தாரிகா பானு

தாரிகா
ஒரு தேசத்த்தின் வளர்ச்சியை அதன் திசையை தீர்மானிப்பதில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது .நம் தேசத்தில் அத்தகைய கல்வி எத்தகைய பங்கு வகிக்கிறயது என்பதை திருநர் சமூகமாகிய நாங்கள் கல்வி கேட்டு அத்துறையின் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும்போது நேருக்குநேர் எதிர்கொள்கிறோம் .எங்களின் எதிர்கோள்கள் நிறைய இருப்பினும் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அதன் கட்டுப்பாட்டில் இருக்கிற பள்ளிகளில் நாங்கள் எதிர்கொண்ட பாலினதீண்டாமை !அதனினும் உச்சம்! "தீண்டாமை ஒரு பாவச்செயல் !தீண்டாமை ஒரு பெருங்குற்றம்!" என்ற அம்மாபெரும் சொற்றொடர் புத்தகங்களின் முதல் பக்கத்தில் மரணித்திருப்பதை தாரிகாவை பள்ளியில் சேர்த்துகொள்ளாமல் புறக்கணித்த ஆசிரியர்கள் ,அதிகாரிகள் வாயிலாக நேரே உணர்ந்தோம்!


எங்களுக்கு கல்வி வழங்க கூட முடியாமல் இந்த தேசம் ஏன் இயலாமையின் உச்சத்தில் இருக்கிறது ?இத்தகைய இயலாமையின் அடிபடையாக இருக்கிற திருநர் பற்றிய புரிதலை ,திருநர் உடல் இயங்கியலை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?இத்தேசத்தின் தலையாயதாக கருதப்படுகின்ற உச்சநீதிமன்றமே கல்வி,வேலைவாய்ப்பில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென தீர்ப்பெழுதிய பிறகும் அதை செயல்படுத்த முடியாமல் அரசாங்கங்களே அதனுள் இயங்கும் அதிகாரிகளை தடுப்பது ஏன் என்கிற வினாக்காள் என் சிந்தனையில் விழுந்தவண்ணமே உள்ளது! உள்ளபடியே இத்தேசத்தின் உளவியல் எங்களின் உடலியங்கியலை ,உடல் விதியை புரிந்துகொள்ளாததின் விளைவே நாங்கள் அனுபவித்துகொண்டிருக்கும் துன்பங்களுக்கு அடிப்படையாக இருக்கிறது .நாங்கள் ஆண் உடலில் பெண் உணர்வை கொண்டவர்கள் இதனால் ஆணுறுப்பை அறுத்தெரிந்து அறுவைசிகிச்சை செய்து எங்கள் பாலினத்தை மாற்றிகொள்கிறோம்" என எங்களின் முழுவலிமையையும் பயன்படுத்தி இந்த பரந்த பொதுச்சமூகத்தின் காதுகளில் முழங்கிகொண்டுதான் இருக்கிறோம் ஆனால் முழுவதுமாக எங்களின் முழக்கம் உள்வாங்கபடவில்லை காரணம் நாங்கள் சமூகத்திலிருந்து சமூகத்தினால் அந்நியப்பட்டு வாழ்கிறோம் இதனால் எங்கள் முழக்கத்திற்கும் சமூகத்தின் காதுகளுக்குமான இடைவெளி மிகநீண்ட நெடியதாக இருக்கிறது .இதில் வழுவிழந்து எங்களின் முழக்கம் துடிக்கிறது .இந்த சமூகத்தின் அனைத்து உறுப்புகளிலும் எங்களின் உயிருருக்கள் இரண்டர கலந்தால்தான் எங்களின் உடலியங்கியலை அதனுள்ளே அழகோடு மிளிரும் மனிதத்தை இச்சமூகத்தினால் புரிந்து கொள்ள முடியும் இதற்கு கல்வி நிலையங்கள் ,பணியிடங்களில் அனைத்திலும் அனைவரோடும் எங்கள் பாலின உயிருருக்களும் இயங்குதல் வேண்டும் .அதனால் கல்வி ,வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் இட ஒதுக்கீடு உச்ச வழக்கியல் மன்றத்தின் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு முரணின்றி செயல் பட வேண்டும்.சிறப்புவாய்ந்த தீர்ப்பும் கூட தன் தெளிவற்ற பக்கங்களை தெளிவாக்கிகொள்ளவேண்டும்!!
இல்லையேல் தினம், தினம் தாரிகா போன்ற திருநர்கள் புறக்கணிப்புக்கும் ,தீண்டாமைக்கும் ஆட்பட்டேதான் தீர்வார்கள்!!!!தாரிகாவை போன்று போராடிதான் கல்வி நிலையத்தை மிதிக்கமுடியும்.


...மதிப்பிற்குரிய மங்கை பானு

Comments

Popular posts from this blog

Euthanize Us!

போர் பறவைகள்

மாற்றுப்பாலினத்தோர் பாதுகாப்பு உரிமை மசோதா -2016