தியாகத்தால் சிவந்த தூத்துக்குடி
2018 மே 22.. நச்சுப் புகையைக் கக்கும் ஸ்டெர்லைட்டை எதிர்த்த, தூத்துக்குடி அதன் சுற்று வட்டார மக்களின் கோரிக்கைப் பேரணி, ரத்த வெள்ளாமாக மாற்றப்படும் என்று அனில் அகர்வாலுக்கும் அரசுக்கும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஸ்டெர்லைட் நிறுவனம் பேரணியாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து பாதுகாப்புக் கேட்டு, உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை நாடியதும் நீதி மன்றம் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டதும், துப்பாக்கிச் சூட்டுக்கான கொடியதொரு முன்னேற்பாடுகளே என்பதை மக்கள் அறியாமல் தான் இருந்தார்கள். துப்பாக்கிச் சூட்டுக்கான காரணங்களை சிலந்தி வலையாக அவர்கள் முன்னரே பின்னியிருந்தார்கள். மக்களை பூச்சிகளை போல அவர்கள் லாவகமாக பிடித்து சுட்டுத் தின்ற காட்சிகளையெல்லாம் நாம் நேரடியாகவும் நேரலை வழியாகவும் பார்த்தோம்..! புற்று நோயிலிருந்து விடிவு கேட்டவர்களுக்கு துப்பாக்கித் தோட்டாக்களை மருந்தாக கொடுக்கும் கொடூரம் அவர்களுக்கே உரியது. பாதிக்கப்பட்ட மக்களை பயங்கரவாதிகளாகவும் கலவரக்காரர்களாகவும் சித்தரித்து நியாயம் கேட்ட மக்களை சுட்டுக் கொள்ளும் பானியும் என்றென்றும் அவர்களுக்கே உரியது.! அரசின் இ...