தேர்தல் ஆணையம்

எங்கள் சமூகத்தின் மாணுட அங்கீகாரம் மறுத்து, சர்வதேசிய சமூகத்தின் முன்னால் நின்று ‘ஜனனாயகம்’ என்ற

வார்த்தையால் தன்னை சீவி சிங்காரித்து நிற்கும் இத்தேசத்தைப் பார்க்கும்போது ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம்

உள்ளே ஈரும் பேணாம்” என்கிற கிராமத்துக் கிண்டல் தான் நினைவுக்கு வருகிறது.
’மக்களாட்சி’ என சுயத் தம்பட்டம் அடிக்கும் இத்தேசத்தின் அரசியல் அமைப்பால் நிறுவப்பெற்ற,நீதித் துறையைப் போன்று

தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த தேர்தல் ஆணையத்தால் இப்போதும் எங்கள் பாலினத்தின் மாணுட உரிமை மறுக்கப்

பட்டிருக்கிறது.2014 ஏப்ரல் 15-ல் இத்தேசத்தின் தலையாய அதிகாரம் கொண்டதாக சொல்லப்படுகிற உச்சநீதிமன்றமே எங்களின்

பல்வேறு உரிமைகளை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வழங்கியப் பிறகும் தன்னாட்சிப் பெற்ற பகுதியளவு நீதித்

துறையாய் இயங்குகிற இந்த தேர்தல் ஆணையம், எங்கள் பாலினம் தேர்தலில் பங்கெடுக்க தெளிவான வரையரையை

வழங்கவில்லை எனில் இந்த தேர்தல் அமைப்பு எதனுடைய வழிகாட்டலில் இயங்குகிறது.மாணுடம் ஒன்றே எனும் அடிப்படை
உள்ளடக்கியிறுக்கிற அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறதா? அல்லது இம்மாணுட சமூகத்தைப்

பிடித்துள்ள கொடிய நோய்களில் ஒன்றான பாலின ஆதிக்கம் என்கிற உளவியலின் அடிப்படையில் இயங்குகிறதா?
ஒரு தேர்தல் தொகுதியில் ஆண் வாக்காளர்கள்,பெண் வாக்காளர்கள்,திருநங்கையர் வாக்காளர் என வாக்காளர்களை

பாலினத் தரம் பிரிக்கும் தேர்தல் ஆணையம் வேட்பாளர்களாக நாங்கள் போட்டியிடுவதற்கு தெளிவான வரையரைகளை

வழங்காதது ஏன்? பொதுத் தொகுதி வேட்பாளரை விட ,தலித்துகளுக்கும் பெண்களுக்கும் பிணைத் தொகைகளை

குறைத்திருக்கும் தேர்த்ல் ஆணையம்,தலித்துகளிலும் தலித்துகளாய்,பெண்களிலும் கொடும் துன்பத்தை அனுபவிக்கும்

பெண்களாய் எங்களின் திருநங்கையர் சமூகம் வாழ்கையில்,அரசியல் அரங்கில் எம் சமூகம் பங்கெடுக்கிற இச்சூழலில்

எங்களுக்கான பிணைத் தொகைகளை தெளிவாக வரையறுக்காத தேர்தல் ஆணையத்தின் இப்போக்கு பாலின ஆதிக்கத்தையே

காட்டுகிறது.
தேர்தல் ஆணையமே....
தலித்துகள்,பெண்கள் வேட்பாளர்களைப் போன்று திருநங்கையர்-திருநம்பியருக்கும் பிணைத் தொகையை நிர்ணயி !
...மதிப்பிற்குரிய மங்கை பானு

Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016