உலகப் பெண்களே வாழ்த்துக்கள்…!Wishes to all women of the world..!
உலகப் பெண்களே வாழ்த்துக்கள்…!
உலகெங்கிலும் உள்ள போரட்டப் பெண்களால் செங்குருதி ஊற்றப்பட்டு வளர்க்கப்பட்ட விடுதலைச் செடியில் மலர் மொட்டுகள் எட்டிப் பார்க்கும் 21 ஆம் நூற்றாண்டின் காலைப் பொழுதில் உலகின் பெண்களுக்கும் உழைப்போருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களை கூறுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்…!
பூமிப் பந்தின் தெற்காசியாவில் படர்ந்திருக்கும் சொர்க்க பூமியான இந்தியாவால் `மானுடமா இல்லையா ?’ என்று விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொருளின் உருவத்தின் உயிர் துளி நான்.மாற்றுப் பாலினத்தோர் பற்றிய வரையறையில் இன்னுமும் ஒரு தெளிவுக்கு வரமுடியாததாகவே இன்னுமும் எங்கள் `சொர்க்க தேசம்’ விவாதித்து வருகிறது.எங்களின் தேசம் மட்டுமல்ல புவியின் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஏழு கண்டங்களின் நிலையும் மாற்றுப் பாலினத்தவர் பற்றிய புரிதலில் குழம்பியதாகவே காட்சி தருகிறது.
ஆப்ரிக்காவில் முத்துக்களாய் நாங்கள் மிளிர்ந்த போதும்,ஐரோப்பாவின் ரோஜாக்களாய் நாங்கள் சிரிக்கிற போதும் ,அமெரிக்காவில் போர்ப் பறவைகளாகவும் ஆசியாவில் அறிவின் பறவைகளாகவும் நாங்கள் சிறகை விரிக்கிற போதும் எங்களின் ஆளுமைகள் மறைக்கப்பட்டு நாங்கள் நாற்றமெடுக்கும் மலத்தாலான மனிதர்களாகவே உலக அரசுகளால் அணுகப்படுகிறோம்.
20 ஆம் நூற்றாண்டின் போராற்றல் கொண்ட பெண்களால் அவர்களின் மகத்தான எழுச்சியால் பெண்களையும் அடுப்படியையும் இணைத்து வைத்திருந்த அடிமைச் சங்கிலிகள் தவிடுபொடியாயின.ஆணாதிக்கத்தின் சில வடிவங்கள் அலறி ஒளிந்து கொண்டன.
ஆனால் நாங்கள் 21 ஆம் நூற்றாண்டிலும் ஆணாதிக்கம் பெண்ணாதிக்கம் கலந்த பாலாதிக்கத்தால் கொடூர ஒடுக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டு தான் இருக்கிறோம்.!
குடும்ப தீண்டாமை,சமூகத் தீண்டாமை,அரச தீண்டாமை எனும் முத்தீண்டாமைகளால் சித்ரவதை செய்யப்படும் சமூகமாகவே எங்கள் மாற்றுப் பாலினம் இன்றுவரை இருந்துவருகிறது.
நாங்கள் குடும்பத்தில் வாழ்வதற்கும் தெருவில் நடப்பதற்கும் தொழில் புரிவதற்கும் கல்வி பயில்வதற்கும் தகுதியற்றவர்களாகவே கருதப்படுகிறோம்.!
முத்தீண்டாமைகளின் கெட்டிப் பாறை எங்கள் மீது அழுத்திக் கொண்டிருக்கும் தருவாயில் கூட ஆப்ரிக்காவில் ஜானி வான் வால்ஸ்ட்ரோம் என்பவர் திரைத் துறையில் சாதித்துக் காட்டினார்.இந்தியாவில் எழுத்தாளர்களாகவும் நாடகக் கலைஞர்களாகவும் திரை நட்சத்திரங்களாகவும் பொறியாளர்களாகவும் மருத்துவர்களாகவும் அரசியலாளர்களாகவும் இயங்கி அந்த கெட்டிப் பாறையை முட்டித் தள்ளிக் கொண்டுதான் இருக்கிறோம்.அமெரிக்காவின் ராணுவத் துறையில் எங்களின் கரங்களும் ஆயுதங்களை இயக்கும் ராணுவக்காரர்களாய்,பிரிட்டனில் ராணுவ அதிகாரியாய் அந்த கெட்டிப் பாறையை சுட்டு பொசுக்கத் தான் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுடைய ஆளுமைகளை யாரின் துணையுமின்றி நாங்களே வளர்த்துக் கொண்டோம்.சிறு வேலையைக் கூட போராடியே பெற்றுக் கொண்டிருக்கிறோம்.பெண்களே…. உங்களிடமிருந்தே,உங்களின் போராட்டக் களங்களைக் கண்டே எங்கள் போரட்டக் களங்களை நங்கள் கட்டமைத்துக் கொண்டு வருகிறோம்.நீங்கள் எழுப்பிய முழக்கங்களைப் போன்றே இப்போது நாங்களும் எழுப்ப தயாராக இருக்கிறோம்.
அன்று நீங்கள் கூட்டிய வரலாற்றுச் சிறப்புவாய்ந்த கோபன்ஹேகன் பெண்கள் மாநாட்டைப் போன்றே நாங்கள் சர்வதேசிய அளவில் மாற்றுப் பாலினத்தோர் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறோம்..!
உங்களைப் போன்றே சுரண்டலை எதிர்த்து, லாபவெறிப் போர்களை எதிர்த்து நாங்களும் முழக்கமிடத் தயாராக இருக்கிறோம்.ஏனெனில் நாங்கள் உங்களோடு சக உயிரியாக சேர்ந்து வாழவே விரும்புகிறோம்.தயவுகூர்ந்து எங்கள் மீது பாலாதிக்கத்தைப் பொழியாதிருப்பீர்களாக…!மார்ச் 08 ன் தேவை இன்னும் அப்படியே இருக்கிறது.நீங்கள் பாதி அடிமைகள் எனில் நாங்கள் முழு அடிமைகள்..!இருவரும் இணைந்தே மார்ச் 08 ன் போர்க்குரலை முழங்கி முன்செல்வோம்…!
மீண்டுமொருமுறை பெண்கள் தின வாழ்த்துக்கள்…!
Wishes to all women of the world!
I am joyful to share women's day greetings with all women and workers on this 21st century dawn, as the liberation plant watered red by revolutionary women around the world has started blooming.
I am the life drop of a thing, a shape whose humanity or the lack of it is argued on the heavenly land in south asia, India. Our Land of heaven is still unclear on definitions about trans* people. Not merely our homeland but all the continents are confused in understanding us.
Though we shine as the pearls of africa, smile as the roses of europe, fly as war birds of america, and spread our wings as birds of wisdom in Asia. Our personalities are invisiblized and we are treated by the world governments as stinking people of shit.
With the amazing rising of 20th century women, the patriarchal bonds that bound them to the kitchen where shattered. Few forms of patriarchy ran screaming and hid from the world.
But Even in 21st century we are attacked by gender discrimination. Our trans* community is tortured by the untouchablities from family, society and government. We are considered not qualified to be family, work, study or even walking in the streets. Despite all this Johny wan walstrom from africa has acheived in film industry. We are shattering those rigid frozen things in India as theatre artists, writers, cine stars, engineers, doctors and politicians. Our hands are getting ready to opearate weapons as army people in america and britain to shatter this frozen notions. We develop our personalities independantly. We earn our little things with lot of struggle. Women... We see your protests and build ours based on that. We have seen your slogans and now we shout ours. @We have seen your historical copenhagen women's meet and now we are getting ready to do an international trans* meeting.
We are also ready to protest exploitation and money wars like you. For we want to live along you as equals. Be kind and don't discriminate on our gender. March 08's needs are still there. If you are half slaves, we are slaves. We shall march together carrying the protesting slogans of march 08.
Once again, My women's day greetings.
English Translation: Vetri@Violet
Comments
Post a Comment