நீங்கள் உருவாக்கிய மனுஷி...!

தண்டவாளத்தின் கிராசிங்கில்

இதோ நீங்கள் உருவாக்கிய மனுஷி

உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...!

 குடும்பத்திலிருந்து உங்களால்
விரட்டப்பட்டவள்...!

















நீங்கள் பயணிக்கும் தொடரியில்

உங்களிடம் பிச்சைக் கேட்க

உங்களுக்காக காத்துக் கிடக்கிறாள்...!


நீங்கள் அவளைப் பார்த்து கண்டிப்பாக

முகம் சுளிப்பீர்களென அறிந்தும்

அந்த இரும்பு தண்டவாளத்தை

கடப்பது போல

உங்கள் முக சுளிப்புகளை கடந்து

உங்களிடம் பிச்சையீட்ட

அவள் உங்களுக்காக காத்துக்
கிடக்கிறாள்...!

அவள் எப்போது வேண்டுமானாலும்

எதிர்வரும் தொடரி மோதி சாகலாம்...!

அது ஒரு தற்செயல் ..!

ஆனால் நீங்களிடும் பிச்சையீட்டி

வாழ்வது தான் அவள் விதியாயிற்றே..!

அவ்விதி வழியே...

அவள் அங்கு காத்துக் கிடக்கிறாள்...!


அவளை கூர்ந்து நோக்குங்கள்..!

அவள் உங்களுடைய சகோதரியாக
இருக்கக்கூடும்...!

அவளை கூர்ந்து நோக்குங்கள்...!

அவள் நீங்கள் ஈன்றெடுத்த

உங்களின் பிள்ளையாக இருக்கக்கூடும்...!






....மதிப்பிற்குரிய மங்கை பானு

Comments

  1. அழகான வாக்கியம்... நான் என் தோழர் கடைக்கு சென்றால் தினமும் திருநங்கை முகங்களை காண்பேன் சிலர் நின்று பேச்சு கொடுப்பார்கள் சிலர் வந்ததும் வரம் கொடுத்து சென்றிடுவர்... பிச்சை என்று சொல்ல முடியாது அவர்களின் எண்ணத்திற்கும் மனதிற்கும் நாங்கள் கட்டும் கப்பம்... வேறு வேறு முகங்கள் ஆனால் ஒரு அடையாளத்தில் காலை 11.30 மணி அளவில் வருவார்கள்.... அவர்கள் எங்களுக்கு வரமளித்து நகருகையில் இந்த சமூகத்தின் மறுமுகத்தில் தான் நானும் இருக்கிறேன் என்று வெட்கி தலைகுனிகிறேன்... அவர்களிடம் நாங்கள் கேட்பது தான் பிச்சை... அவர்கள் கைகள் தட்டுவதை நிறுத்து துப்பாக்கியை தட்டிவிட்டால் ?? அப்படி செய்தாலும் தவறில்லை அவர்கள் பக்கம் தான் நியாயம் இருக்கும் ஏனென்றால் அப்படிபட்ட கோரத்தையும் பாவத்தையும் இந்த சமூகம் செய்தது என்றால் மிகையாகாது....

    ""கால நியாயக் கூண்டிலே நம்மை தள்ளும் விதிப்படி
    இவர்கள் கைகள் தட்டினால் அதுவே அதுவே சவுக்கடி...
    மனிதரே எவரும் மனிதரே அவர்கள் பாலை அவர்கள் சொல்ல சக்கரை மட்டும் கலக்கிறேன்""

    ReplyDelete
  2. வலியின் வரிகள் தோழி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016