வைரவிழா நாயகனுக்கு வாழ்த்து மடல்..
பெரு மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய மகத்தான அரசியலாளர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு...! 2017 ஜூன் 3 தங்களின் 94 அகவையில் 60 ஆண்டு சட்டமன்ற பணி வைர விழா ஏற்பாட்டை கேள்வியுற்று மனமகிழ்வடைகிறேன். தமிழரின் வரலாற்றில் தங்களின் மகத்தான அரசியல் வாழ்வு முக்கனியில் இனிய சாராய் புதைந்து அதி ருசியூட்டுவதாய் இன்றும்,என்றும் இருக்கும். தாங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வதை எண்ணி பேரின்பம் கொள்கிறேன்..! விளிம்பு நிலைச் சமூகமான மாற்றுப் பாலின சமூகத்தின் கொடிய,நுண்ணிய வேதனைகளை கூர் அறி வாற்றலால் உணர்ந்து மாற்றுகள் பல முன் வைத்து மாற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் நீங்கள் ! எங்கள் பாலினத்தின் தற்போதைய சிறு முன்னேற்றத்திலும் பெறும் பங்கு தங்களுடையது என்பதை திநங்கைச் சமூகமான என் சமூகம் நன்கு உணர்ந்திருக்கிறது. `ஒம்போது`,`அலி`,`பொட்டை` என்றெல்லாம் பிறரால் கேவலமாக விளிக்கப்பட்டு கொரூர இழிவு செய்யப்பட்ட என் சமூகத்தை ;மாற்றுப் பாலினத்தோர்`,`திருநங்கையர்` என பெயரிட்டு பல பெரும் மேடைகளிலும் அச்சு,காட்சி ஊடகங்களிலும் இப்பெயரை பிரச்சாரித்து எங்கள் இழி துடைக்க ...