வஞ்சிக்கப்பட்டோர் தினம்(Transgender Day of Remembarence )
நவம்பர் 20 வஞ்சிக்கப்பட்டோர் தினம் வஞ்சிக்கப்பட்டோர் தினம் உயிர் நீத்த திருநங்கைகளை நினைவுகூறும் வகையில் இந்நாளை "மாற்றுபாலினத்தோரின் நினைவுதினம்" என்று என் சமூகம் கட்டமைத்து கடைபிடித்து வருகிறது...நானும் அவர்களுடன் இணைந்து இந்நாளை உயர்த்தி பிடிக்கிறேன் இது "வஞ்சிக்கப்பட்டோர் தினம் " என்று இன்னுமொரு பெயரிட்டு!!!!!!! ஆம் !!!!நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் ,வஞ்சிக்கப்படுகிறோம்.. இவ்வுலகில் யாவரையும் விட அதிகமாய் நாங்கள் வஞ்சிக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம்...அந்த கருப்பு அடிமைகளை விடவும் ,இந்திய தலித்துகளை விடவும் ,பெண் பாலினத்தை விடவும் நாங்கள் அதிகமாய் வஞ்சிக்கப்படுகிறோம்!!!!! குடும்பத்தை அடிப்படை அலகாக கொண்டு கொத்துகுலையாய் திரட்சியுற்றிருக்கும் பொது சமூகத்தோரே............. உங்களால் நாங்கள் வஞ்சிக்கப்பட்டோம் என்பதனை நீங்கள் அறிவீரோ...!!!! குடும்பம் தொடங்கி அரசின் அங்கம் ஒவ்வொன்றிலும் நீங்கள்தான் நீங்களேதான் நிரம்பி இருக்கிறீர்!!!!இதில் எதிலும் நாங்கள் நுழையா வண்ணம் மிகு "எச்சரிக்கையோடு" இருக்கிறீர் இந்த எச்சரிக்கை உணர்வு கொடிய தீண்டாமையின...