போர் பறவைகள்
வல்லினம்,மெல்லினம்,இடையினத்தில் கீதம் இசைக்கும் பறவைகள் அலரித்துடிக்கின்றன, என்றோ நிகழ்ந்த அந்த கொடிய போரை நினைவூட்டும் வெடி சப்தங்களை கேட்டு !!!!அதில் எழுந்து சூழும் புகையின்நெடியை நுகர்ந்து!!!! ஆபத்து நிலையை உணர்ந்த பறவைகள் கூட்டத்தின் திட்டமிடல் உருவாகிறது.திட்ட உருவாக்கம் காக்கையின் பணி.மலைக்குருவியும்,வயல் கொக்கும்,கடல் புறாவும் முக்கியஸ்தர்கள் என தீர்மானிக்கப்படுகிறது. பருந்து தூது செல்கிறது,உடனே வந்துசேருகிறார்கள் மூன்று முக்கியஸ்தர்கள் சில கிளைகளையும் அடர் இலைகளையும் கொண்ட வேப்பமரத்தினுள்ளே கூட்டம் நிகழ்கிறது தன் சிறிய சிறகுகளை சிலிர்த்தவண்ணம் பேச துவங்குகிறது மலைக்குருவி"அவர்கள் மலைவனத்தை அழிக்கிறார்கள் அங்குள்ள மானுடத்தை கொல்லுகிறார்கள் . மலையை உடைக்க அவர்கள் பயன்படுத்தும் வெடிமருந்து வெடியை விட அவர்கள் கொன்று போட்ட மலைவாழ் மனிதர்களின் பிணத்தின் நீச்சி அதிகமாய் இருக்கிறது!! எங்களால் அங்கு வாழவே முடியவில்லை ஏதாவது செய்யவேண்டும்!!!செய்யவேண்டும் ..!!!"என பட படப்போடு பேசி அமர்ந்தது மலைக்குருவி.அடுத்து தன் சாம்பல் நிற இறக்கையை இரண்டு முறை விசிறி கூட...