மது எனும் கொடிய நஞ்சு...! Abolishing Alcohol..!
மது ஒழிப்பில்....
மது எனும் கொடிய நஞ்சு ஒட்டுமொத்த மக்கள் திரள் மீது இன்றைக்கு தெளிக்கப்பட்டு வருகிறது.நம் கண் முன்னால் மக்கள் செத்து மடிவதும் சீரழிவதும் நடந்தவண்ணம் தான் உள்ளத்ய்.இந்நாட்டில் நிகழ்ந்தேறும் ஒவ்வொரு கொலைகளுக்குப் பின்னால் ஒவ்வொரு கற்பழிப்புக்கு பின்னால்,ஒவ்வொரு விபத்தின் பின்னால்,ஒவ்வொரு குடும்ப பிரிவுகளுக்குப் பின்னால் மது ஒரு முக்கிய காரணியாக செயல்படுவதை நாம் காண முடியும் இந்த அரசாங்கம் வருவாயை மட்டுமே முக்கியமாக எடுத்துக்கொண்டு மக்களை அவல நிலைக்குத் தள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.மது விசயத்திலும் முரண்களைக்கொண்ட நாடாகவே திகழ்கிறது.குஜராத், மணிப்பூர் ,நாகலாந்தில் தடை செய்யப்பட்டிருக்கும் மது தமிழகத்தில் திறந்து விடப்படுகிறது எனில் அதன் நொக்கம் என்ன? மதுவினால் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மற்ற சமூகத்துக்குநிகரான பாதிப்பையே எங்கள் சமூகமும் அடைகிறது.எந்த தீமையும் பலவீனமானவர்களையேத் தாக்கும் என்ற கூற்றுப்படி,பொதுச் சமூகத்தினால் தீட்டிற்கும் தீண்டாமைக்கும் ஆட்பட்டிருக்கும் எங்கள் சமூகம் மதுவின் கொடிய பாதிப்புகளை சுமந்து திரிகிறது.பல ஆண்டுகளாய் சமூக,கல்வி,பொருளாதாரரீதியாய் முடங்கிக்கிடந்த எங்கள் சமூகத்திலிருந்து தற்பொழுதுதான் விடுதலை வேட்கை துளிர்விடுகிறது.அதை அழிக்க அத்துளிரின் மீது மது எனும் ரசாயனம் ஊற்றப்படுவதாகவே உணர்கிறேன்.இப்பெரிய ஜனநாயக நாட்டிந் உற்பத்தியின் நிகழ்வில் நாங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும்.'கருணையுள்ள இந்த ஜனநாயக தேசத்தில் 'எங்களுக்கு பிச்சையும் பாலியல்தொழிலும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.சமூகத்தில் நாங்கள் ஒதுக்கப்பட்டிருந்தாலும் வரியை மட்டும் சமமாகவே செலுத்துகிறோம்.எங்களிடமிருந்து வரியைப்பிடுங்கும் ,எங்களின் நேர்மைதான இடப்பங்கீட்டுக் கோரிக்கையை மறுத்து எங்களை அடித்து கைது செய்யும் இந்த அரசு மதுவினை மட்டும் சமமாக தாரளமாக வழங்குகிறது.மது குடிப்பவர்களையும் மது அடிமைகளும் மட்டும் தான் உங்களுக்கு தெரியும்.ஆனால் மது கொடூரர்களை பெரும்பாலும் இப்பொதுச்சமூகம் கண்டிருக்காது.இந்த மதுக்கொடூரர்களைதான் தினம் தினம் காண நேரிடுகிறது.அவர்களின் கொடூர சிற்ரவதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.எங்கள் சமூகம் மதுக்கொடூரர்களால் அனுபவிக்கும் துன்பம் என்பது எழுத்தில் சொல்ல முடியாதது.அப்போதெல்லாம் எத ஆட்சி முறைமை மீது ஒரு அறுவெறுப்புத் தோன்றும்! சில ஆண்டுகளுக்கு முன்னால் இந்நாட்டின் தலைநகரில் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்தவர்களின் வாக்குமூலம் என்னாவாக இருந்தது "நாங்கள் போதையில் கொடூரமான தவறை செய்து விட்டோம் எங்களை தூக்கிலிடுங்கள்" என கதறினார்கள்.அப்போதே இத்தேசம் மதுக்கொள்கையில் திருந்தியிருக்க வேண்டும்.மாறாக தினம் தினம் மதுக் கொடூரர்களை உற்பத்தி செய்யும் பொறுப்பை மிக கன்னியதோடு செய்து வருகிறது.நிர்பயாவுக்காக பேச நாடாளுமன்றம் இருந்தது ஊடகங்கள் இருந்தன,மக்கள் திரள் இருந்தது.
ஆனால் எங்களுக்காக??? உலக சுகாதார நிறுவனத்தின் சமீபத்திய ஆய்வறிக்கையில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 32.1 விழுக்காட்டினரும் பெண்களில் 10.60 விழுக்காட்டினரும் அடிமையாகியுள்ளனர் எனத் தெரிவிக்கிறது.உலக சுகாதார நிறுவனத்தால் கணக்கில் எடுத்துகொள்ளபடாத எங்கள் பாலினத்திலும் மதுவுக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.குடும்பத்தினால் பொதுச்சமூகத்தின் தவறான கருத்தியலினால் அனாதைகளாக்கப்பட்ட நாங்கள் தற்போது மதுவினால் அடிமையாகளாவுன் மதுக்கொடூரர்களுக்கு மனிதமற்ற பொம்மைகளாகவும் மாறி வருகிறோம்.நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான் நாங்கள் அனாதைகள் எங்களுக்கென்று யாருமில்லை .எங்களின் திறத்தினை சுயத்தினை இவ்வுலகிற்கு எடுத்துரைக்க வேண்டிய தருணம் இது.இட ஒதுக்கீடு வழங்கவில்லையென்றாலும் பரவாயில்லை....
எங்களை மதுவிற்கு அடிமையாக்காதீர் !!சமூகத்தில் மதுக்கொடூரர்களை உற்பத்தி செய்யாதீர்!!

Abolishing alcohol
Today Alcohol, a dangerous poison has been spraying on public.
We could see how people suffer, die of alcoholic addiction. We can also see how
alcohol plays an important factor behind every murder, rape, accident and
destruction of home in our countries. It is unacceptable to let government pushing
people in miseries by prioritizing revenues on alcohol. In this country stark
difference is followed in alcoholic policies too. When states like Gujarat, Manipur,
and Nagaland bans alcohol why there is free flow of alcohol in Tamil nadu? What
is the intention of the government? As everyone suffers over addiction of
alcohol it doesn’t leave my community either. As any social sufferings affect
the oppressed much, our community being untouchable, discriminated carries worse
effect of alcoholic addiction. Against years of denial of education and
economic opportunities it is recently liberation ideas are blooming among us. I
believe this dangerous poison alcohol is sprayed on us to destroy our budding
liberation dreams. Though we were kept away from production activities of the
country, this democratic state showered mercy on us by allotting jobs of prostitution
and begging. We are separated from society but tax is paid equally with rest of
the society. Taking tax from us when we demand our democratic right of
representation and reservations for equal opportunities we are met with brute lathi
charge and arrests from police whereas alcohol is provided eagerly and equally.
You might have seen alcoholics/ addicted to alcohols but majority of this
society may not aware of alcoholic monsters/abusers. We are the ones face these
monsters and their abuses every day in our life. Their brutalities cannot be
expressed in words. When we face those abuses we disgust the ruling class who
create these monsters. Few years back the accused people of brutal rape and
murder in national capital gave testimony that we did brutal act under
alcoholic condition so persecute us. At least after this horrible violence this
country should have changed their policies on alcohol drinks instead it took an
honourable responsibility of creating alcoholic monsters each day. Nirbhaya got
parliament, media, public support etc.
But who (speak on our violence we face from alcoholic
monsters)? WHO report says people (aged
above 15) addicted to alcohol stands at 32.1% and 10.6% among male and female
population respectively. Our community which neglected in report of WHO too
increasingly gets addicted to alcohol. Due to false opinions (on transgender) in
society and family we are forced to become orphans. Adding to this misery now
we become inhuman objects to the horrific violence of alcoholics/alcoholic
monsters. All we want to say is we lived alone as orphans. It’s time for us to
show our skills and abilities to the world for the betterment of us and larger
society. Its okay even if you deny us reservation But don’t make us
addicted to alcohol and don’t create alcoholic monsters in society.
English translation:Umar Faruk-HCU
Comments
Post a Comment