உலகப் பெண்களே வாழ்த்துக்கள்…!Wishes to all women of the world..!
உலகப் பெண்களே வாழ்த்துக்கள்…! உலகெங்கிலும் உள்ள போரட்டப் பெண்களால் செங்குருதி ஊற்றப்பட்டு வளர்க்கப்பட்ட விடுதலைச் செடியில் மலர் மொட்டுகள் எட்டிப் பார்க்கும் 21 ஆம் நூற்றாண்டின் காலைப் பொழுதில் உலகின் பெண்களுக்கும் உழைப்போருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்களை கூறுவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்…! பூமிப் பந்தின் தெற்காசியாவில் படர்ந்திருக்கும் சொர்க்க பூமியான இந்தியாவால் `மானுடமா இல்லையா ?’ என்று விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொருளின் உருவத்தின் உயிர் துளி நான்.மாற்றுப் பாலினத்தோர் பற்றிய வரையறையில் இன்னுமும் ஒரு தெளிவுக்கு வரமுடியாததாகவே இன்னுமும் எங்கள் `சொர்க்க தேசம்’ விவாதித்து வருகிறது.எங்களின் தேசம் மட்டுமல்ல புவியின் மீது போர்த்தப்பட்டிருக்கும் ஏழு கண்டங்களின் நிலையும் மாற்றுப் பாலினத்தவர் பற்றிய புரிதலில் குழம்பியதாகவே காட்சி தருகிறது. ஆப்ரிக்காவில் முத்துக்களாய் நாங்கள் மிளிர்ந்த போதும்,ஐரோப்பாவின் ரோஜாக்களாய் நாங்கள் சிரிக்கிற போதும் ,அமெரிக்காவில் போர்ப் பறவைகளாகவும் ஆசியாவில் அறிவின் பறவைகளாகவும் நாங்கள் சிறகை விரிக்கிற போதும் எங்களின் ஆளுமைகள் மறைக்கப்பட்டு நாங்கள்...