Posts

Showing posts from 2018

தியாகத்தால் சிவந்த தூத்துக்குடி

Image
2018 மே 22.. நச்சுப் புகையைக் கக்கும் ஸ்டெர்லைட்டை எதிர்த்த, தூத்துக்குடி அதன் சுற்று வட்டார மக்களின் கோரிக்கைப் பேரணி, ரத்த வெள்ளாமாக மாற்றப்படும் என்று அனில் அகர்வாலுக்கும் அரசுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஸ்டெர்லைட் நிறுவனம் பேரணியாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பாதுகாப்புக் கேட்டு, உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை நாடியதும் நீதி மன்றம் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டதும், துப்பாக்கிச் சூட்டுக்கான கொடியதொரு முன்னேற்பாடுகளே என்பதை மக்கள் அறியாமல் தான் இருந்தார்கள். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்களை சிலந்தி வலையாக அவர்கள் முன்னரே பின்னியிருந்தார்கள். மக்களை பூச்சிகளை போல அவர்கள் லாவகமாக பிடித்து சுட்டுத் தின்ற காட்சிகளையெல்லாம் நாம் நேரடியாகவும் நேரலை வழியாகவும் பார்த்தோம்..! புற்று நோயிலிருந்து விடிவு கேட்டவர்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களை மருந்தாக கொடுக்கும் கொடூரம் அவர்களுக்கே உரியது. பாதிக்கப்பட்ட மக்களை பயங்கரவாதிகளாகவும் கலவரக்காரர்களாகவும்  சித்தரித்து நியாயம் கேட்ட மக்களை சுட்டுக் கொள்ளும் பானியும் என்றென்றும் அவர்களுக்கே உரியது.! அரசின் இ...

உலகப் பெண்களே வாழ்த்துக்கள்…!Wishes to all women of the world..!

Image
உலகப் பெண்களே வாழ்த்துக்கள்…! உலகெங்கிலும் உள்ள போரட்டப் பெண்களால் செங்குருதி ஊற்றப்பட்டு வளர்க்கப்பட்ட விடுதலைச் செடியில் மலர் மொட்டுகள் எட்டிப் பார்க்கும் 21 ஆம் நூற்றாண்டின் காலைப் பொழுதில் உலகின் பெண்களுக்கும் உழைப்போருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களை கூறுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்…! பூமிப் பந்தின் தெற்காசியாவில் படர்ந்திருக்கும் சொர்க்க பூமியான இந்தியாவால் `மானுடமா இல்லையா ?’ என்று விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொருளின் உருவத்தின் உயிர் துளி நான்.மாற்றுப் பாலினத்தோர் பற்றிய வரையறையில் இன்னுமும் ஒரு தெளிவுக்கு வரமுடியாததாகவே இன்னுமும் எங்கள் `சொர்க்க தேசம்’ விவாதித்து வருகிறது.எங்களின் தேசம் மட்டுமல்ல புவியின் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஏழு கண்டங்களின் நிலையும் மாற்றுப் பாலினத்தவர் பற்றிய புரிதலில் குழம்பியதாகவே காட்சி தருகிறது. ஆப்ரிக்காவில் முத்துக்களாய் நாங்கள் மிளிர்ந்த போதும்,ஐரோப்பாவின் ரோஜாக்களாய் நாங்கள் சிரிக்கிற போதும் ,அமெரிக்காவில் போர்ப் பறவைகளாகவும் ஆசியாவில் அறிவின் பறவைகளாகவும் நாங்கள் சிறகை விரிக்கிற போதும் எங்களின் ஆளுமைகள் மறைக்கப்பட்டு நாங்கள்...

சந்தையூர் தீண்டாமை சுவர்..!Santhayur Caste Wall...!

Image
மதுரைக்கு அருகே உள்ள சந்தையூர் இன்று சண்டையூராய் காட்சித் தருகிறது . சாதியத் தீ இன்றைக்கு தலித்துகளின் மனங்களையும் பற்றிக் கொண்டு ஒரு புதிய பரிணாமத்தை உருவகப்படுத்துகிறது . ஆதிக்க சாதிகளை எதிர்த்து பறையர்கள் , தேவேந்திரர்கள் அருந்ததியர்களுக்கு இடையிலான அரசியல்   ஒற்றுமை இன்றைக்கு குலையக் காண்கிறோம் . அம்பேத்கர் நூற்றாண்டு எழுச்சிக் காலத்தில் இம்மூன்று சமூகங்களும் ஒன்றாகவே களத்தில் இருந்தன . ஆனால் இன்றோ அக்களம் குலையக் காண்கிறோம் . அதற்கான காரணங்களை சமூக பொருளியல் அடிப்படைகளை அடையாளம் காண்பதும் அவசியம் என்றே கருதுகிறேன் .. பறையர் சமூகத்திலிருந்து பிறந்த ரெட்டைமலை சீனிவாசன் அவர்களும் தேவேந்திர சமூகத்திலிருந்து பிறந்த இம்மானுவேல் சேகரன் அவர்களும் அருந்ததியர் சமூகத்திலிருந்து பிறந்த எல் . சி . குருசாமி ஜகநாதன் அவர்களும் நடத்திய அந்த போரட்டங்களிலிந்து , அவர்கள் முன் வைத்த அந்த கோரிக்கைகளிலிருந்து தற்போதைய தலித் அரசியல் களம் வேறுபட்டே இயங்குகிறது . அவர்கள் அப்போதே வைத்த கோரிக்கைகள் இன்னும் வெல்லப்ப...