும் காக்க அதே கொலையுருவத்தையே தரித்திருக்கிறார்கள்.

அங்கே வேறு யாரும் நுழையா வண்ணம் மிகு எச்சரிக்கையோடு இருக்கிறார்கள்.அதை மீறத் துடித்த நம் தங்கை அனிதாவை அங்கே தான் அவர்கள் கொன்றார்கள்.கலாச்சாரத் துறையிலும் அவர்களின் கொலை உருவங்கள் காட்சி தருகின்றன.அங்கே தான் அவர்கள் தாஜ்மஹாலை தேச விரோத சின்னமாக மாற்றத் துடிக்கிறார்கள்.இப்படி ஒவ்வொன்றிலும் அவர்களின் கொலைக் கரங்கள் ஆழமாய் பலமாய் பரவியிருக்கிறது.ஆனால் ஜனநாயக உருவத்திற்கு முன்னால் அவர்களின் ஹிட்லர் பாணி நடவடிக்கைகள் தோற்றுப் போகும் என்று வரலாறு மீண்டுமொருமுறை அவர்களுக்கு நிரூபிக்கட்டும். 

தோழர் கெளரி லங்கேஷ் அவர்களை பல கோணங்களில் பலர் அவரின் ஆளுமையை எடுத்துரைத்திருக்கிறார்கள்.ஆனால் பலராலும் பேசப் படாத செய்தி அவர் திருநங்கையர் மீதும் அக்கறை கொண்டிருந்தார் என்பது.! தமிழகத்தில் திருநங்கை ரேவதி அம்மா அவர்களின் தன் வரலாற்று நூலான வெள்ளை மொழி எனும் நூலை கௌரி லங்கேஷ் அவர்கள் கன்னடத்தில் “பதுக்குப் பயலு”எனும் தலைப்பில் மொழி பெயர்த்திருக்கிறார்.அவர் வாழும் காலத்தில் மக்களுக்கான அவர் பாதையை ஒழுங்காகவே செய்திருக்கிறார்.அதில் அவர் துடிப்போடும் வேகமாகவும் பயணித்திருக்கிறார்.தொழிலாளர் வர்க்கம் தொடங்கி,ஒடுக்கப்பட்ட சமூகங்கள் உள்ளிட்டு விளிம்பு நிலை மனிதர்களாக வாழ்ந்து வருகிற திருநங்கை சமூகம் வரை அவர்களின் கால்கள் பயணித்திருக்கிறது.அவர்களின் சிந்தனையொளி பாய்ந்திருக்கிறது.


”பாட்டாளி வர்க்கம் ஊதிய உயர்வுக்காக மட்டுமல்லாமல் உரிமைகளுக்காகவும் போராட வேண்டுமென்று’’தன்னுடைய மார்க்சிய பார்வையை தொழிற்சங்கங்களில் பிரச்சாரித்து இயங்கியிருக்கிறார்.மலம் அல்லும் தொழிலாளர்களின் விடுதலைக்காக களத்தில் இறங்கி சாதியச் சமூகத்தின் இழிவை விளக்கி அண்ணல் அம்பேத்கர் கருத்தை அவர் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்.மாற்றுப் பாலினத்தோரான  எங்கள் திருநங்கை சமூகத்திற்காகவும் இயங்கி பாலாதிக்கத்தை எதிர்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரின் விவாகரத்தான கணவர் கூறுவதுபோல் ‘’ எல்லாவற்றுக்கும் மேல் அவர் மனிதியாக வாழ்ந்தார்..!’’ நண்பர்களே….கெளரி லங்கேஷின் லட்சியங்களை முன்னெடுப்போம்.!மாணுடர்கள் கொல்லப்படுவதில்லை ஹிட்லர்களே கொல்லப்படுவார்கள் என்பதை மீண்டுமொருமுறை வரலாறு அவர்களுக்கு நிரூபிக்கட்டும்..!

Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016