Posts

Showing posts from September, 2017

அனிதாக்களே உங்களுக்காக............

Image
என்னுள் இயங்கும் பாலுயிரியை வெளிபடுத்திட அவ்வுயிரில் வாழ்ந்திட தொடைக்கு நடுவே மூன்றங்குலம் தொங்குகிற ஆணுறுப்பை அறுத்தெரிந்து ,ரத்ததில் நனைந்து “ திருநங்கை ”யாய் மலர்ந்தேன் .அது ஒரு பேரானந்தம் என்றே மகிழ்ந்தேன்.ஒரு சுய பாலுயிரியாய் சிறகை விரித்தேன்.சிறுவயதாய் இருந்த அப்போதெல்லாம் எனக்கு தெரியாது,சுயமாய் சிறகைவிரித்தால் பொதுச்சமூகம் எனும் மேகம் என் மீது மலத்தை மட்டுமே பொழியுமென்று..! எங்களை ஏளனமாய் பார்க்கும் பொதுச்சமூகத்தின் கண்கள் நாற்றமெடுக்கும் ஒரு மலக்குவியலைப் போலவே என்னுள் ஒரு கற்பனை உருவை உருவாக்கி வைத்திருந்தேன் .பெரும்பாலும் இது உண்மையும் கூட!அதனாலயே என் சமூகம் நாற்றமெடுக்கும் இந்த பொதுச்சமூகத்திடமிருந்து ஒதுங்கியே வாழ்ந்து வருகிறது. எங்களிடம் பொதுச்சமூகம் காட்டும் பாகுபாடு என்பது ஒரு கருப்பினத்தவரிடம் வெள்ளை வெறியன் காட்டும் பாகுபாட்டை விட ,ஒரு அருந்ததியர் மீது சாதிய வாதிகள் சுமத்திய பீக்கூடையை விட மிகக்கொடியது.அதை ஒவ்வொரு நாளும் நாங்கள் உணர்ந்தாலும் சமீபத்தில் சென்னை புழல் சிறையில் நான் கண்ட   வேதனையினால் இவர்கள் எவ்வளவு பெரிய கொடூரர்கள் என்பதை மேலதிகமா...