Posts

தேர்தல் ஆணையம்

எங்கள் சமூகத்தின் மாணுட அங்கீகாரம் மறுத்து, சர்வதேசிய சமூகத்தின் முன்னால் நின்று ‘ஜனனாயகம்’ என்ற வார்த்தையால் தன்னை சீவி சிங்காரித்து நிற்கும் இத்தேசத்தைப் பார்க்கும்போது ‘ஒய்யாரக் கொண்டையாம் தாழம் பூவாம் உள்ளே ஈரும் பேணாம்” என்கிற கிராமத்துக் கிண்டல் தான் நினைவுக்கு வருகிறது. ’மக்களாட்சி’ என சுயத் தம்பட்டம் அடிக்கும் இத்தேசத்தின் அரசியல் அமைப்பால் நிறுவப்பெற்ற,நீதித் துறையைப் போன்று தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த தேர்தல் ஆணையத்தால் இப்போதும் எங்கள் பாலினத்தின் மாணுட உரிமை மறுக்கப் பட்டிருக்கிறது.2014 ஏப்ரல் 15-ல் இத்தேசத்தின் தலையாய அதிகாரம் கொண்டதாக சொல்லப்படுகிற உச்சநீதிமன்றமே எங்களின் பல்வேறு உரிமைகளை உள்ளடக்கிய சிறப்பு வாய்ந்த தீர்ப்பு வழங்கியப் பிறகும் தன்னாட்சிப் பெற்ற பகுதியளவு நீதித் துறையாய் இயங்குகிற இந்த தேர்தல் ஆணையம், எங்கள் பாலினம் தேர்தலில் பங்கெடுக்க தெளிவான வரையரையை வழங்கவில்லை எனில் இந்த தேர்தல் அமைப்பு எதனுடைய வழிகாட்டலில் இயங்குகிறது.மாணுடம் ஒன்றே எனும் அடிப்படை உள்ளடக்கியிறுக்கிற அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் இயங்குகிறதா? அல்லது இம்மாணுட சமூகத்தைப் பிட...

நடக்க முடியாத குதிரைக்கு சறுக்கியது சாக்கு....பி.ஜே.பி அரசின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கொள்கைக்கு மக்கள் விரோத காங்கிரஸ் சாக்கு............

கடந்த 2014 ஏப்ரலில் இந்நாட்டின் தலையாய மன்றமாக கறுதப்படுகின்ற உச்சநீதிமன்றம் திருநங்கை,திருநம்பியருக்கு கல்வி,வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அதற்கான சட்டங்களை மத்தியிலும் மாநிலங்களிலும் இயற்றுங்கள் என்று சொன்ன பிறகும்,தனிநபர் மசோதா ,திரு.திருச்சி சிவா அவர்களால் 36 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தி ன் மாநிலங்களவையில் முன் மொழியப்பட்டு ,அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.(அதை சமூக நீதி அதிகாரமளித்தல் துறை (social justice)அமைச்சகம் காதோடு காது வைத்தாற் போல இணையத்தில் கருத்துக் கேட்டு பல மாற்றங்களை தன் விருப்பத்திற்கு மாற்றியதென்பது வேறு) இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 03 ஆம் தேதி சமூக நீதி அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர் திரு.தவார் காண்ட் கெலாட் “உச்ச நீதி மன்றமே இயற்றிட உத்தரவிட்ட திருநங்கை திருநம்பி மசோதா, விவாதத்திற்கு மக்களவையில் காத்திருப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் நேஷனல் ஹெரால் விவகாரத்தை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்க நினைக்கிறது என்பதாகவும் கூறியிருந்தார்.ஆனால் அதன் பிறகு ஹெரால்ட் போனது,,,ரோ...