My Dear father..அன்புள்ள அப்பா….




My Dear father..
This socio economic exploitative structure that makes our soul as lifeless has scattered us in different directions .your life ,my life, my mother, my siblings we have been put under different directions as scattered lifeless souls.. The village which is plush and greenish provided lively life to our family. Now we languish over depriving of our life in village.
If one leaves home for the welfare of family then the pain of separation can be overshadowed by happiness of realizing that separation is for the (welfare of) family. But (oh my) father we didn’t separate like that.
For us, over a period of time different reasons emerged separating us.
When my mother said you left home six months after my birth to work in a far away scorching desert land Saudi I remember the flames of desert sand scorched my heart on hearing it. That flame of pain still lingers in my mind father.
(I remember)When you get time to relax from straining work hours, you call us over phone and it brings us not only happiness but also tears. Your husky loving voice was my solace. You never declined even meagre demands of us that u kept away all of your sufferings from us. You consider us as loving gift of you and mother’s love. I remember those days where we delight and run towards you whenever you visit us once in every few years.
Father until I find my sexual determination/identity/orientation the moments of separation and togetherness we cherish has blossoms as smiling pearls. Everything reversed after I reached my sexual determination phase. You find your child becoming transgender as your disgrace of all disgraces. You put me in mental health asylum to cure me. You stopped seeing me not only as your son but also a human. The sky becomes flames of hell as I lost your love and kisses .absence of your embrace drifted me in society like a leaf in whirlwind. Wherever I turn society welcomed me with misery and detest. Those periods I wept remembering (love of) you and mother. I yearned for your love. Everyday our memories of love flooded with my tears. Father I realized then what can you do in this sexist/male dominated society.
When entire nation baffled with gender identities how can you come out as enlightened mind? It is this sexist society that changed your embracing arms into the one that chased me from home. It is this sexist society that made your lips which kissed me to offensive, abusive one on me. It is this society that taught your eyes which showered love to disdain and disgust me. It turned your heart which filled in love to a hard stone. Then I decided to fight this sexist social structure which separated us by taking struggle as battlefield. Resistance will bring changes to society. Questioning this existing structure will give birth to new world.
Father, the questions has raised now. If only the men and women are considered as human then who are transgender? Beast? This is how our struggle forms. (Protest slogans) to the Indian state (as follows) Transgender are humans. Give us our right of representations, reservations, opportunities in educations and employment.
Father, ours struggle is going forward. A bill has presented in parliament. Currently I am involved in organizing struggles to built necessary pressure to the government to pass it in parliament. Now we have started speaking to each other. So I regained all the love I lost. But I don’t want to see another transgender and father going through the difficulties we gone through. It is this assertion that firmly entrenched in my heart making me stronger to fight this sexist social structure. Dear father, I want to hug you, kiss you and say this loudly that no longer a transgender loss their love of parents.
- Grace Banu.
Translated by:Umar Faruk

Image result for dad and daughters images

அன்புள்ள அப்பா….
தற்போதைய சமூக பொருளியல் சுரண்டல் பிய்த்துப் போட்ட உயிர்களாய் நீங்களும் நானும் அம்மாவும் உடன் பிறந்தோரும் ஆளுக்கொரு திசையில் உழல்கிறோம்..நம் கிராமத்துப் பசுமையின் வனப்பும் உறவுகளின் உயிர்ப்பும் துறந்து எல்லைகள் கடந்து தவிக்கிறோம்.
உறவின் பிரிவு உறவுகளின் ஒப்புதலோடே அமைந்ததெனில் பிரிவின் சுமை அழுத்தினாலும் அது தன்னுறவுக்காக எனும் போது சுகமாகத்தான் இருந்திருக்கும்.
ஆனால் அப்பா…. நமது பிரிவு அப்படியில்லையே !
நம் பிரிவு பல்வேறு கட்டங்களில் வெவ்வேறு காரணங்களாலேயே இயங்கி வருகிறது.
நான் பிறந்து ஆறு மாதத்திலேயே பொருளியல் தேடலில் ஒரு தொழிலாளியாக பாலைவன தேசமான சௌதிக்கு புலம்பெயர்ந்தீர்கள் என்று அம்மா என்னிடம் கூறியதும் அந்த பாலைவன சுடுமணல் என் நெஞ்சை சுட்டது இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது.அந்த காயத்தின் வெப்பம் இன்று வரை என் நெஞ்சில் அப்படியே இருக்கிறது அப்பா..!
வெளி தேசத்தில் எங்களுக்காக உழைத்துக் கொண்டு இளைப்பாறும் நேரத்தில் நீங்கள் அலைபேசியில் அழைக்கும் போதேல்லாம் மகிழ்ச்சி மட்டுமீறி கண்ணீரை உதிர்த்திருக்கிறேன்.உன் அந்த கரகரப்பான பாசக் குரலை என் நெஞ்சிக்குள்ளேயே பொத்தி வைத்து முத்தமிட்டிருக்கிறேன்.வெளி தேசத்தில் நீங்கள் தவித்திருந்தாலும் எங்கள் சில தேவைகளுக்காக உங்களை நச்சரிக்கும் போதெல்லாம் உச்சு கொட்டாமல் உள்ளதனைத்தையும் எங்களுக்காகவே செய்தீர்கள். உங்களுடைய காதலும் அம்மாவின் காதலும் இணைந்து ஈன்றெடுத்த குட்டிக் காதல்காளாய் எண்ணியே நீங்கள் எங்களை கொஞ்சினீர்கள்.
சில ஆண்டுகளுக்கு ஒரு முறை நீங்கள் ஊர் வந்து இறங்கும் போது ஓடோடி வந்து உங்களை கட்டியணைத்த ஞாபகம் என் நெஞ்சில் அச்சு வெல்லமாய் இன்றும் ஒட்டியிருக்கிறது.
அப்பா…..
நான் என் சுய பாலினத்தை வந்தடையும் கட்டம் வரையில் நம் பிரிவிலும் இணைவிலும் துளிர்த்திருந்த அந்த அச்சுவெல்ல நிகழ்வுகள் பவள முத்துக்களாய் மலர்ந்து சிரித்தன. ஆனால் நான் என் சுய பாலினத்தை வந்தடைந்த பிறகு அனைத்துமே தலைகீழாய் போயின.
உங்கள் பிள்ளை திருநங்கையாய் மாறும் அந்நிகழ்வை உச்சக் கட்ட அருவெறுப்போடே அனுகினீர்கள்.மனநல காப்பகத்தில் அடைத்து வைத்து சரி செய்ய நினைத்தீர்கள். .என்னை மகனாக மட்டுமல்ல மானுடமாகவே பார்க்கவும் மறுத்தீர்கள்.உங்களின் அன்பையும் முத்தத்தையும் மொத்தத்தையும் இழந்து நின்ற போது வான் தீயாய் எறிந்தது.பூமி தீக்குழியாய்ப் போனது.உங்கள் அரவணைப்பு இல்லாமல் காட்டாற்றில் மிதக்கும் சிறு சருகைப் போல சமூகத்தில் மிதந்து சென்றேன்.எங்கும் அவலத்தையும் அருவருப்பையும் மட்டுமே சந்தித்தேன்.அப்பொழுதெல்லாம் உங்களையும் அம்மாவையும் நினைத்து அழுவேன்.உங்களின் பாசம் கிடைக்காமல் தவிப்பேன்.நம் பாச நினைவுகளை என் கண்ணீரால் தினம் தினம் நெனைப்பேன்.
அப்போதெல்லாம் அப்பா…….. இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்….. இந்த பாலாதிக்க சமூகத்தை எதிர்த்து நீங்கள் என்ன செய்யமுடியும் !
இந்த தேசமே பாலின அடையாள குழப்பத்தில் தவிக்கும் போது உங்களால் மட்டும் எப்படி ஒரு தெளிவுக்கு வரமுடியும் ? என்னை கட்டியணைத்த உங்கள் கரங்களுக்கு என்னை குடும்பத்திலிருந்து தள்ளி விட உத்தரவிட்டது இந்த பாலாதிக்க சமூகம் தான்.என்னை முத்தமிட்ட உதடுகளை என் மீது வெறுப்பான வார்த்தைகளை உமிழச்செய்தது இந்த பாலாதிக்க சமூகம் தான்.அன்பை பொழிந்த உங்கள் பார்வைக்கு அருவருப்பை பொழிய கற்றுக் கொடுத்தது இந்த பாலாதிக்கச் சமூகம் தான்.பாசமே உருவான உங்கள் இதயத்தை பாறையாக மாற்றியது இந்த பாலாதிக்க சமூகம் தான்.நம்மை பிரித்த இந்த பாலாதிக்க சமூக கட்டமைப்பை உடைக்க வேண்டும் என்று போராட்டங்களை ஆயுதமாக்கினேன்.இன்று வரையில் அதை சுமந்தும் திரிகிறேன்.
போராட்டங்கள் அனைத்தையும் திருத்தும்.கேள்விகள் புது உலகைப் படைக்கும்.
அப்பா,…
இதோ எங்களுக்கான கேள்விகள் பிறந்து விட்டன.
ஆணும் பெண்ணும் தான் மானுடம் என்றால் திருநங்கையும் திருநம்பியும் மாட்டினமா என்ன…?
இதோ எங்களுக்கான போராட்டங்கள் இப்படித்தான் கட்டியமைக்கப் படுகின்றன..
இந்திய அரசே…..
மாற்றுப் பாலினத்தோரும் மானுடமே..!
மாற்றுப் பாலினத்தோருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் இடப்பங்கீடு வழங்கிடு..!
அப்பா….
எங்களின் போராட்டங்கள் முன்னோக்கி செல்கின்றன.நாடாளுமன்றத்தில் எங்களுக்கான மசோதா தாக்கலாகியிருக்கிறது.அது நிறைவேற்றுவதற்கான போராட்டங்களை கட்டியமைப்பதற்கான பணியிலும் தற்போது இருக்கிறேன்.
நாமிருவரும் பேச ஆரம்பித்துவிட்டோமல்லவா அப்பா..! அதனால் நான் இழந்த பெருமகிழ்வை மீண்டும் அடைந்துவிட்டேன்.ஆனால் நாம் பட்ட இன்னல்களை வேறொரு பெற்றோரும் மாற்றுப் பாலினமும் அடையகூடாது என்பதே என் ஆழ்மனதில் ஊறிக் கிடக்கிற உணர்வாகவும் என்னை உந்துகிற சக்தியாகவும் இருக்கிறது.உன்னை கட்டியனைத்து முத்தமிடுகிறேன் அப்பா…!உன் போன்ற பெற்றோரை என் போன்ற மாற்றுப் பாலினம் இனிமேலும் பிரியாதிருப்பார்களாக……!
....மதிப்பிற்குரிய மங்கை கிரேஸ்பானு

Comments

Post a Comment

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016