போர் பறவைகள்

வல்லினம்,மெல்லினம்,இடையினத்தில் கீதம் இசைக்கும் பறவைகள் அலரித்துடிக்கின்றன, என்றோ நிகழ்ந்த அந்த கொடிய போரை நினைவூட்டும் வெடி சப்தங்களை கேட்டு !!!!அதில் எழுந்து சூழும் புகையின்நெடியை நுகர்ந்து!!!! ஆபத்து நிலையை உணர்ந்த பறவைகள் கூட்டத்தின் திட்டமிடல் உருவாகிறது.திட்ட உருவாக்கம் காக்கையின் பணி.மலைக்குருவியும்,வயல் கொக்கும்,கடல் புறாவும் முக்கியஸ்தர்கள் என தீர்மானிக்கப்படுகிறது. பருந்து தூது செல்கிறது,உடனே வந்துசேருகிறார்கள் மூன்று முக்கியஸ்தர்கள் சில கிளைகளையும் அடர் இலைகளையும் கொண்ட வேப்பமரத்தினுள்ளே கூட்டம் நிகழ்கிறது தன் சிறிய சிறகுகளை சிலிர்த்தவண்ணம் பேச துவங்குகிறது மலைக்குருவி"அவர்கள் மலைவனத்தை அழிக்கிறார்கள் அங்குள்ள மானுடத்தை கொல்லுகிறார்கள் .

 Image result for கொக்கு

மலையை உடைக்க அவர்கள் பயன்படுத்தும் வெடிமருந்து வெடியை விட அவர்கள் கொன்று போட்ட மலைவாழ் மனிதர்களின் பிணத்தின் நீச்சி அதிகமாய் இருக்கிறது!! எங்களால் அங்கு வாழவே முடியவில்லை ஏதாவது செய்யவேண்டும்!!!செய்யவேண்டும் ..!!!"என பட படப்போடு பேசி அமர்ந்தது மலைக்குருவி.அடுத்து தன் சாம்பல் நிற இறக்கையை இரண்டு முறை விசிறி கூட்டத்தின் நடுவே வந்தது கடல்புறா, ஆம்.!! மலைக்குருவியைப்போல எங்களால் கடலில் வாழமுடியவில்லை அமைதி சூழ்கொண்டிருக்கும் நடுக்கடலில் அவர்கள் இரசாயனகுப்பைகளை கொட்டுகிறார்கள் .அதன் நச்சுத்தன்மை சகிக்க முடியாமல் கரையோரம் செத்து ஒதுங்குகிறோம் நாங்கள். கடல்தாயான பவளபாறை அழியபோகிறது!!!!காப்பாற்ற வேண்டும்!!!! எப்படியாவது...!!!! காப்பற்றவேண்டும் ..!!!என பிள்ளை உணர்ச்சியை வெளிப்படுத்தி அமர்ந்தது கடல்புறா.

Image result for பறவைகள் கூட்டம்
தன் வெண்ணிற மேனியை நீண்டகால்களில் சுமந்து வந்து கூட்டத்தின் முன் நின்றது கம்பீரமாய் வயல் கொக்கு "
கடலில் கொட்டப்படும் ரசாயன நச்சு வயலிலும் தூவப்படுகிறது.இதனால் நம் நண்பர்களான வயல் பறவைகள் நிறைய அழிந்து போயின வயலும் அழிவின் விழிம்பில் நிற்கிறது.சேரால் பூத்துகுழுங்கிய பூமி கட்டாந்தரையாகி எல்லைகற்களை சுமந்து நிற்கிறது.உணவுக்கே பல மயில் பறந்து திரிகிறோம்.பஞ்சத்திலிருந்தும் ,நஞ்சிலிருந்தும் ,மரணத்திலிருந்தும் எப்படியாவது வயல் பறவைகளை காப்பற்றவேண்டும்!!!!காப்பற்றவேண்டும் ..!!!!என கண்ணாடி துகள்களாய் தன் கண்ணீர் துளிகளை சிந்தியமர்ந்தது வயல் கொக்கு.கூட்டத்திற்கு தலைமை வகுத்து அனைத்தையும் பொறுமையாய் கேட்ட அழகிய கரிய காக்கை முடிவுரையாற்றியது "நீங்கள் அனைவரும் கூறியது போல் ஏதாவது செய்யவேண்டும் ???என்ன செய்யலாம் ????
Related image
இந்த பூமி கடலாலும் ,மலையாலும்,வயலாலும் ஆனது இவற்றை அழிய விடாமல் காத்து நின்றால் தான் நாம் உயிர்வாழமுடியும்.நாம் மடிவதற்கு காராணமாய் இருக்கும் அந்த தீயோரை எதிர்த்துப்போரிட நமக்கு பலம் இல்லை .பலமிருக்கும் மானுடத்தை நம்புவதில் அர்த்தமும்மில்லை ஏனெனில் அனைத்துக்கும் காரணமான மானுடத்தின் சிறு கும்பலை எதிர்க்க துணியாது இப்பெரும் மானுடம் இன்றும்கூட " தீபாவளி "என்று தீய போரை உயர்த்தி பிடிக்கிறது அவர்கள் உணர்வற்றுகிடக்கிறார்கள் .நாம்தான் ஏதாவது செய்யவேண்டும் !!!! நாம் ஒரு நற்போரை உடனே தொடங்கி ஆக வேண்டும் .வளங்களை அழிப்போருக்கு எதிராக விதையை ஆயுதமாய் செய்வோம்,நிறைய இரையை சேகரிப்போம் அதில் விதையை பிரித்தெடுப்போம் அதை அழகின் வழியாய் வளங்களில் தூவுவோம் !!!!நிறைய உண்போம் நம் எச்சமும் விதைதான் !!!!!எச்சங்களின் வழியாகவும் விதைகளை தூவுவோம் அவர்களின் அணு ஆயுதத்தை விட விதையுள்ள நம் எச்சம் வலிமையான து என்பதை புரிய வைப்போம் ,இன்றே அதை செய்வோம்" என உணர்ச்சி பொங்க கூறியது கரிய காக்கை.இறக்கையால் கைதட்டி காக்கையின் தீர்வை வரவேற்றன மற்ற பறவைகள் அதை உடனே செய்திட சிறகடித்தது பறவைக்கூட்டம் .அதன் சப்தம் ஓர் உன்னத போரின் அறைகூவலாய் இருந்தது.

...மதிப்பிற்குரிய மங்கை பானு

Comments

  1. அருமை தோழர்👍

    ReplyDelete
  2. சூப்பர். வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

To kill the transgender in the name of Protection of Transgender Rights Bill-2016

உலகப் பெண்களே வாழ்த்துக்கள்…!Wishes to all women of the world..!