கருணைக் கொலை செய்யுங்கள்…!
கருணைக் கொலை செய்யுங்கள்…! இந்தியாவின் பிரதமர் அவர்களுக்கும் குடியரசு தலைவர் அவர்களுக்கும்… வணக்கம்…! இந்த ’’சுதந்திர’’ தேசத்தில் இம்மண்ணின் மைந்தர்களாகப் பிறந்து ரத்த உறவுகளால்,சொந்த அரசினால்,சுற்றி நிற்கும் சமூகத்தினால் சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப்பட்ட மாற்றுப் பாலினத்தோர் அனுபவிக்கும் கொடிய துக்கம் சிந்தும் வெண் ரத்தத்தையும் செங்குருதியையும் மையாய் உறிஞ்சி எழுத்துக்களாய் உருட்டி உங்களுக்கு கடைசிய்யாய் ஒரு கோரிக்கை வைக்கிறேன் எங்களைக் கருணைக் கொலையாவது செய்யுங்கள்…! ’’மாற்றுப் பாலினத்தோர் பாதுகாப்பு மசோதா 2016(The Transgender Persons(Protection of Rights)bill,2016 ’’ல் இந்திய ஜனநாயகம் அதன் உட்கரு ஆற்றலைத் துறந்து ஒரு வகையான வினோத நச்சு செயல்களை எங்கள் மீது உமிழ்ந்து வருகிறது.நீங்கள் உமிழும் நச்சுப் பட்டு எங்கள் உயிர் துடி துடித்துக் கொண்டிருக்கிறது…துடிதுடிப்பின் சித்ரவதையை விட உயிர் துறப்பு எவ்வளவோ மேலானது.அகையினால் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள்…! அரசியலமைப்புச் சட்டமும் நீதித்துறையும் நிர்வாகமும் பிரிதிநிதித்துவ அவைகளும் ஒன்ற...