உயிர் வளியில்லா அரசும்...!உயிர் வலி கொண்ட தேசமும்...!
உயிர் வளியில்லா அரசும்...!உயிர் வலி கொண்ட தேசமும்...! பச்சை உடம்புக்காரிக்கு குழந்தை வந்த தடத்தின் ரணம் இன்னும் அப்படியே இருக்கிறது . இருபது நாட்களும் மழலையின் முகம் மட்டுமே அவளின் உடல் ரணத்தை ஆற்றும் பெரும் மருந்தாக இருக்கிறது . ரோஜாவின் நிறத்தை பூசி , அறுத்த தொப்புள் கொடியின் துண்டு இன்னும் உலர்ந்து உதிராமல் , மினுக், மினுகென கண்களை உருட்டி , அழுகையாலும் புன்னகையாலும் தன் வாழ்விற்காக பேரற்தத்தைக் கொடுத்த பூ சிசுவைப் பார்த்து மகிழ்வாள் தீபா . ஆஹா… இவ்வுலகில் குழந்தையை ஈன்றெடுத்த தாயின் மகிழ்விற்கு நிகரொன்று உண்டோ!எனும் பெருமிதத்தோடு பிரம்மித்து வந்தால் அவள்.அங்கே இவளின் குழந்தை சத்தமிட்டாள் இவளின் ரத்த நாளங்கள் கதறித் துடிக்கும்,அம்மழலை புன்னகை சிந்தினால் இவளின் இதயம் பூத்துக் குலுங்கும் பசியால் அச்சிசு பீறிட்டழுதால் “கண்ணே….செல்லமே….இங்கே வா….”என படற காத்திருக்கும் முல்லைக்கொடியைப் போல இவளின் முலைக்காம்பு மழலையின் வாய் தேடி அலையும் . இப்படித்தான் சென்றது ஒவ்வொரு நொடியும் இந்த இருபது நாளும் தீபாவின் கணவர் பழனிக்கும் பேரானந்தம்.மழல...