மது எனும் கொடிய நஞ்சு...! Abolishing Alcohol..!
மது ஒழிப்பில்.... மது எனும் கொடிய நஞ்சு ஒட்டுமொத்த மக்கள் திரள் மீது இன்றைக்கு தெளிக்கப்பட்டு வருகிறது.நம் கண் முன்னால் மக்கள் செத்து மடிவதும் சீரழிவதும் நடந்தவண்ணம் தான் உள்ளத்ய்.இந்நாட்டில் நிகழ்ந்தேறும் ஒவ்வொரு கொலைகளுக்குப் பின்னால் ஒவ்வொரு கற்பழிப்புக்கு பின்னால்,ஒவ்வொரு விபத்தின் பின்னால்,ஒவ்வொரு குடும்ப பிரிவுகளுக்குப் பின்னால் மது ஒரு முக்கிய காரணியாக செயல்படுவதை நாம் காண முடியும் இந்த அரசாங்கம் வருவாயை மட்டுமே முக்கியமாக எடுத்துக்கொண்டு மக்களை அவல நிலைக்குத் தள்ளுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.மது விசயத்திலும் முரண்களைக்கொண்ட நாடாகவே திகழ்கிறது.குஜராத், மணிப்பூர் ,நாகலாந்தில் தடை செய்யப்பட்டிருக்கும் மது தமிழகத்தில் திறந்து விடப்படுகிறது எனில் அதன் நொக்கம் என்ன? மதுவினால் ஒட்டு மொத்த மக்களும் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மற்ற சமூகத்துக்குநிகரான பாதிப்பையே எங்கள் சமூகமும் அடைகிறது.எந்த தீமையும் பலவீனமானவர்களையேத் தாக்கும் என்ற கூற்றுப்படி,பொதுச் சமூகத்தினால் தீட்டிற்கும் தீண்டாமைக்கும் ஆட்பட்டிருக்கும் எங்கள் சமூகம் மதுவின் கொடிய பாதிப்புகளை சுமந்து திர...