மாற்றுபலினத்தவர் மீதும் அக்கறை கொண்ட தோழர்.கௌரிலங்கேஷ்
கடந்த மாதம் காட்டாட்சியின் கொலை ஆயுதங்களால் உசுரிழந்தார்கள் தமிழகத்தில் வளரும் லங்கேஷும் கன்னடத்தில் வளந்த அனிதாவும்.அனிதாவின் கழுத்தை இறுக்கியது தூக்குக் கயிறாக இருக்கலாம்,லங்கேஷை துளைத்தது துப்பாக்கித் தோட்டாக்களாக இருக்கலாம்.ஆனால் அதை எய்த கைகள் ஒன்றுதானே…! அந்த கரங்கள் தானே மஹராஷ்ரத்தில் 21.08.2013 அன்றின் காலைப் பொழுதின் முகத்தில் நரேந்திர தபோல்கரின் ரத்தத்தை பூசி சென்றது…!அந்த கரங்கள் தானே 19.02.2015 அன்று அதே மஹராஷ்ரத்தில் அதேப் போன்றதொரு காலைப் பொழுதின் முகத்தில் கோவிந் பன்சாரேவின் ரத்தத்தைப் பூசி சென்றது.கெளரியையும் கல்புர்கியையும் பன்சாரேவையும் ஒரே பானியிலேயே அவர்கள் கொன்றிருக்கிறார்கள் அது மோட்டார் சைக்கிள்,முகமூடி, 7.6 எம்.எம். அளவுள்ளத் துப்பாக்கி.இதுவே அவர்களின் பானியாக இருக்கிறது.அவர்களின் இந்த பானியால் சமூக செயல்பாட்டாளர்கள்,எழுத்தாளர்கள் போன்றோரின் மனங்களில் மரண பயத்தை விதைக்க நினைக்கிறார்கள்.அத்தகைய நினைப்பிற்கு நீரூற்றி வேலியடித்து அதற்கு ஒன்றும் நேர்ந்திடாதவாறு காத்து வருகிறது பி.ஜே.பி.ஆட்சி. அவர்கள் அந்த மசூதி இடிப்பைப் போன்றே,அந்த ரத யாத்திரையைப் போன்றே,க...