உழைக்கும் பெண்கள் தினம்...
அன்பிற்குரிய உழைக்கும் பெண்களே, உங்களுடைய வாழ்வும் வாழ்வுக்கானப் போராட்டமும் மகத்தானது என்பதை நாங்கள் அறிவோம்! அதேப்போல உங்களைப்போன்று உங்களருகில் உங்களாகவே வாழ்கிற உங்களை நீங்கள் அறிவீரோ! பல நூறு ஆண்டுகள் அடிமையாய் ,வெடிகுண்டின் அமைதியாய் இருந்த பெண் இனம் 1789 ஜூன் 14-ல் கொட்டும் மழையில் சுதந்திரம்,சமத்துவம் என முழங்கியபடி பாரிஸ் நகர வீதிகளில் வெடித்த்தில் அதிர்ந்தது உலகம் என்பதை நாங்கள் அறிவோம் ! சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நீங்கள் வாழ்ந்த்தைப் போன்று அடிமையாய் நீங்கள் இருந்த்தைப் போன்று வெடிகுண்டின் அமைதியாய் நிகழ்காலத்திலும் உங்களருகில் வாழும் உங்களை (திருநங்கைகளை )நீங்கள் கண்டதுண்டா? 8 மணிநேர வேலை ! பெண்களுக்கு வாக்குரிமை !பெண்கள் அடிமையாக நடத்தப் படுவதிலிருந்து விடுதலை !என பாரிஸின் ஆண் தொழிலாளர்களோடு சேர்ந்து நீங்கள் பதாகை உயர்த்தியதைக் கண்டு அரசன் லூயி பிலிப் முடித் துறந்தது வரலாற்றுப் பக்கங்களில் இன்றும் மின்னிடும்.ஆனால் வரலாற்றுப் பக்கங்களில் அச்சிடப்படாத,அச்சேறும் காகித்த்துக்கு சொந்தக்காரி உஙகளைப் போன்றே இருந்தாள் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா...